Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும் புதிய திட்டங்கள்! ගුවන් යානා ඉන්ධන සැපයුම් ආරක්ෂාව තහවුරු කිරීමට සහ ගබඩා ධාරිතාව ඉහළ නැංවීමට නව ව්‍යාපෘති! New projects launched to ensure aviation fuel supply security and increase storage capacity!













 விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும் புதிய திட்டங்கள்!

ගුවන් යානා ඉන්ධන සැපයුම් ආරක්ෂාව තහවුරු කිරීමට සහ ගබඩා ධාරිතාව ඉහළ නැංවීමට නව ව්‍යාපෘති!

 New projects launched to ensure aviation fuel supply security and increase storage capacity!


வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்குச் செயற்திறனாக சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஜெட் A-1 குழாய் கட்டமைப்பு மற்றும் புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விநியோகச் செலவைக் குறைத்தல் மற்றும் எதிர்காலத் தேவைக் கொள்ளளவை அதிகரித்தல் ஆகியவற்றுக்காக இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


முத்துராஜவெல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 21 கிலோமீட்டர் நீளமான நிலத்தடி குழாய் வழித்தடம் மற்றும் 92,000 கன மீட்டர் மொத்த கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன.


மேலும், முனையத்தின் சேமிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய சேமிப்புத் தாங்கிகளை அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசியச் செய்தி


බලශක්ති වෙළඳපොළ තුළ ශක්තිමත් රජයේ දායකත්වයක් පවත්වා ගනිමින් ජනතාවට කාර්යක්ෂමව සේවය කිරීම රජයේ අපේක්ෂාව බව ජනාධිපති අනුර කුමාර දිසානායක ප්‍රකාශ කළේය.


ලංකා පෙට්‍රෝලියම් සංස්ථාවේ ජෙට් A-1 නල මාර්ග පද්ධතිය සහ නව තෙල් ටැංකි ගබඩා සංකීර්ණවල ඉදිකිරීම් කටයුතු ආරම්භ කිරීමේ අවස්ථාවට එක්වෙමින් ජනාධිපතිවරයා මේ බව සඳහන් කළේය.


ගුවන් යානා ඉන්ධන සැපයුම් ආරක්ෂාව තහවුරු කිරීම, සැපයුම් පිරිවැය අවම කිරීම සහ අනාගත ඉන්ධන අවශ්‍යතා සඳහා ධාරිතාව ඉහළ නැංවීම මෙම ව්‍යාපෘතිවල අරමුණ වේ.


මුතුරාජවෙළ සහ කටුනායක බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපළ සම්බන්ධ කරමින් කිලෝමීටර් 21ක භූගත නල මාර්ගයක් සහ ඝන මීටර් 92,000ක මුළු ධාරිතාවකින් යුත් නව ජෙට් ஏ-1 ඉන්ධන ටැංකි පහක් ඉදි කෙරේ.


මීට අමතරව, මුතුරාජවෙළ පර්යන්තයේ නව ගබඩා ටැංකි තුනක් ඉදිකිරීමේ කටයුතු ද ආරම්භ කර ඇති අතර, එමගින් රටේ ඉන්ධන යටිතල පහසුකම් තවදුරටත් ශක්තිමත් වනු ඇත.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | ජාතික පුවත්


President Anura Kumara Dissanayake stated that the government's expectation is to maintain a strong state presence in the energy market and serve the public efficiently.


The President made these remarks while inaugurating the construction of the Ceylon Petroleum Corporation's Jet A-1 pipeline network and new oil storage tank complexes.


These projects are being implemented to ensure aviation fuel supply security, reduce distribution costs,  and increase capacity for future demands.


Spanning a length of 21 kilometers, an underground pipeline connecting Muthurajawela to the Bandaranaike International Airport in Katunayake, along with five new Jet A-1 fuel tanks with a total capacity of 92,000 cubic meters, will be constructed.


Additionally, work on constructing three new storage tanks at the Muthurajawela terminal has commenced to further enhance the nation's petroleum infrastructure and storage capabilities.


KRTV Network | National News

Comments