Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தேசிய ஷூரா சபையின் ஸ்தாபக நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முன்னாள் இமாமுமான மௌலவி தஸ்லீம் காலமானார் ජාතික ෂුරා කවුන්සිලයේ ආරම්භක විධායක සභික සහ කොළඹ මහ පල්ලියේ හිටපු ඉමාම් මවුලවි තස්ලීම් අභාවප්‍රාප්ත වෙයි Founding Executive Member of National Shoora Council and Former Imam of Colombo Grand Mosque Moulavi Tasleem Passes Away


தேசிய ஷூரா சபையின் (National Shoora Council) முதலாவது நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், அதன் பொதுச்சபை உறுப்பினரும், சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞரும், மதிப்பிற்குரிய ஆசிரியரும், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முன்னாள் இமாமுமான மௌலவி தஸ்லீம் இன்று (30) வெள்ளிக்கிழமை காலமானார்.


(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், அவனிடமே நாம் மீளக்கூடியவர்களாக இருக்கின்றோம்).


கள்எலியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, கொழும்பு மட்டக்குளியை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டிருந்த மர்ஹூம் மௌலவி தஸ்லீம், இலங்கை முஸ்லிம் சமூகத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடனும் மார்க்கப் பற்றுடனும் பல்வேறு பிரசித்தி பெற்ற பள்ளிவாசல்களில் இமாமாகவும் இஸ்லாமியக் கல்வி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.


அவர் ஆற்றிய முக்கிய பணிகளுள் குறிப்பிடத்தக்கவை:


கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முன்னாள் இமாம்


மாதாமொட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல்


பாணந்துறை வத்தல்பொல பள்ளிவாசல்


குருநாகல் மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல்


தேசிய ஷூரா சபை (National Shoora Council) மற்றும் ஷரீஆ சபை (Shareeah Council) உள்ளிட்ட முன்னணி இஸ்லாமிய நிறுவனங்கள்.


குறிப்பாக, தேசிய ஷூரா சபையின் ஆரம்பகால நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், அதன் பல்வேறு கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர் செயலாற்றினார். தேசிய ஷூரா சபை தொடர்பான அறிமுகக் கலந்துரையாடல்கள் நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டபோது, செயற்குழு மற்றும் செயலகக் குழு உறுப்பினர்களுடன் நேரடியாகக் களத்திற்குச் சென்று, சபையை உரமூட்டி வளர்ப்பதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கினார். கிண்ணியா, கல்முனை, சியம்பளாகஸ்கொடுவ உள்ளிட்ட பல்வேறு தூரப் பிரதேசங்களுக்கும் அவர் நேரடியாகச் சென்று ஆற்றிய பணிகள் இன்றும் நன்றியுணர்வுடன் நினைவுகூரப்படுகின்றன.


அத்துடன், கலாநிதி ஸைபுல் இஸ்லாத்தின் தலைமையில் இயங்கிய தேசிய ஷூரா சபையின் சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான உபகுழுவின் செயல்திட்டங்களிலும் அவர் முன்னின்று உழைத்தார். மௌலவி தஸ்லீம் அவர்களை ஷூரா சபையுடன் இணைப்பதிலும், அவரது காத்திரமான பங்களிப்பை அமைப்பிற்குப் பெற்றுத் தருவதிலும் அவரது ஆப்த நண்பர் மௌலவி ஸியாத் காத்திரமான பங்கை வகித்திருந்தார்.


நிறைவேற்றுக் குழுக் கூட்டங்கள் இடம்பெறும் போதெல்லாம் தனது இல்லத்தில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளை உறுப்பினர்களுக்காக அன்போடு எடுத்து வரும் நற்பண்பைக் கொண்டிருந்த அவர், எப்போதும் மலர்ந்த முகத்துடனும் உயர் பண்பாட்டுடனும் பழகி அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டார்.


அவ்வப்போது நகைச்சுவை உணர்வுடனும் விவேகத்துடனும் உரையாடும் வழக்கம் கொண்ட அவரிடம் எவ்வித கொள்கைப் பிடிவாதங்களும் இருக்கவில்லை என்பதுடன், சகல சிந்தனைப் பள்ளிகளையும் சேர்ந்தவர்களுடன் மனம்திறந்து பழகும் பரந்த மனப்பான்மை அவரது தனித்துவமான சிறப்புப் பண்பாக மிளிர்ந்தது.


இஸ்லாமியக் கல்விப் பரவலாக்கம், மார்க்க வழிகாட்டல் மற்றும் மக்கள் சமூகப் பணிகளில் மௌலவி தஸ்லீம் ஆற்றிய உன்னதமான பங்களிப்புகளை வல்ல அல்லாஹ் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அவரது தவறுகளை மன்னித்து, அளவற்ற அருளைப் பொழிந்து, தனது மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக.


அன்னாரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், மாணவர்கள் மற்றும் உலமாக்கள் அனைவருக்கும் இப்பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் அழகிய பொறுமையையும் மனவலிமையையும் இறைவன் வழங்கப் பிரார்த்திப்பதுடன், அன்னாரின் மறுமை நல்வாழ்விற்காகப் பிரார்த்தனைகளில் (துஆக்களில்) ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / மரண அறிவித்தல், மார்க்க அறிஞர்கள் மற்றும் தேசிய ஷூரா சபை


ජාතික ෂුරා කවුන්සිලයේ (National Shoora Council) ප්‍රථම විධායක සභිකයෙකු, එහි මහා සභා සාමාජිකයෙකු, ප්‍රවීණ ඉස්ලාමීය විද්වතෙකු, ගුරුවරයෙකු මෙන්ම කොළඹ මහ පල්ලියේ (Colombo Grand Mosque) හිටපු ප්‍රධාන ඉමාම්වරයෙකු වූ මවුලවි තස්ලීම් මහතා අද (30) සිකුරාදා දින අභාවප්‍රාප්ත විය.


කල්එළිය ප්‍රදේශයේ උපත ලබා කොළඹ මට්ටක්කුලිය ප්‍රදේශයේ පදිංචිව සිටි ඒ මහතා, මුස්ලිම් ප්‍රජාව වෙනුවෙන් මහත් කැපවීමකින් සහ ආගමික භක්තියකින් යුතුව ප්‍රධාන මුස්ලිම් දේවස්ථාන රැසක ඉමාම්වරයෙකු මෙන්ම ගුරුවරයෙකු ලෙස දීර්ඝ කාලයක් සේවය කර ඇත.


ඒ මහතාගේ සුවිශේෂී සේවාවන් අතර:


කොළඹ මහ පල්ලියේ (Grand Mosque) හිටපු ඉමාම් ධුරය


මාදමොට්ටිය ජුම්ආ පල්ලිය


පානදුර වත්තල්පොල පල්ලිය


කුරුණෑගල මල්ලවපිටිය ජුම්ආ පල්ලිය


ජාතික ෂුරා කවුන්සිලය (National Shoora Council) සහ ශරීආ කවුන්සිලය (Shareeah Council) ඇතුළු ප්‍රමුඛ ඉස්ලාමීය ආයතන රැසක් වේ.


විශේෂයෙන්ම ජාතික ෂුරා කවුන්සිලයේ ආරම්භක විධායක සභිකයෙකු ලෙස කටයුතු කළ සමයේ එහි ව්‍යාපෘති සාර්ථක කරගැනීම උදෙසා මහත් කැපවීමෙන් ක්‍රියා කළ ඒ මහතා, කවුන්සිලය පිළිබඳ හැඳින්වීමේ වැඩසටහන් රට පුරා ක්‍රියාත්මක වන විට කින්නියා, කල්මුනේ, සියඹලාගස්කොටුව ඇතුළු දුර බැහැර ප්‍රදේශ රැසකට පෞද්ගලිකවම ගමන් කරමින් සංවිධානය ශක්තිමත් කිරීමට ඉමහත් ශ්‍රමයක් වැය කළේය.


ආචාර්ය සයිෆුල් ඉස්ලාම් මහතාගේ ප්‍රධානත්වයෙන් යුත් ජාතික ෂුරා කවුන්සිලයේ සාමය සහ සහජීවනය පිළිබඳ අනුකමිටු වැඩසටහන් සඳහා ද සක්‍රීයව දායක වූ ඒ මහතා, ෂුරා කවුන්සිලය වෙත සම්බන්ධ කරගැනීමෙහිලා ඔහුගේ සමීපතම මිතුරෙකු වූ මවුලවි සියාත් මහතා ප්‍රධාන කාර්යභාරයක් ඉටුකර තිබුණි.


විධායක කමිටු රැස්වීම් පැවැත්වෙන අවස්ථාවලදී සිය නිවසේ පිළියෙළ කළ ආහාර පාන රැගෙන විත් සාමාජිකයින්ට පිරිනැමීමේ උතුම් පුරුද්දක් පැවති ඒ මහතා, සැමවිටම සිනහමුසු මුහුණින් යුතුව අතිශය විනයගරුකව කටයුතු කරමින් කාගේත් ආදරය දිනා සිටියේය.


කිසිදු අන්තගාමී මතයක හෝ ප්‍රතිපත්තිමය මුරණ්ඩුභාවයක නොසිටි ඒ මහතා, සියලු මත දරන්නන් සහ විවිධ චින්තන ප්‍රවාහයන් නියෝජනය කරන සියලුදෙනා සමඟම විවෘත මනසකින් හා මිත්‍රශීලීව කටයුතු කිරීම ඔහුගේ සුවිශේෂීම ගුණාංගය විය.


ඉස්ලාමීය අධ්‍යාපනය, ආගමික මඟපෙන්වීම සහ ජාතික සාමාජීය මෙහෙවර වෙනුවෙන් මවුලවි තස්ලීම් මහතා ඉටුකළ සේවාවන් සමස්ත ප්‍රජාවගේම ගෞරවයට පාත්‍ර වන අතර, ඒ මහතාගේ අභාවයෙන් ශෝකයට පත් පවුලේ සාමාජිකයින්, ඥාතීන්, සිසුන් සහ සහෝදර ප්‍රජාව වෙත බලවත් ශෝකය පළකර සිටිමු.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / මරණ දැන්වීම්, ආගමික විද්වතුන් සහ ජාතික ෂුරා කවුන්සිලය


A distinguished Islamic scholar, respected religious teacher, former Imam of the historic Colombo Grand Mosque, and founding Executive Committee member of the National Shoora Council (NSC), Moulavi Tasleem, passed away today (30) Friday.


(Inna lillahi wa inna ilayhi raji'un - Indeed, to Allah we belong, and to Him we shall return).


Originally born in Kal-eliya and residing in Mattakkuliya, Colombo, Marhoom Moulavi Tasleem dedicated his life to community welfare, moral education, and religious leadership across several major Islamic institutions and mosques, including:


Former Imam at the Colombo Grand Mosque


Madamottya Jummah Mosque


Wattalpola Mosque, Panadura


Mallawapitiya Jummah Mosque, Kurunegala


Leading Islamic bodies including the National Shoora Council and the Shareeah Council.


During his formative tenure as an Executive Committee member of the National Shoora Council, he demonstrated profound dedication to establishing and propagating the organization's mission across Sri Lanka. He traveled extensively alongside executive delegations to regional chapters in Kinniya, Kalmunai, and Siyambalagaskotuwa, playing a vital role in institutional growth and community mobilization.


He contributed significantly to the Peace and Coexistence sub-committee under the leadership of Dr. Saif-ul-Islam. His transition and integration into the National Shoora Council were largely facilitated by his close associate, Moulavi Ziyad.


Colleagues fondly remember his warmth, humility, and thoughtful gesture of bringing homemade refreshments for attendees during lengthy executive deliberations. Known for his cheerful countenance and gentle wit, he was universally respected for his intellectual openness, completely free from dogmatic rigidity and always willing to engage constructively with scholars and individuals across all schools of thought.


His lifelong services to Islamic scholarship, inter-communal goodwill, and educational guidance remain an enduring legacy. We pray that Almighty Allah forgives his shortcomings, envelops him in boundless mercy, and grants him the highest abode in Jannatul Firdaus, while bestowing patience and fortitude upon his bereaved family, students, and community.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Obituary, Islamic Scholars and National Shoora Council

Comments