ஏறாவூர் தன்னாமுனைப் பகுதியில் தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்: பெற்றோர்களுக்கு அவசர விழிப்புணர்வு வழிகாட்டல் එරාවුර් තන්නාමුනෙයි ප්රදේශයේ වතුර බාල්දියකට වැටී වයස අවුරුද්දක පිරිමි දරුවෙකු අවාසනාවන්ත ලෙස ජීවිතක්ෂයට: දෙමාපියන්ට හදිසි දැනුවත් කිරීමක් Tragic Drowning of One-Year-Old Toddler in Water Bucket in Eravur Thannamunai: Urgent Safety Guidelines Issued for Parents
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனைப் பிரதேசத்தில் 20 லீற்றர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவத்தில் தன்னாமுனைப் பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் இரண்டு மாதங்களுமுடைய அக்விவ் விகான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் (26) முற்பகல் 11:00 மணியளவில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த வேளையில், குழந்தையின் தாயார் கிணற்றடியில் 20 லீற்றர் வர்ணப் பூச்சு வாளியில் உடைகளைத் துவைத்து உலர வைத்துக் கொண்டிருந்தார். இதன்போது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து வந்த குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக அவரது ஆடைகளை எடுப்பதற்குத் தாய் அறைக்குள் சென்று திரும்பியுள்ளார்.
அச்சமயத்தில் குழந்தை நீர் நிறைந்த வாளிக்குள் தலைகீழாக வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாகக் குழந்தையை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்து, உடற்கூற்றுப் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான விபத்துகளைத் தடுக்க, குழந்தைகள் உள்ள வீடுகளில் துணி துவைக்கும் வாளிகள், நீர் தொட்டிகள் மற்றும் டிரம்களை உறுதியான மூடிகளால் மூடி வைக்குமாறும், சில நொடிகள் கூட பச்சிளம் குழந்தைகளை நீர்நிலைகள் மற்றும் வாளிகளுக்கு அருகில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும், கிணற்றடி மற்றும் குளியலறைகளுக்குச் செல்லும் கதவுகளை எப்போதும் பூட்டிப் பாதுகாப்புத் தடுப்புகளை ஏற்படுத்துமாறும் அவசர விழிப்புணர்வு வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / விபத்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு
-
මඩකලපුව එරාවුර් පොලිස් වසමට අයත් තන්නාමුනෙයි ප්රදේශයේදී ලීටර් 20ක වතුර බාල්දියකට වැටී වයස අවුරුද්දක පිරිමි දරුවෙකු අවාසනාවන්ත ලෙස මියගොස් තිබේ.
මෙම අවාසනාවන්ත සිදුවීමෙන් ජීවිතක්ෂයට පත්ව ඇත්තේ තන්නාමුනෙයි ප්රදේශයේ පදිංචිව සිටි වයස අවුරුද්දයි මාස දෙකක් වූ අක්විව් විහාන් නමැති පිරිමි දරුවෙකි.
පසුගිය 26 වන දින පෙරවරු 11:00ට පමණ දරුවා නිවසේ නිදාගෙන සිටි අවස්ථාවේදී, මව ළිඳ අසල ලීටර් 20ක තීන්ත බාල්දියක රෙදි සෝදමින් සිට ඇත. අනතුරුව නින්දෙන් අවදි වී පැමිණි දරුවා නෑවීම සඳහා ඇඳුම් රැගෙන ඒමට මව කාමරයට ගොස් සුළු වේලාවකින් නැවත පැමිණෙන විට, දරුවා ජලය පිරුණු බාල්දිය තුළට වැටී සිටිනු දැක තිබේ.
වහාම ක්රියාත්මක වූ මව දරුවා බේරාගෙන මඩකලපුව ශික්ෂණ රෝහලේ හදිසි ප්රතිකාර ඒකකයට ඇතුළත් කිරීමට පියවර ගත්ත ද, ඒ වන විටත් දරුවා මියගොස් සිටි බව පොලිස් මූලික විමර්ශනවලදී අනාවරණය වී ඇත.
සිද්ධිය වූ ස්ථානයට පැමිණි හදිසි මරණ පරීක්ෂකවරයා පරීක්ෂණ පවත්වා දේහය පිළිබඳ පශ්චාත් මරණ පරීක්ෂණයක් පවත්වන ලෙස පොලිසියට නියෝග කර තිබේ. එරාවුර් පොලිසිය මේ පිළිබඳ වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.
මෙවැනි ඛේදවාචක වළක්වා ගැනීම සඳහා, කුඩා දරුවන් සිටින නිවෙස්වල රෙදි සෝදන බාල්දි, වතුර බැරල් සහ බඳුන් තදින් පියනෙන් වසා තැබීමටත්, සුළු මොහොතකට හෝ දරුවන් ජලය සහිත ස්ථාන අසල තනි නොකිරීමටත්, නාන කාමර සහ ළිං ආශ්රිත ස්ථානවලට දරුවන්ට ඇතුළු විය නොහැකි වන සේ ආරක්ෂිත වැටවල් යොදා දොරවල් වසා තැබීමටත් දෙමාපියන් දැඩි ලෙස දැනුවත් කර ඇත.
වාර්තාකාරිය: ෆර්හානා බදුර්දීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අනතුරු, මහජන ආරක්ෂාව සහ සමාජ දැනුවත් කිරීම්
A one-year-and-two-month-old male toddler tragically lost his life after falling headfirst into a 20-litre water bucket at a residence in Thannamunai, within the Eravur police division of Batticaloa district.
The deceased child has been identified as Akviv Vihan, an infant residing in the Thannamunai area.
The fatal mishap transpired at approximately 11:00 AM on 26 October. While the infant was asleep, his mother had been washing and drying laundry near the domestic well utilizing a 20-litre repurposed paint bucket filled with water. When the child awoke and approached the courtyard, the mother stepped into the bedroom momentarily to retrieve clean clothing for a bath, only to return seconds later to discover the toddler submerged upside down inside the water vessel.
Although the unresponsive infant was pulled out immediately and rushed to the emergency treatment unit of the Batticaloa Teaching Hospital, he was pronounced dead upon medical assessment.
The Inquirer into Sudden Deaths visited the location, conducted preliminary inquest procedures, and instructed police officers to facilitate a post-mortem examination. Eravur Police are conducting further investigations.
Authorities and child-safety advocates have urged households to maintain robust safety precautions, mandating that domestic water storage drums, buckets, and wash basins remain securely sealed with tightly fitted lids, bathroom doorways remain barricaded, and toddlers never be left unmonitored around water containers even for fleeting moments.
Reporter: Farhana Badurdeen
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Accidents, Child Safety and Public Awareness

Comments