காரைதீவு மாணவி டிவானுஜாவுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம்: மருத்துவப் பீடத்தின் முதலாம் கட்டப் பரீட்சையில் சாதனை නැගෙනහිර විශ්වවිද්යාලයේ රන් පදක්කම කාරෙයිතිව් සිසුවිය ඩිවානුජාට: වෛද්ය පීඨයේ පළමු අදියර විභාගයේදී විශිෂ්ට දක්ෂතා Eastern University Gold Medal Awarded to Karaitivu Student Divanuja: Excels in First MBBS Examination
காரைதீவு மாணவி டிவானுஜாவுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம்: மருத்துவப் பீடத்தின் முதலாம் கட்டப் பரீட்சையில் சாதனை
නැගෙනහිර විශ්වවිද්යාලයේ රන් පදක්කම කාරෙයිතිව් සිසුවිය ඩිවානුජාට: වෛද්ය පීඨයේ පළමු අදියර විභාගයේදී විශිෂ්ට දක්ෂතා
Eastern University Gold Medal Awarded to Karaitivu Student Divanuja: Excels in First MBBS Examination
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தினால் நடாத்தப்பட்ட முதலாம் கட்ட MBBS பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதற்காக, காரைதீவைச் சேர்ந்த சகாதேவராஜா டிவானுஜா என்ற மாணவி செல்லத்தங்கம் தம்பிப்பிள்ளை நினைவு தங்கப் பதக்கம் - 2026 விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாகக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் ரி. வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வின் போது, பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. மௌனகுருவிடமிருந்து மாணவி டிவானுஜா இந்தத் தங்கப் பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார்.
காரைதீவு விபுலானந்த வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. ரி. சகாதேவராஜா மற்றும் திருமதி நேசரஞ்சினி தம்பதியரின் இரண்டாவது புதல்வியான டிவானுஜா, மருத்துவக் கல்வித் துறையில் புரிந்த இந்த உயர் சாதனை அப்பகுதி மக்களுக்கும் கல்விச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / கல்வி மற்றும் பல்கலைக்கழக விவகாரம்
නැගෙනහිර විශ්වවිද්යාලයේ සෞඛ්ය සත්කාරක විද්යා පීඨය මඟින් පවත්වන ලද පළමු අදියර එම්.බී.බී.එස්. (First MBBS) විභාගයෙන් විශිෂ්ටතම ප්රතිඵල ලබාගැනීම වෙනුවෙන් කාරෙයිතිව් ප්රදේශයේ පදිංචි සහදේවරාජා ඩිවානුජා ශිෂ්යාව "සෙල්ලතංගම් තම්බිපිල්ලෙයි අනුස්මරණ රන් පදක්කම - 2026" සම්මානයෙන් පිදුම් ලබා ඇත.
මඩකලපුව පිල්ලෙයාරඩි හි පිහිටි සෞඛ්ය සත්කාරක විද්යා පීඨයේ මහාචාර්ය ටී. වරගුණම් අනුස්මරණ ශ්රවණාගාරයේදී පැවැති නැගෙනහිර විශ්වවිද්යාලයේ 30 වන මහා උපාධි ප්රදානෝත්සවයේ පළමු සැසියේදී, විශ්වවිද්යාලයේ කුලපති ජ්යෙෂ්ඨ මහාචාර්ය සි. මවුනගුරු මහතා අතින් ඇය මෙම ගෞරවනීය රන් පදක්කම ලබාගත්තාය.
කාරෙයිතිව් විපුලානන්ද වීදියේ පදිංචි විශ්රාමික සහකාර අධ්යාපන අධ්යක්ෂ වී. ටී. සහදේවරාජා සහ නේසරංජනී යුවළගේ දෙවන දියණිය වන ඩිවානුජා වෛද්ය අධ්යාපන ක්ෂේත්රයේ දැක්වූ මෙම විශිෂ්ට කුසලතාව ප්රදේශයට මහත් ගෞරවයක් ගෙනදී ඇති අතර ඇය වෙත විවිධ පාර්ශ්වයන්ගෙන් උණුසුම් සුබපැතුම් එක්වෙමින් පවතී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධ්යාපන සහ විශ්වවිද්යාල පුවත්
Divanuja Sahadevaraja, a dedicated medical student hailing from Karaitivu, has been conferred the prestigious "Sellathangam Thambipillai Memorial Gold Medal - 2026" for demonstrating academic excellence in the First Examination for Medical Degrees (First MBBS) at Eastern University, Sri Lanka.
The distinguished honour was officially presented by the Chancellor of Eastern University, Senior Professor S. Maunaguru, during the inaugural session of the 30th General Convocation held at the Professor T. Varagunam Memorial Hall of the Faculty of Health-Care Sciences in Pillaiyarady, Batticaloa.
Divanuja is the second daughter of retired Assistant Director of Education V. T. Sahadevaraja and Mrs. Nesaranjini, residing on Vipulananda Road, Karaitivu. Her exemplary scholastic milestone within the medical sciences domain has brought immense pride to her home region, drawing widespread accolades and congratulatory messages across academic and civic communities.
KR TV Network - Local News / Education and University Affairs

Comments