Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் ஆசிரிய பயிலுனர்களுக்கான சுற்றாடல் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு අඩ්ඩාලච්චේන ජාතික අධ්‍යාපන විද්‍යාපීඨයේ ගුරු අභ්‍යාසලාභීන් සඳහා පරිසර ආරක්ෂණ දැනුවත් කිරීමේ සම්මන්ත්‍රණයක් Environmental Protection Awareness Seminar for Teacher Trainees Held at Addalaichenai National College of Education







ஆசிரிய பயிலுனர்களிடையே சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் (29) வெற்றிகரமாக நடைபெற்றது.


அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ. அஹமட் அப்கர் அவர்களின் வழிகாட்டலில், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர் அவர்களின் ஏற்பாட்டில், பிரதேச செயலகத்தின் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எ.சி. சஸ்னா, எம்.பீ. பிர்தௌசியா, ஏ.ஆர்.எப். சாஜிதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. கல்விக் கல்லூரியின் நிதி மற்றும் நிர்வாகத்திற்கான உப பீடாதிபதி எம்.டி. முஸம்மில் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


எதிர்கால சமூகத்தை வழிநடத்தும் ஆசிரியர்களாக உருவாகிவரும் பயிலுனர்களிடையே சுற்றாடல் பொறுப்புணர்வை வளர்த்து, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் செயற்பாடுகளில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமாக அமைந்தது.


இக்கருத்தரங்கில் முதன்மை வளவாளராக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர் கே. குரைசியா கலந்துகொண்டு, இன்றைய காலகட்டத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டின் அவசியம் குறித்தும், அதனைத் தமது நாளாந்த வாழ்விலும் கற்பித்தலிலும் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் விரிவான விளக்கங்களை வழங்கினார்.


இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பெருமளவிலான ஆசிரிய பயிலுனர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


(எம்.ஜே.எம். சஜீத்)


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / கல்வி, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் அட்டாளைச்சேனை


ගුරු අභ්‍යාසලාභීන් අතර පරිසර ආරක්ෂණය සහ පරිසර උන්නතිය පිළිබඳව දැනුවත්භාවය ඇති කිරීමේ අරමුණින් සංවිධානය කරන ලද විශේෂ දැනුවත් කිරීමේ වැඩමුළුවක් අඩ්ඩාලච්චේන ජාතික අධ්‍යාපන විද්‍යාපීඨයේදී (29) සාර්ථකව පැවැත්විණි.


අඩ්ඩාලච්චේන ප්‍රාදේශීය ලේකම් ඒ.සී. අහමඩ් අබ්ගර් මහතාගේ මඟපෙන්වීම යටතේ, සහකාර සැලසුම් අධ්‍යක්ෂ එම්. ජෆර් මහතාගේ සංවිධානයෙන් සහ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ පරිසර සංවර්ධන නිලධාරිනියන් වන ඒ.සී. සස්නා, එම්.පී. ෆිර්දෞසියා, ඒ.ආර්.එෆ්. සාජිධා යන මහත්මීන්ගේ සම්බන්ධීකරණයෙන් මෙම වැඩමුළුව ක්‍රියාත්මක විය. විද්‍යාපීඨයේ මුදල් හා පරිපාලන නියෝජ්‍ය පීඨාධිපති එම්.ටී. මුසම්මිල් මහතාගේ ප්‍රධානත්වයෙන් මෙම වැඩසටහන සංවිධානය කර තිබුණි.


අනාගත පරපුර හැඩගස්වන ගුරුවරුන් ලෙස ඉදිරියේදී සමාජයට පිවිසෙන ගුරු අභ්‍යාසලාභීන් තුළ පරිසරය පිළිබඳ වගකීම සහ ආදරය වර්ධනය කිරීමත්, පරිසර සංරක්ෂණ ක්‍රියාවලීන් සඳහා ඔවුන්ගේ දායකත්වය දිරිමත් කිරීමත් මෙහි ප්‍රධාන අරමුණ විය.


මෙහි සම්පත්දායිකාව ලෙස මධ්‍යම පරිසර අධිකාරියේ නිලධාරිනී කේ. කුරෛසියා මහත්මිය සහභාගී වූ අතර, ඇය විසින් පරිසර ආරක්ෂණය සහ එහි වැදගත්කම මෙන්ම එය ප්‍රායෝගිකව ක්‍රියාත්මක කළ යුතු ආකාරය පිළිබඳව දීර්ඝ හා පැහැදිලි දේශනයක් පවත්වන ලදී.


මෙම අවස්ථාවට විද්‍යාපීඨයේ කථිකාචාර්යවරුන්, නිලධාරීන් සහ විශාල ගුරු අභ්‍යාසලාභීන් පිරිසක් සහභාගී වූහ.


(එම්.ජේ.එම්. සජීත්)


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අධ්‍යාපන, පරිසර සංරක්ෂණය සහ අඩ්ඩාලච්චේන


With the aim of fostering environmental consciousness and stewardship among future educators, an environmental protection and development awareness workshop was successfully held at the Addalaichenai National College of Education (29).


Conducted under the guidance of Addalaichenai Divisional Secretary A.C. Ahmed Abgar, the event was organized by Assistant Planning Director M. Jaffer and coordinated by Environmental Development Officers A.C. Sasna, M.P. Firdousia, and A.R.F. Sajitha from the Divisional Secretariat. The workshop was presided over by M.T. Muzammil, the Vice-Principal of Finance and Administration of the College.


The primary objective of this seminar was to cultivate environmental responsibility among teacher trainees, who will lead and educate future generations, and to encourage their active participation in environmental preservation and enhancement activities.


Central Environmental Authority Officer K. Quraisiya served as the key resource person, delivering comprehensive insights into the significance of environmental protection and sustainable development, and how these principles can be integrated into daily life and classroom teaching.


The workshop was well-attended by the college’s lecturers, staff, and a large number of eager teacher trainees.


(M.J.M. Sajeeth)


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Education, Environmental Conservation and Addalaichenai

Comments