Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்: பயிலுநர்களுக்கான ஐந்தாவது நாள் பயிற்சி வெற்றிகரமாக முன்னெடுப்பு! අම්පාර දිස්ත්‍රික් ජීවිතාරක්ෂක කණ්ඩායමේ දෙවන අදියරේ පිහිනුම් පුහුණුව තීව්‍ර වේ: පුහුණුවන්නන් සඳහා පස්වන දින පුහුණුව සාර්ථකව පවත්වයි! Ampara District Life-Saving Team's Phase II swimming training intensifies: Fifth day of rigorous training conducted for trainees!

 






அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்: பயிலுநர்களுக்கான ஐந்தாவது நாள் பயிற்சி வெற்றிகரமாக முன்னெடுப்பு!

අම්පාර දිස්ත්‍රික් ජීවිතාරක්ෂක කණ්ඩායමේ දෙවන අදියරේ පිහිනුම් පුහුණුව තීව්‍ර වේ: පුහුණුවන්නන් සඳහා පස්වන දින පුහුණුව සාර්ථකව පවත්වයි!

 Ampara District Life-Saving Team's Phase II swimming training intensifies: Fifth day of rigorous training conducted for trainees!


அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ், ஐந்தாவது நாள் நீச்சல் மற்றும் மீட்புப் பயிற்சி சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு வளாக நீச்சல் தடாகத்தில் நேற்று (03) நடைபெற்றது.


அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பயிலுநர்கள் கலந்துகொண்ட இப் பயிற்சியில், ஏற்கனவே பயிற்சி பெற்ற எஸ்.என். தில்சாத் பர்வீஸ், எஸ்.ஐ.எம். பிறோஸ், எம்.டி. பைசல் முகம்மட், எம்.டி.எம். இஸ்காத் மற்றும் ஹாகிம் ஆகியோரினால் நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


இதன்போது நீரில் பாதுகாப்பாகச் செயற்படுதல், நீரில் மிதத்தல், சுவாசக் கட்டுப்பாடு, அடிப்படை நீச்சல் நுட்பங்கள் மற்றும் அவசரநிலைகளில் மேற்கொள்ள வேண்டிய உயிர்காக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பயிலுநர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.


அம்பாறை மாவட்டத்தில் கடல், ஆறுகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகம் காணப்படும் நிலையில், நீர்விபத்துக்களைத் தடுப்பதற்கும் அவசரநிலைகளில் திறம்படச் செயற்படக்கூடிய பயிற்சி பெற்ற குழுவை உருவாக்குவதற்கும் இத்தகைய பயிற்சிகள் மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பிராந்தியச் செய்தி


අම්පාර දිස්ත්‍‍රික් ආපදා කළමනාකරණ නියෝජ්‍ය අධ්‍යක්ෂ එම්.ඒ.සී.එම්. රියාස්ගේ සෘජු අධීක්ෂණය යටතේ ක්‍රියාත්මක වන අම්පාර දිස්ත්‍රික් ජීවිතාරක්ෂක සහ හදිසි මුදවා ගැනීමේ කණ්ඩායමේ දෙවන අදියරේ පුහුණු වැඩසටහන යටතේ පස්වන දින පිහිනුම් සහ මුදවා ගැනීමේ පුහුණුව සමන්තුර ජනාධිපති ක්‍රීඩා සංකීර්ණයේ පිහිනුම් තටාකයේදී ඊයේ (03) පවත්වන ලදී.


අම්පාර දිස්ත්‍රික්කයේ විවිਧ ප්‍රදේශවලින් තෝරාගත් පුහුණුවන්නන් සහභාගී වූ මෙම පුහුණුව සඳහා, මීට පෙර පුහුණුව ලැබූ එස්.එන්. දිල්ෂාඩ් පර්වීස්, එස්.අයි.එම්. ෆිරෝස්, එම්.ඩී. ෆයිසාල් මුහම්මද්, එම්.ඩී.එම්. ඉස්කාත් සහ හකීම් යන අය විසින් ප්‍රායෝගික පුහුණු ලබා දෙන ලදී.


මෙහිදී ජලය තුළ ආරක්ෂාකාරීව කටයුතු කිරීම, ජලයේ පාවීම, හුස්ම පාලනය කිරීම, මූලික පිහිනුම් ක්‍රම සහ හදිසි අවස්ථාවන්හිදී ක්‍රියාත්මක විය යුතු ජීවිතාරක්ෂක ක්‍රියාමාර්ග සම්බන්ධයෙන් පුහුණුවන්නන්ට පුහුණුව ලබා දෙන ලදී.


අම්පාර දිස්ත්‍රික්කයේ මුහුදු, ගංගා සහ වැව් වැනි ජල මූලාශ්‍ර බහුලව පවතින පසුබිමක, ජල අනතුරු වළක්වා ගැනීමට සහ හදිසි අවස්ථාවන්හිදී දක්ෂ ලෙස ක්‍රියා කළ හැකි පුහුණු ජීවිතාරක්ෂක කණ්ඩායමක් බිහි කිරීමට මෙම පුහුණු වැඩසටහන ඉමහත් දායකත්වයක් සපයයි.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  | කලාපීය පුවත්


The fifth day of swimming and rescue training for selected trainees under the Phase II program of the Ampara District Life-Saving and Emergency Rescue Team was successfully held yesterday (03) at the swimming pool of the Sammanthurai President's Sports Complex, under the direct supervision of Ampara District Deputy Director of Disaster Management M.A.C.M. Riyas.


Trainees selected from various parts of the Ampara District participated in the sessions, receiving hands-on practical training from previously certified members S.N. Dilshad Parveez, S.I.M. Firoz, M.D. Faisal Muhammed, M.D.M. Iskath, and Hakeem.


During the training, participants were instructed on crucial safety measures in water, floating techniques, breath control, basic swimming strokes, and life-saving protocols to be executed during aquatic emergencies.


Given the abundance of water bodies such as the sea, rivers, and reservoirs across the Ampara District, such ongoing training initiatives are vital for preventing water-related accidents and building a highly competent response team for emergency rescues.


KRTV Network | Regional News

Comments