எழுத்தாளர் சபாரி சபீக்கின் முதலாவது சிறுவர் பாடல் நூலான ‘சின்னச் சின்ன சிறகுகள்’ மூதூர் JMI எக்ஸ்போவில் வெளியீடு ලේඛක සෆාරි සෆීක්ගේ ප්රථම ළමා ගීත කාව්ය කෘතිය වන 'චින්න චින්න චිරකුහල්' මුදූර් JMI ප්රදර්ශනයේදී එළිදක්වයි Writer Safari Safeek’s Debut Children’s Rhymes Book ‘Chinna Chinna Siragukal’ Launched at Mutur JMI Expo 2026
கிண்ணியாவைச் சேர்ந்த பிரபல இளம் எழுத்தாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான சபாரி சபீக் ஆக்கியுள்ள முதலாவது நூலான ‘சின்னச் சின்ன சிறகுகள்’ சிறுவர் பாடல் நூல், கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை மூதூர் JMI பதிப்பகத்தினூடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மூதூர் JMI நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Mutur JMI Expo 2026’ மாபெரும் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழாவில் வெளியிடப்பட்ட 60 இலக்கிய நூல்களில் ஒன்றாக இந்நூலும் மக்கள் கரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கல்வியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்கேற்புடன் ஆறு ஆய்வரங்குகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில், வ.அ. இராசரத்தினம் அரங்கில் நடைபெற்ற முதலாவது ஆய்வரங்கின் போது, ஓய்வுபெற்ற முன்னாள் காத்தான்குடி பிரதேச செயலாளரும் முன்னாள் கூட்டுறவு ஆணையாளருமான M.C.M. சரீப் (SLAS) தலைமையில் முதல் தொகுதியாக வெளியிடப்பட்ட பத்து நூல்களில் ஒன்றாக ‘சின்னச் சின்ன சிறகுகள்’ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிறுவர்களின் கற்பனைத் திறன், வாசிப்பார்வம் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் மிக அழகிய சிறுவர் பாடல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூல், சபாரி சபீக்கின் இலக்கியப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகவும், சிறுவர் இலக்கியத் தளத்தில் ஒரு புதிய வரவாகவும் அமைந்துள்ளதாக இலக்கிய ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / இலக்கியம், கலை மற்றும் கலாசாரம்
කින්නියා ප්රදේශයේ ප්රකට ලේඛකයෙකු සහ සාහිත්ය ක්රියාකාරිකයෙකු වන සෆාරි සෆීක් මහතා විසින් රචිත ප්රථම කෘතිය වන 'චින්න චින්න චිරකුහල්' (කුඩා පියාපත්) නැමැති ළමා ගීත කාව්ය සංග්රහය පසුගිය ඔක්තෝබර් 24 වන සෙනසුරාදා මුදූර් JMI ප්රකාශන ආයතනය මඟින් නිල වශයෙන් එළිදක්වන ලදී.
මුදූර් JMI ආයතනයේ 10 වන සංවත්සරය සහ ජාතික කියවීමේ මාසය නිමිත්තෙන් සංවිධානය කරන ලද ‘Mutur JMI Expo 2026’ සාහිත්ය උළෙලේදී ප්රකාශයට පත් කරන ලද සාහිත්ය කෘති 60 අතුරින් එකක් ලෙස මෙම කෘතිය ද ජනගත විය.
විශ්වවිද්යාල මහාචාර්යවරුන් සහ සාහිත්යවේදීන්ගේ සහභාගීත්වයෙන් යුත් පර්යේෂණ සම්මන්ත්රණ හයක් යටතේ පැවති මෙම උළෙලේදී, වී.ඒ. රාජරත්නම් ශාලාවේ පැවති පළමු සම්මන්ත්රණයේදී, විශ්රාමික කාත්තන්කුඩි ප්රාදේශීය ලේකම් සහ හිටපු සමුපකාර කොමසාරිස් M.C.M. ෂරීෆ් (SLAS) මහතාගේ ප්රධානත්වයෙන් මුල් කාණ්ඩය ලෙස එළිදැක්වුණු කෘති දහය අතරට මෙම ළමා ග්රන්ථය ද ඇතුළත් විය.
ළමුන්ගේ පරිකල්පන හැකියාව, කියවීමේ උනන්දුව සහ නිර්මාණශීලී චින්තනය වර්ධනය කිරීමේ අරමුණින් රචිත මෙම ළමා කෘතිය, සෆාරි සෆීක්ගේ සාහිත්ය චාරිකාවේ සුවිශේෂී හැරවුම් ලක්ෂ්යයක් සනිටුහන් කර ඇති බව සාහිත්යලෝලීන් පෙන්වා දෙයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / සාහිත්ය, කලා සහ සංස්කෘතික පුවත්
The debut literary work of Kinniya-based writer and literary activist Safari Safeek, titled ‘Chinna Chinna Siragukal’ (Tiny Wings), a collection of children’s verses and rhymes, was officially launched through Mutur JMI Publications on Saturday, 24 October 2026.
The launch took place during the ‘Mutur JMI Expo 2026’, organized to commemorate the 10th anniversary of the Mutur JMI Institute in conjunction with National Reading Month, where the book was among 60 distinguished works unveiled to the reading public.
The grand literary assembly featured six academic symposiums graced by senior university academics and scholars. At the inaugural symposium convened at the V.A. Rajaratnam Hall, presided over by former Kattankudy Divisional Secretary and former Commissioner of Co-operative Development M.C.M. Shareef (SLAS), ‘Chinna Chinna Siragukal’ was formally released as part of the primary batch of ten selected publications.
Crafted to cultivate imagination, aesthetic appreciation, and foundational reading habits among children, the publication represents a noteworthy milestone in Safari Safeek's literary journey and an enriching addition to contemporary children's literature.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Literature, Arts and Culture


Comments