கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை! அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நோயாளர்கள் பெரும் பயன்! කල්මුණේ උතුර මූලික රෝහලේ පැය 24 පුරා CT ස්කෑන් සේවාව! අම්පාර සහ මඩකලපුව දිස්ත්රික්කවල රෝගීන්ට මහත් සහනයක්! 24-Hour CT Scan Service Available at Kalmunai North Base Hospital, Benefiting Patients in Ampara and Batticaloa Districts
அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் (BHKN) 24 மணி நேர CT ஸ்கேன் சேவை தங்குதடையின்றித் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள நோயாளர்களுக்கு விரைவான நோய் கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பல முக்கிய வைத்தியசாலைகளைச் சேர்ந்த நோயாளர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய வைத்தியசாலைகளில் இருந்தும், மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை ஆகிய வைத்தியசாலைகளில் இருந்தும் மாற்றலாகும் நோயாளர்கள் இச்சேவையைப் பெற்றுக்கொள்கின்றனர்.
மாதாந்தம் சுமார் 550 முதல் 600 வரையான நோயாளர்களுக்கு CT ஸ்கேன் பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. 24 மணி நேரமும் இச்சேவை கிடைப்பதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு (ETU) அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு உடனடியாகப் பரிசோதனை செய்து, விரைவான உயிர்காக்கும் சிகிச்சைகளைத் தாமதமின்றி வழங்க முடிகிறது. தரமான, பாதுகாப்பான மற்றும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் கல்முனை ஆதார வைத்தியசாலை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / அம்பாறை மற்றும் சுகாதாரம்
අම්පාර දිස්ත්රික්කයේ, කල්මුණේ උතුර මූලික රෝහල (BHKN) මගින් පැය 24 පුරා ක්රියාත්මක CT ස්කෑන් සේවාවක් අඛණ්ඩව සපයනු ලබයි.
නැගෙනහිර පළාත පුරා වෙසෙන රෝගීන්ට කඩිනමින් රෝග විනිශ්චය සහ නිසි ප්රතිකාර තීරණ ගැනීම සඳහා මෙම සේවාව පුළුල් කර ඇත. මෙහි ප්රතිඵලයක් ලෙස අම්පාර සහ මඩකලපුව දිස්ත්රික්කවල පිහිටි ප්රධාන රෝහල් රැසක රෝගීන්ට මහත් පහසුවක් සැලසී තිබේ. විශේෂයෙන් අම්පාර දිස්ත්රික්කයේ අම්පාර, නින්දවුර්, සම්මන්තුරේ, අක්කරෛපත්තුව, පොතුවිල් සහ තිරුක්කෝවිල් යන රෝහල්වලිනුත්, මඩකලපුව දිස්ත්රික්කයේ කළුවාංචිකුඩි සහ වාළච්චේන යන රෝහල්වලිනුත් මාරුකර එවන රෝගීන් මෙම සේවාව ලබා ගනී.
මසකට රෝගීන් 550 ත් 600 ත් අතර ප්රමාණයකට මෙහිදී CT ස්කෑන් පරීක්ෂණ සිදු කෙරේ. පැය 24 පුරාම සේවාව ක්රියාත්මක වන බැවින්, හදිසි අනතුරු ප්රතිකාර අංශයට (ETU) ඇතුළත් කෙරෙන රෝගීන්ට වහාම පරීක්ෂණ සිදුකර, කඩිනම් ජීවිතාරක්ෂක ප්රතිකාර ප්රමාදයකින් තොරව ලබාදීමට හැකියාව ලැබී ඇත. ගුණාත්මක, සුරක්ෂිත සහ සැමට පහසුවෙන් ලබාගත හැකි සෞඛ්ය සේවාවක් සැපයීම සඳහා කල්මුණේ මූලික රෝහල නිරන්තරයෙන් කැපවී සිටින බව රෝහල් අධ්යක්ෂ වෛද්ය ගුණසිංගම් සුගුණන් මහතා ප්රකාශ කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අම්පාර සහ සෞඛ්ය
The Kalmunai North Base Hospital (BHKN) in the Ampara district provides a continuous 24-hour CT scan service.
This essential diagnostic service has been established to facilitate rapid disease diagnosis and precise treatment decisions for patients throughout the Eastern Province. Patients transferring from numerous key hospitals across the Ampara and Batticaloa districts significantly benefit from this facility. Specifically, it serves patients from Ampara, Nintavur, Sammanthurai, Akkaraipattu, Pottuvil, and Tirukkovil in the Ampara district, as well as Kaluwanchikudy and Valachchenai in the Batticaloa district.
On average, between 550 and 600 CT scan examinations are performed monthly at the hospital. The around-the-clock availability ensures that patients admitted to the Emergency Treatment Unit (ETU) can undergo immediate testing, allowing for rapid, life-saving medical interventions without delay. Hospital Director Dr. Gunasingam Sugunan reaffirmed the hospital's ongoing commitment to delivering quality, safe, and easily accessible healthcare services to all.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Ampara and Healthcare




Comments