பாராளுமன்றக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் පාර්ලිමේන්තු කාරක සභා සඳහා තරුණ නියෝජිතයන්ගේ දායකත්වය ලබාගැනීම පිළිබඳ විශේෂ සාකච්ඡාවක් Special Discussion on Integrating Youth Representatives into Parliamentary Sectoral Oversight Committees
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” செயலமர்வுத் தொடரில் இளைஞர் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளைப் பாராளுமன்றக் குழுக்களிடம் சமர்ப்பித்தல் மற்றும் அதற்காக இளைஞர் பிரதிநிதிகளின் நேரடிப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் இணைத் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடிய திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்களுக்கான பாராளுமன்ற ஒன்றியக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் சட்டவாக்க நடவடிக்கைகளில் இளைஞர் சமூகத்தின் பங்கேற்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட “Voice to Policy” செயலமர்வுகள் அண்மையில் கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன.
இச்செயலமர்வுகளில் இளைஞர் யுவதிகளால் முன்வைக்கப்பட்ட பொதுவான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் கொள்கைசார் முன்மொழிவுகள் குறித்து, குறித்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் தமது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.
இளைஞர் சமூகத்தினால் அடையாளம் காணப்படும் கள யதார்த்தப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுப் பரிந்துரைகளைப் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளில் உள்ளடக்குவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை நேரடியாக முன்வைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இளைஞர் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளைப் பாராளுமன்றச் செயற்பாடுகளுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் ஜனநாயக மக்கள் பங்கேற்பை மேலும் பலப்படுத்துவதே இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இக்கூட்டத்தில், ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களும், “Voice to Policy” செயலமர்வுத் தொடருக்கு ஒத்துழைப்பு வழங்கும் CII (Coalition for Inclusive Impact) மற்றும் NDI (National Democratic Institute) ஆகிய சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / பாராளுமன்ற விவகாரங்கள், ஜனநாயகம் மற்றும் இளைஞர் வலுவூட்டல்
විවෘත පාර්ලිමේන්තු මුලපිරීම් සඳහා වූ පාර්ලිමේන්තු සංසදය විසින් සංවිධානය කරන ලද “Voice to Policy” වැඩමුළු මාලාවේදී තරුණ ප්රජාව විසින් ඉදිරිපත් කරන ලද අදහස් සහ ප්රතිපත්තිමය යෝජනා පාර්ලිමේන්තු කාරක සභා වෙත ඉදිරිපත් කිරීම සහ ඒ සඳහා තරුණ නියෝජිතයන්ගේ සෘජු දායකත්වය ලබාගැනීම පිළිබඳ විශේෂ සාකච්ඡාවක් පාර්ලිමේන්තුවේදී පවත්වා තිබේ.
සංසදයේ සම සභාපතිවරුන් වන ගරු අමාත්ය මහාචාර්ය ක්රිශාන්ත අබේසේන සහ ගරු පාර්ලිමේන්තු මන්ත්රී ශානක්කියන් රාජපුත්තිරන් රාසමාණික්කම් යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් පසුගියදා පාර්ලිමේන්තු සංකීර්ණයේදී රැස්වූ විවෘත පාර්ලිමේන්තු මුලපිරීම් සඳහා වූ පාර්ලිමේන්තු සංසදයේ රැස්වීමේදී මේ පිළිබඳව විශේෂ අවධානය යොමු විය.
විවෘත පාර්ලිමේන්තු සංකල්පය ප්රවර්ධනය කිරීම සහ පාර්ලිමේන්තු ක්රියාවලිය සඳහා තරුණ ප්රජාවගේ සහභාගීත්වය ඉහළ නැංවීමේ අරමුණින් සංවිධානය කරන ලද “Voice to Policy” වැඩමුළු මෑතකදී ගම්පහ, මඩකලපුව සහ මහනුවර යන දිස්ත්රික්ක කේන්ද්ර කරගනිමින් පවත්වන ලදී.
එම වැඩමුළුවලදී තරුණ තරුණියන් විසින් මතුකරන ලද පොදු ගැටලු, අදහස් සහ ප්රතිපත්තිමය යෝජනා සම්බන්ධයෙන් අදාළ දිස්ත්රික්ක නියෝජනය කරමින් මෙම රැස්වීමට එක්වූ තරුණ නියෝජිතයෝ සිය අදහස් හා යෝජනා ඉදිරිපත් කළහ.
තරුණ ප්රජාව විසින් හඳුනාගන්නා ලද ගැටලු සහ ඒ සඳහා වන විසඳුම් පාර්ලිමේන්තුවේ ඉදිරි ව්යවස්ථාදායක කටයුතු සඳහා යොමුකිරීමේ වැදගත්කම මෙහිදී සාකච්ඡා වූ අතර, ඊට අදාළ ක්ෂේත්ර පිළිබඳව තරුණ නියෝජිතයින් පාර්ලිමේන්තුවේ අදාළ ආංශික අධීක්ෂණ කාරක සභා සමඟ එක්ව සිය අදහස් හා නිර්දේශ ඉදිරිපත් කිරීමට සුදුසු අවස්ථාවන් සලසා දීම කෙරෙහි ද අවධානය යොමු කෙරිණි.
තරුණ පරපුරේ හඬ සහ යෝජනා පාර්ලිමේන්තු ව්යුහය සමඟ ඒකාබද්ධ කරමින් ජනතා සහභාගීත්වය තවදුරටත් ශක්තිමත් කිරීම මෙම සමස්ත වැඩසටහනේ මූලික ඉලක්කයයි.
මෙම අවස්ථාව සඳහා සංසදයේ සාමාජික පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් මෙන්ම “Voice to Policy” වැඩමුළු මාලාව සඳහා තාක්ෂණික සහයෝගය ලබාදෙන CII (Coalition for Inclusive Impact) සහ NDI (National Democratic Institute) යන ආයතනවල නියෝජිතයෝ ද සහභාගී වූහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / පාර්ලිමේන්තු කටයුතු, ප්රජාතන්ත්රවාදය සහ තරුණ සවිබල ගැන්වීම
A high-level consultative session was convened at Parliament to deliberate on channeling views, evidence, and policy proposals articulated by young citizens during the “Voice to Policy” workshop series into parliamentary committees, while actively engaging youth representatives in institutional mechanisms.
The deliberations occurred during the recent meeting of the Parliamentary Caucus for Open Parliament Initiatives, co-chaired by Hon. Minister Prof. Krishantha Abeynaike and Hon. Member of Parliament Shanakiyan Rajaputhiran Rasamanickam at the Parliamentary Complex.
Organized to foster open parliamentary governance frameworks and structurally enhance youth civic participation in state legislative procedures, the “Voice to Policy” workshops were conducted targeting diverse cohorts across Gampaha, Batticaloa, and Kandy districts.
Youth leaders representing these three districts presented summaries of the systemic issues, civic priorities, and targeted legislative solutions gathered during regional discussions directly to lawmakers.
The assembly emphasized the vital need to institutionalize citizen-led recommendations into forward-looking parliamentary proceedings. Special emphasis was dedicated to facilitating formal avenues enabling accredited youth delegates to liaise with Parliamentary Sectoral Oversight Committees to share perspectives and present technical submissions.
Aligning youth contributions directly with parliamentary operations aims to consolidate democratic governance and participatory policymaking across Sri Lanka.
The meeting was attended by caucus-member parliamentarians alongside institutional delegates representing the Coalition for Inclusive Impact (CII) and the National Democratic Institute (NDI), who serve as supporting partners for the “Voice to Policy” rollout.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Parliamentary Affairs, Democracy and Youth Empowerment








Comments