Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த G7 நாடுகள் அவசர முடிவு: 100 மில்லியன் பீப்பாய் அவசரகால எண்ணெய் கையிருப்பு விடுவிப்பு ඉන්ධන මිල පාලනයට G7 රටවලින් හදිසි තීරණයක්: හදිසි සංචිතවලින් තෙල් බැරල් මිලියන 100 ක් වෙළඳපොළට මුදාහරියි G7 Nations Take Emergency Action on Soaring Fuel Prices: To Release 100 Million Barrels of Oil and Diesel Reserves

 


எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த G7 நாடுகள் அவசர முடிவு: 100 மில்லியன் பீப்பாய் அவசரகால எண்ணெய் கையிருப்பு விடுவிப்பு

ඉන්ධන මිල පාලනයට G7 රටවලින් හදිසි තීරණයක්: හදිසි සංචිතවලින් තෙල් බැරල් මිලියන 100 ක් වෙළඳපොළට මුදාහරියි

G7 Nations Take Emergency Action on Soaring Fuel Prices: To Release 100 Million Barrels of Oil and Diesel Reserves


உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வரலாறு காணாத வகையில் தொடர்ச்சியாக உயர்வடைந்து வரும் நிலையில், அதனை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் G7 நாடுகள் தமது அவசரகால கையிருப்பிலிருந்து சுமார் 100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட டீசலைச் சர்வதேச சந்தைக்கு விடுவிக்க உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளன.


தற்போது G7 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற தலைவர்களின் அவசர காணொலி மாநாட்டிலேயே இத்தீர்மானம் ஒருமனதாக எட்டப்பட்டது. முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில், ஐரோப்பிய நாடுகள் தங்களது அவசரகால டீசல் இருப்புகளை உடனடியாகச் சந்தைக்கு விடுக்க வேண்டும் என விடுக்கப்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.


எட்டப்பட்ட கூட்டு முடிவின்படி, அடுத்த நான்கு மாத காலப்பகுதிக்குள் இந்த 100 மில்லியன் பீப்பாய் எரிபொருள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளதுடன், முதல் 20 நாட்களிலேயே கணிசமான அளவு டீசல் முன்னுரிமை அடிப்படையில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையையும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) நேரடியாக ஒருங்கிணைக்கவுள்ளது. மேலும், உறுப்பு நாடுகளுக்கிடையே எரிபொருள் மற்றும் எரிசக்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கு எவ்விதப் புதிய தடைகளையும் விதிக்க மாட்டோம் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம் சர்வதேச சந்தையில் நிலவும் விநியோக நெருக்கடிகளைத் தளர்த்தி, பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேசச் செய்தி / உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விவகாரம்


ගෝලීය වශයෙන් පෙට්‍රල් සහ විශේෂයෙන්ම ඩීසල් මිල සීඝ්‍රයෙන් ඉහළ යාම හමුවේ ඇති වී තිබෙන දැඩි පීඩනය පාලනය කිරීම සඳහා, ජී7 (G7) ප්‍රමුඛ කාර්මික රටවල් සිය හදිසි සංචිතවලින් බොරතෙල් සහ පිරිපහදු කළ ඩීසල් බැරල් මිලියන 100 ක් ජාත්‍යන්තර වෙළඳපොළට මුදාහැරීමට ඒකමතිකව එකඟ වී තිබේ.


ජී7 කණ්ඩායමේ වත්මන් මුලසුන හොබවන ප්‍රංශයේ ජනාධිපති එමානුවෙල් මැක්‍රොන්ගේ ප්‍රධානත්වයෙන් පැවැති ජී7 නායකයින්ගේ හදිසි වීඩියෝ සාකච්ඡාවකදී මෙම තීරණයට එළඹ ඇත. ඊට පෙර අමෙරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්‍රම්ප් සහ ප්‍රංශ ජනාධිපති එමානුවෙල් මැක්‍රොන් අතර පැවති දුරකථන සංවාදයේදී යුරෝපා රටවල් සිය හදිසි ඩීසල් සංචිත වෙළඳපොළට මුදාහැරිය යුතු බවට කළ දැඩි බලපෑමෙන් අනතුරුව මෙම ඒකාබද්ධ ක්‍රියාමාර්ගය තහවුරු විය.


එම එකඟතාවයට අනුව, ඉදිරි මාස හතරක කාලය තුළ මෙම තෙල් බැරල් මිලියන 100 ක් ක්‍රමානුකූලව මුදාහැරීමට නියමිත අතර, එහි පළමු දින 20 ඇතුළත සැලකිය යුතු ඩීසල් ප්‍රමාණයක් වෙළඳපොළ වෙත නිකුත් කිරීමට ප්‍රමුඛත්වය ලබාදෙනු ඇත. මෙම සමස්ත ක්‍රියාවලිය ජාත්‍යන්තර බලශක්ති ඒජන්සිය (IEA) විසින් මෙහෙයවනු ලබයි. තවද, ජී7 රටවල් අතර ඉන්ධන හෝ බලශක්ති නිෂ්පාදන අපනයනය සඳහා නව සීමාවන් පැනවීමෙන් වැළකී සිටීමට ද නායකයෝ තීරණය කළහ. මෙම තීරණය හරහා ගෝලීය බලශක්ති සැපයුම් හිඟය අවම කර ලෝක වෙළඳපොළේ ඉන්ධන මිල ස්ථාවර මට්ටමක පවත්වා ගැනීම අපේක්ෂා කෙරේ.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / ගෝලීය ආර්ථික සහ බලශක්ති පුවත්


In a concerted bid to curb soaring global fuel prices and address severe tightening in the energy markets, leaders of the Group of Seven (G7) wealthy democracies have agreed to release 100 million barrels of crude oil and diesel fuel from their emergency reserves.


The landmark consensus was reached during an emergency virtual summit chaired by French President Emmanuel Macron, whose country currently holds the rotating presidency of the G7. The summit followed bilateral discussions between US President Donald Trump and Macron, amid mounting pressure from Washington urging European allies to tap into their strategic petroleum reserves to mitigate acute diesel supply crunches.


Under the joint agreement, the 100 million barrels will be released systematically over the next four months, with a substantial, frontloaded volume of refined diesel prioritized within the first 20 days. This emergency deployment will be coordinated directly by the International Energy Agency (IEA). Furthermore, G7 leaders formally pledged not to enforce any reciprocal export bans or trade barriers on petroleum and refined energy products among member nations. The decisive initiative is designed to inject vital liquidity into global markets, buffer against logistical bottlenecks, and alleviate inflationary cost pressures on businesses and consumers worldwide.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - International News / Global Economy and Energy Affairs

Comments