ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சான்றுரைப்படுத்தல்: 2026ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சட்டமாக உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்தது දූෂණ විරෝධී (සංශෝධන) පනත් කෙටුම්පතට කථානායක ජගත් වික්රමරත්න මහතා අත්සන් තබයි: 2026 අංක 25 දරන පනත ලෙස නිල වශයෙන් බලාත්මක වෙයි Speaker Jagath Wickramaratne Endorses Anti-Corruption (Amendment) Bill: Officially Enacted as Act No. 25 of 2026
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (19) திங்கட்கிழமை தனது கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாகச் சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, குறித்த சட்டமூலமானது 2026 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டம் என இன்று முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வருகின்றது.
இச்சட்டமூலம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் முதலாம் வாசிப்புக்காகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், எவ்வித வாக்கெடுப்புமின்றி திருத்தங்களுடன் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட சட்டரீதியான, பொருள்விளக்கரீதியான, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதே இந்த புதிய திருத்தச் சட்டத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன், சிங்கள மற்றும் ஆங்கிலப் பிரதிகளுக்கிடையிலான முரண்பாடுகளை நீக்குதல், ஊழல் குற்றங்கள் மீதான முறையான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்தல் சவால்களுக்குத் தீர்வு காண்பது என்பனவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் நிர்வாகப் பணிகளை நவீனமயப்படுத்துவதுடன், மத்திய மின்னணு முறைமையின் வழியே சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறைகளை மேலும் வெளிப்படைத்தன்மையுடன் சீரமைக்கவும் இத்திருத்தங்கள் வழிவகுக்கின்றன. இதன் மூலம் ஊழலுக்கு எதிரான நாட்டின் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்கள்
දූෂණ විරෝධී (සංශෝධන) පනත් කෙටුම්පතට කථානායක ජගත් වික්රමරත්න මහතා අද (19) සිය සහතිකය සටහන් කර තිබේ.
ඒ අනුව, මෙම පනත් කෙටුම්පත 2026 අංක 25 දරන දූෂණ විරෝධී (සංශෝධන) පනත ලෙස අද දින සිට නිල වශයෙන් බලාත්මක වනු ඇත.
අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙනෙවිය විසින් පළමු වර කියවීම සඳහා පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන ලද මෙම පනත් කෙටුම්පත, පසුගියදා පැවති දෙවන වර කියවීමේ විවාදයෙන් අනතුරුව කිසිදු ඡන්ද විමසීමකින් තොරව සංශෝධන සහිතව ඒකමතිකව සම්මත විය.
2023 අංක 9 දරන දූෂණ විරෝධී පනත ක්රියාත්මක කිරීමේදී හඳුනාගත් නීතිමය, අර්ථනිරූපණ, පරිපාලනමය හා තාක්ෂණික ගැටලු නිරාකරණය කිරීම මෙම සංශෝධන පනතේ මූලික අරමුණයි. එසේම, සිංහල සහ ඉංග්රීසි පිටපත් අතර පැවති විෂමතා ඉවත් කිරීම සහ දූෂණ වැරදි සම්බන්ධයෙන් විමර්ශන පැවැත්වීම හා නඩු පැවරීමේදී මතුවූ බාධාවන්ට විසඳුම් ලබාදීම ද මීට ඇතුළත් වේ.
තවද, අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ පරිපාලන කටයුතු වඩාත් කාර්යක්ෂම කිරීම සහ මධ්යම විද්යුත් පද්ධතියක් ඔස්සේ වත්කම් හා බැරකම් ප්රකාශ ඉදිරිපත් කිරීමේ ක්රියාවලිය වඩාත් විනිවිදභාවයකින් යුතුව ශක්තිමත් කිරීමට මෙමඟින් පියවර ගෙන ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / පාර්ලිමේන්තු සහ නීති කටයුතු
Speaker of Parliament Jagath Wickramaratne officially endorsed the certificate on the Anti-Corruption (Amendment) Bill today (19).
Accordingly, the legislation officially enters into force today as the Anti-Corruption (Amendment) Act No. 25 of 2026.
Presented to Parliament for its first reading by Prime Minister Dr. Harini Amarasuriya, the bill was subsequently considered during its second reading debate and passed unanimously with amendments without a division.
The enactment aims to rectify statutory, interpretive, administrative, and technological complexities identified during the operationalization of the Anti-Corruption Act No. 9 of 2023. It resolves linguistic inconsistencies between the Sinhala and English texts, streamlines legal procedures, and addresses systemic impediments faced in the investigation and prosecution of financial crimes and corruption.
Furthermore, the amendment optimizes the administrative mechanisms of the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) and refines the centralized electronic system for submitting declarations of assets and liabilities, thereby strengthening the nation's integrity and governance architecture.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Parliament and Statutory Affairs

Comments