Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு டிசம்பர் 15 வரை ஒத்திவைப்பு: கொழும்பு நீதிமன்றம் உத்தரவு! ලාෆ්ස් ගෑස් සමාගමට එරෙහි නඩුව දෙසැම්බර් 15 දක්වා කල් තැබේ: කොළඹ අධිකරණයෙන් නියෝගයක්! Case against LAUGFS Gas postponed to December 15: Colombo Magistrate issues order!

 


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகிக்கத் தவறியமை தொடர்பில், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு (LAUGFS Gas PLC) எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு நேற்று (11.11.2026) கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்நிறுவனத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.


இதன்போது, நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டியுள்ளதால், அதற்கான கால அவகாசத்தை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டார். நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 86ஆவது பிரிவை மீறி, நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகிக்கத் தவறியமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice


உள்நாட்டுச் செய்தி / வர்த்தகம் மற்றும் சட்ட அமலாக்கம்


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


පාරිභෝගිකයින් වෙත අඛණ්ඩව ගෑස් සැපයීමට අපොහොසත් වීම සම්බන්ධයෙන් ලාෆ්ස් ගෑස් සමාගමට (LAUGFS Gas PLC) එරෙහිව පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය විසින් ගොනු කර තිබූ නඩුව ලබන දෙසැම්බර් 15 වනදා දක්වා කල් තැබීමට නියෝග කර ඇත.


මෙම නඩුව ඊයේ (11.11.2026) කොළඹ අතිරේක මහේස්ත්‍රාත් දර්ශිමා ප්‍රේමරත්න මහත්මිය ඉදිරියේ කැඳවූ අවස්ථාවේදී මෙම නියෝගය නිකුත් කෙරිණි. මීට පෙර අධිකරණයේ පෙනී සිටින ලෙස ලාෆ්ස් ගෑස් සමාගමට නොතීසි නිකුත් කර තිබූ අතර, ඒ අනුව එම සමාගමේ නිලධාරීන් අධිකරණය හමුවේ පෙනී සිටියහ.


මෙහිදී සමාගම වෙනුවෙන් පෙනී සිටි නීතිඥවරයා පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය සමඟ සාකච්ඡා කිරීමට අවශ්‍යව ඇති බැවින් ඒ සඳහා සුදුසු කාලයක් ලබාදෙන ලෙස අධිකරණයෙන් ඉල්ලා සිටියේය. ඒ අනුව අදාළ නඩුව ලබන දෙසැම්බර් 15 වනදා යළි කැඳවීමට මහේස්ත්‍රාත්වරිය නියෝග කළාය. පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරී පනතේ 86 වන වගන්තිය උල්ලංඝනය කරමින් පාරිභෝගිකයින්ට අඛණ්ඩව ගෑස් සැපයීමට අපොහොසත් වීම හේතුවෙන් මෙම නඩුව පවරා තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice


දේශීය පුවත් / වාණිජ සහ නීතිය බලාත්මක කිරීම


Reporter: Farhana Badurdeen


The legal proceedings initiated by the Consumer Affairs Authority (CAA) against LAUGFS Gas PLC, over its failure to maintain an uninterrupted supply of liquefied petroleum gas to consumers, have been adjourned until December 15.


The directive was issued yesterday (11.11.2026) when the case was taken up for hearing before Colombo Additional Magistrate Darshima Premaratne. Officials of LAUGFS Gas PLC appeared in court pursuant to summons previously served on the company.


Counsel appearing on behalf of the company submitted that consultations are required between the management and the Consumer Affairs Authority, requesting an appropriate time frame to conduct discussions. Acceding to the request, the Additional Magistrate directed that the case be re-called on December 15. The lawsuit was instituted under Section 86 of the Consumer Affairs Authority Act for failing to maintain continuous market supply to consumers.


KR TV Network / KR TV Lankan Voice


Local News / Commerce and Law Enforcement

Comments