நுகர்வோருக்குத் தடையின்றி எரிவாயு விநியோகிக்கத் தவறியமை: லாப் கேஸ் (LAUGFS) நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் පාරිභෝගිකයින්ට අඛණ්ඩව ගෑස් සැපයීමට අපොහොසත් වීම: ලාෆ්ස් (LAUGFS) ගෑස් සමාගමට එරෙහිව අධිකරණයේ නඩු පවරයි Failure in Continuous Gas Distribution to Consumers: Consumer Affairs Authority Files Case Against LAUGFS Gas PLC
நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டி, லாப் எரிவாயு (LAUGFS Gas PLC) நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் இடம்பெற்றன.
நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 86 ஆம் பிரிவை மீறி, சந்தையில் நுகர்வோருக்குத் தடையின்றித் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ முறைப்பாட்டு ஆவணங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இதன்போது விடயங்களை ஆராய்ந்த நீதவான், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி உரிய விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, லாப் கேஸ் நிறுவனத்திற்கு அழைப்பாணை (Notice) பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / நுகர்வோர் விவகாரம், எரிவாயு விநியோகம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள்
පාරිභෝගිකයින් වෙත අඛණ්ඩව ගෑස් සැපයීමට අපොහොසත් වූ බවට චෝදනා කරමින්, ලාෆ්ස් ගෑස් (LAUGFS Gas PLC) සමාගමට එරෙහිව පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය (CAA) විසින් අද (29) කොළඹ ප්රධාන මහේස්ත්රාත් අධිකරණයේ නඩු පවරා තිබේ.
කොළඹ අතිරේක මහේස්ත්රාත් දර්ශිමා ප්රේමරත්න මහත්මිය ඉදිරියේ මෙම නඩුවට අදාළ මූලික කරුණු විමසීම සිදුවිය.
පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරි පනතේ 86 වන වගන්තිය උල්ලංඝනය කරමින්, වෙළඳපොළේ පාරිභෝගිකයින් සඳහා අඛණ්ඩව ගෑස් සැපයීම පැහැරහැරීම සම්බන්ධයෙන් මෙම නඩුව ගොනුකර ඇති අතර, ඊට අදාළ පැමිණිල්ල පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය විසින් අධිකරණයට ඉදිරිපත් කර ඇත.
මෙහිදී කරුණු සලකා බැලූ මහේස්ත්රාත්වරිය, අදාළ සිදුවීම සම්බන්ධයෙන් එළඹෙන නොවැම්බර් මස 11 වන දින අධිකරණයේ පෙනී සිට කරුණු දක්වන ලෙස නියෝග කරමින් ලාෆ්ස් ගෑස් සමාගම වෙත නොතීසි නිකුත් කිරීමට පියවර ගත්තාය. ඒ අනුව මෙම නඩුව ලබන 11 වනදා යළි කැඳවීමට නියමිතය.
වාර්තාකාරිය: ෆර්හානා බදුර්දීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / පාරිභෝගික කටයුතු, ගෑස් බෙදාහැරීම සහ අධිකරණ තීන්දු
The Consumer Affairs Authority (CAA) filed a lawsuit today (29 October) before the Colombo Chief Magistrate’s Court against LAUGFS Gas PLC, alleging a failure to ensure the continuous and uninterrupted supply of LP gas to consumers.
The initial proceedings were taken up before Colombo Additional Magistrate Dharshima Premaratne.
The case was instituted citing a direct violation of Section 86 of the Consumer Affairs Authority Act, following persistent failures to maintain an adequate market supply of liquefied petroleum gas for public consumption. Formal complaint documentations were tendered to the court by the CAA legal officers.
Upon considering the submissions, the Magistrate issued formal notices ordering LAUGFS Gas PLC to appear before the court on 11 November to tender explanations regarding the alleged non-compliance. Further hearings into the matter were adjourned until 11 November.
Reporter: Farhana Badurdeen
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Consumer Affairs, Energy Supply and Judicial Affairs

Comments