பணம் மற்றும் நிதி முறைமை பற்றிய அறிவு சகல பிரஜைகளுக்கும் அவசியம்: கொழும்புப் பங்குச் சந்தையின் 40ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல் මුදල් සහ මූල්ය පද්ධතිය පිළිබඳ දැනුම සෑම පුරවැසියෙකුටම අත්යවශ්යයි: කොළඹ කොටස් හුවමාරුවේ 40 වන සංවත්සර උළෙලේදී අගමැතිනි ආචාර්ය හරිනි අමරසූරිය අවධාරණය කරයි Financial Literacy Must Reach Every Citizen: Prime Minister Dr. Harini Amarasuriya Emphasizes at 40th Anniversary of Colombo Stock Exchange
பணம் மற்றும் நிதி முறைமை பற்றிய அறிவு சகல பிரஜைகளுக்கும் அவசியம்: கொழும்புப் பங்குச் சந்தையின் 40ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்
මුදල් සහ මූල්ය පද්ධතිය පිළිබඳ දැනුම සෑම පුරවැසියෙකුටම අත්යවශ්යයි: කොළඹ කොටස් හුවමාරුවේ 40 වන සංවත්සර උළෙලේදී අගමැතිනි ආචාර්ය හරිනි අමරසූරිය අවධාරණය කරයි
Financial Literacy Must Reach Every Citizen: Prime Minister Dr. Harini Amarasuriya Emphasizes at 40th Anniversary of Colombo Stock Exchange
பணம் மற்றும் நாட்டின் நிதி முறைமை பற்றிய அறிவு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருக்குமாயின், அது பாரியதொரு பிரச்சினையாகும் எனப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள கொழும்புப் பங்குச் சந்தை வளாகத்தில் ஒக்டோபர் 05 ஆம் திகதி நடைபெற்ற கொழும்புப் பங்குச் சந்தையின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
நாட்டின் சகல பிரஜைகளுக்கும் தாம் உழைக்கும் பணத்தைச் சரியான முறையில் நிர்வகிப்பதற்கும், பொறுப்புடன் சேமிப்பதற்கும், நிதி அபாயங்களைப் புரிந்துகொண்டு பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கும் தேவையான அறிவு இருப்பது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், பொதுமக்கள் போலி நிதி மோசடி வலைகளில் சிக்கி ஏமாறாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமானது எனவும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரம்
මුදල් සහ මූල්ය පද්ධතිය පිළිබඳ දැනුම සමාජයේ සීමිත පිරිසකට පමණක් සීමා වී ඇත්නම් එහි බරපතළ ගැටලුවක් පවතින බව අග්රාමාත්ය සහ අධ්යාපන අමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙනෙවිය ප්රකාශ කර තිබේ.
ඔක්තෝබර් 05 වන දින කොළඹ ලෝක වෙළෙඳ මධ්යස්ථානයේ පිහිටි කොළඹ කොටස් හුවමාරු පරිශ්රයේ පැවැති, කොළඹ කොටස් හුවමාරුවේ 40 වන සංවත්සර සැමරුම් උළෙලට ප්රධාන ආරාධිතයා ලෙස එක්වෙමින් අග්රාමාත්යවරිය මේ බව සඳහන් කළාය.
රටේ සෑම පුරවැසියෙකුටම තමන් උපයන මුදල නිවැරදිව කළමනාකරණය කරගැනීමට, වගකීමෙන් යුතුව ඉතිරි කිරීමට, මූල්ය අවදානම් නිසි ලෙස වටහාගෙන ආයෝජන තීරණ ගැනීමට මෙන්ම වංචනික මූල්ය ජාවාරම්වලට හසුනොවී ආරක්ෂා වීමට අවශ්ය දැනුවත්භාවය සහ මූල්ය සාක්ෂරතාව ලබාදීම අත්යවශ්ය කරුණක් බව ඇය වැඩිදුරටත් අවධාරණය කළාය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ආර්ථික සහ මූල්ය පුවත්
Prime Minister and Minister of Education Dr. Harini Amarasuriya stated that if knowledge regarding money and the financial system is confined to merely an exclusive segment of society, it represents a profound fundamental problem.
The Prime Minister voiced these insights while participating as the Chief Guest at the commemorative event held on October 05 at the World Trade Center premises in Colombo, marking the 40th anniversary of the Colombo Stock Exchange (CSE).
She emphasized that it is imperative to empower every citizen across the nation with the essential financial literacy to manage their hard-earned income effectively, cultivate responsible savings, comprehend systemic market risks, and make sound investments. Prime Minister Amarasuriya further underlined the critical necessity of equipping the public with robust awareness to safeguard themselves from fraudulent financial schemes and predatory scams.
KR TV Network - Local News / Economy and Financial Affairs










Comments