குருநாகல் மாநகர சபை உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம்: திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் முன்மாதிரி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பெரிதும் பாராட்டு කුරුණෑගල මහ නගර සභාවේ ඉහළ පෙළේ නියෝජිත පිරිසක් කාත්තන්කුඩි නගර සභාවේ නිල සංචාරයක: ඝන අපද්රව්ය කළමනාකරණය සහ සංවර්ධන ව්යාපෘති දැඩි ඇගයීමට High-Level Delegation from Kurunegala Municipal Council Visits Kattankudy Urban Council: Commends Benchmark Solid Waste Management and Development Projects
குருநாகல் மாநகர சபை உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம்: திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் முன்மாதிரி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பெரிதும் பாராட்டு
කුරුණෑගල මහ නගර සභාවේ ඉහළ පෙළේ නියෝජිත පිරිසක් කාත්තන්කුඩි නගර සභාවේ නිල සංචාරයක: ඝන අපද්රව්ය කළමනාකරණය සහ සංවර්ධන ව්යාපෘති දැඩි ඇගයීමට
High-Level Delegation from Kurunegala Municipal Council Visits Kattankudy Urban Council: Commends Benchmark Solid Waste Management and Development Projects
நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் முன்மாதிரியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆராய்வதற்காக, குருநாகல் மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
குருநாகல் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து, பிரதி முதல்வர் எம். அஷர்தீன் மொயினுடீன், மாநகர ஆணையாளர் டபிள்யூ. எம். பி. பி. வீரசிங்க ஆகியோர் தலைமையில் வருகை தந்த இந்த உயர்மட்டக் குழுவில் மாநகர சபை உறுப்பினர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட முக்கிய துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். காத்தான்குடி நகர சபைக்கு வருகை தந்த இக்குழுவினரை, நகர சபையின் கௌரவ நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர் நேரில் உத்தியோகபூர்வமாக வரவேற்றதுடன், நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அவர்களை நேரடியாக அழைத்துச் சென்றார்.
இவ்விஜயத்தின் போது, நாட்டின் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் காத்தான்குடி நகர சபையின் நவீன திண்மக்கழிவு அகற்றும் முகாமைத்துவ நிலையம், வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-அக்ஸா பள்ளிவாயல், காத்தான்குடி நகர சபையினால் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வாவிக்கரை படகு சேவை மற்றும் பாரம்பரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பூர்வீக நூதனசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களை இக்குழுவினர் நேரில் பார்வையிட்டு நுணுக்கமாக ஆராய்ந்தனர்.
குறித்த கள விஜயத்தின் போது, கழிவு முகாமைத்துவ தொழினுட்ப முறைகள், சேதனப் பசளை உற்பத்தி நடைமுறைகள், நவீன நகர அபிவிருத்திப் பணிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர் அவர்களால் குருநாகல் மாநகர சபைக் குழுவினருக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. காத்தான்குடி நகர சபையின் வினைத்திறன் மிக்க நிர்வாக நடைமுறைகள், தொலைநோக்குத் திட்டமிடல்கள் மற்றும் முன்னுதாரணமான மக்கள் நலத் திட்டங்களை குருநாகல் மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் பெரிதும் பாராட்டியதுடன், இத்தகைய சிறந்த நிர்வாக நடைமுறைகளைத் தங்களது குருநாகல் மாநகரப் பகுதியிலும் சாத்தியமான வரம்பிற்குள் நடைமுறைப்படுத்துவது குறித்து மிகுந்த ஆர்வம் வெளியிட்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / உள்ளூராட்சி மற்றும் நகர அபிவிருத்தி விவகாரம்
දිවයිනටම ආදර්ශමත් වන කාත්තන්කුඩි නගර සභාවේ ඝන අපද්රව්ය කළමනාකරණ ක්රියාවලිය සහ විශිෂ්ට නගර සංවර්ධන ව්යාපෘති නිරීක්ෂණය කිරීම සඳහා කුරුණෑගල මහ නගර සභාවේ නගරාධිපතිවරයා ඇතුළු ඉහළ පෙළේ නියෝජිත පිරිසක් කාත්තන්කුඩි නගර සභාවේ නිල අධ්යයන චාරිකාවක නිරත වූහ.
කුරුණෑගල නගරාධිපති නීතිඥ ආනන්ද සහබන්දු, උප නගරාධිපති එම්. අෂර්දීන් මොයිනුඩීන්, නාගරික කොමසාරිස් ඩබ්ලිව්. එම්. පී. පී. වීරසිංහ යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් පැමිණි මෙම නියෝජිත පිරිසට නාගරික මන්ත්රීවරුන්, නගර සභා ඉංජිනේරුවන් සහ මහජන සෞඛ්ය පරීක්ෂකවරුන් ඇතුළු ක්ෂේත්ර නිලධාරීහු රැසක් ඇතුළත් වූහ. කාත්තන්කුඩි නගර සභාව වෙත පැමිණි නියෝජිත පිරිස කාත්තන්කුඩි නගර සභා සභාපති එස්. එච්. එම්. අස්ෆර් මහතා විසින් උණුසුම් අයුරින් පිළිගනු ලැබූ අතර, නගරය තුළ සාර්ථකව ක්රියාත්මක වන ප්රධාන ව්යාපෘති ස්ථාන රැසක් නිරීක්ෂණය සඳහා ඔවුන්ව කැඳවාගෙන යන ලදී.
මෙම සංචාරයේදී අනෙකුත් පළාත් පාලන ආයතන සඳහා ද ආදර්ශයක් සපයන කාත්තන්කුඩි නගර සභා ඝන අපද්රව්ය කළමනාකරණ මධ්යස්ථානය, ඓතිහාසික අල්-අක්සා පල්ලිය, කලපු තීරයේ මහජන විනෝදාස්වාදය උදෙසා ක්රියාත්මක බෝට්ටු සේවාව සහ පාරම්පරික කෞතුකාගාරය ඇතුළු වැදගත් ස්ථාන රැසක් නියෝජිත පිරිසේ සෘජු නිරීක්ෂණයට ලක්විය. එහිදී අපද්රව්ය ප්රතිචක්රීකරණ තාක්ෂණික ක්රමවේද, නාගරික සංවර්ධන කටයුතු සහ සංචාරක යටිතල පහසුකම් පිළිබඳව කාත්තන්කුඩි නගර සභා සභාපතිවරයා විසින් සවිස්තරාත්මක පැහැදිලි කිරීමක් සිදුකරන ලදී. කාත්තන්කුඩි නගර සභාවේ කාර්යක්ෂම පරිපාලන ව්යුහය, සැලසුම් සහ ආදර්ශමත් ව්යාපෘති කුරුණෑගල නියෝජිත පිරිසේ ඉහළ ඇගයීමට ලක්වූ අතර, මෙම යහපත් පිළිවෙත් කුරුණෑගල මහ නගර සභා බලප්රදේශය තුළ ද ක්රියාත්මක කිරීමට ඔවුන් දැඩි උනන්දුවක් පළ කළහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / පළාත් පාලන සහ නාගරික සංවර්ධන පුවත්
A high-level official study delegation from the Kurunegala Municipal Council conducted an official visit to the Kattankudy Urban Council to closely observe and evaluate its benchmark solid waste management operations and landmark urban development projects.
The delegation was headed by the Mayor of Kurunegala, Attorney-at-Law Ananda Sahabandu, Deputy Mayor M. Ashardeen Moinudeen, and Municipal Commissioner W. M. P. P. Weerasinghe, joined by municipal council members, structural engineers, and public health inspectors. The visiting dignitaries were formally received by the Chairman of the Kattankudy Urban Council, S. H. M. Asfar, who facilitated an extensive inspection across major civic infrastructures and key municipal landmarks.
During the mission, the delegation carried out detailed on-site assessments of the benchmark solid waste processing facility, the historic Al-Aqsa Mosque, the public lagoon recreational boat service, and the regional heritage museum. The technical methodologies surrounding mechanized waste processing, organic composting, urban revitalization, and civic tourism infrastructure were extensively detailed by Chairman S. H. M. Asfar. Highly commending the operational discipline, long-term civic planning, and sustainable municipal governance exhibited by the Kattankudy Urban Council, the visiting delegates from Kurunegala expressed strong enthusiasm for replicating these progressive practices within the Kurunegala municipality.
KR TV Network - Local News / Local Government and Urban Development Affairs











Comments