Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கல்வியியல் இளமானி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க உடனடி நடவடிக்கை: ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்தத்தின் பின் நடைமுறை எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு අධ්‍යාපනවේදී උපාධිධාරීන් ගුරු සේවයට එක්කර ගැනීමට පියවර: ගුරු සේවා ව්‍යවස්ථාව සංශෝධනයෙන් පසු බඳවා ගැනීම් සිදුකරන බව අගමැතිනි හරිනි අමරසූරිය පවසයි Action to Recruit Bachelor of Education Graduates into Sri Lanka Teachers' Service: Prime Minister Harini Amarasuriya Announces Moves Following Service Minute Revisions


 கல்வியியல் இளமானி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க உடனடி நடவடிக்கை: ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்தத்தின் பின் நடைமுறை எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

අධ්‍යාපනවේදී උපාධිධාරීන් ගුරු සේවයට එක්කර ගැනීමට පියවර: ගුරු සේවා ව්‍යවස්ථාව සංශෝධනයෙන් පසු බඳවා ගැනීම් සිදුකරන බව අගමැතිනි හරිනි අමරසූරිය පවසයි

Action to Recruit Bachelor of Education Graduates into Sri Lanka Teachers' Service: Prime Minister Harini Amarasuriya Announces Moves Following Service Minute Revisions


ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், கல்வியியல் இளமானி (B.Ed.) பட்டதாரிகளை உடனடியாக இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


கல்வியியல் இளமானி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் பணிக்கு அமர்த்துவதில் நீண்டகாலமாக நிலவி வரும் நிர்வாக மற்றும் சட்டச் சிக்கல்களுக்கு நிலையான தீர்வு காணும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.


அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல் விதிமுறைகள் மற்றும் இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளைத் தீர்ப்புகளை முழுமையாகக் கருத்திற் கொண்டே இந்த உத்தேச திருத்தங்கள் தயாரிக்கப்படவுள்ளன. இச்சந்திப்பின் போது, ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் மற்றும் அதனைப் புதிய ஆட்சேர்ப்புகளின் போது நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகள் குறித்து ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாக ஆராயப்பட்டது.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / கல்வி மற்றும் அரச நிர்வாக விவகாரம்


ගුරු සේවා ව්‍යවස්ථාවේ සිදුකිරීමට යෝජිත සංශෝධන කටයුතු අවසන් වූ වහාම, අධ්‍යාපනවේදී (B.Ed.) උපාධිධාරීන් ශ්‍රී ලංකා ගුරු සේවයට කඩිනමින් බඳවා ගැනීමට පියවර ගන්නා බව අග්‍රාමාත්‍ය සහ අධ්‍යාපන අමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙනෙවිය ප්‍රකාශ කර තිබේ.


අධ්‍යාපනවේදී උපාධිධාරීන් ගුරු සේවයට බඳවා ගැනීමේදී පවතින ගැටලුවලට කඩිනම් සහ තිරසර විසඳුම් ලබාදීම අරමුණු කරගනිමින් යෝජිත සංශෝධන සම්බන්ධයෙන්, ගුරු හා විදුහල්පති වෘත්තීය සමිති නියෝජිතයන් සමඟ අග්‍රාමාත්‍ය කාර්යාලයේ පැවති විශේෂ සාකච්ඡාවකදී අග්‍රාමාත්‍යවරිය මේ බව සඳහන් කළාය.


රාජ්‍ය සේවා කොමිෂන් සභාව විසින් නිකුත් කර ඇති මාර්ගෝපදේශ සහ ශ්‍රේෂ්ඨාධිකරණය විසින් ලබාදී ඇති අදාළ නඩු තීන්දු පිළිබඳව දැඩි අවධානය යොමු කරමින් මෙම යෝජිත සංශෝධන සකස් කිරීමට නියමිතය. මෙම සාකච්ඡාවේදී ගුරු සේවා ව්‍යවස්ථාවට එක්කිරීමට අපේක්ෂිත වෙනස්කම් සහ එම බඳවාගැනීම් ක්‍රමවේද ක්‍රියාත්මක කරන ආකාරය පිළිබඳව වෘත්තීය සමිති නියෝජිතයන් සමඟ දීර්ඝ වශයෙන් අදහස් හුවමාරු කරගන්නා ලදී.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධ්‍යාපන සහ රාජ්‍ය පරිපාලන පුවත්


Prime Minister and Minister of Education Dr. Harini Amarasuriya stated that immediate arrangements will be initiated to absorb Bachelor of Education (B.Ed.) graduates into the Sri Lanka Teachers' Service once the proposed amendments to the Teachers' Service Minute are finalized.


The Prime Minister made these remarks during a consultative meeting convened with representatives of teachers' and principals' trade unions to address systemic bottlenecks surrounding the appointment of B.Ed. graduates into the national teaching cadre.


The proposed revisions are to be drafted in strict alignment with guidelines stipulated by the Public Service Commission and directives issued in relevant Supreme Court rulings. The discussion comprehensively reviewed the structural amendments earmarked for the service minute alongside practical modalities for executing recruitment procedures.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - Local News / Education and Public Administration Affairs

Comments