Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மாதாந்தம் 162,500 ரூபாய் வரை சம்பளம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு: தனிப்பட்ட வருமான வரிக் கட்டமைப்பில் பாரிய திருத்தங்கள் மற்றும் மேலதிக வரி நிவாரணங்கள் அறிவிப்பு! මාසිකව රුපියල් 162,500 දක්වා වැටුප් ලබන්නන්ට ආදායම් බදු නිදහස: පුද්ගල ආදායම් බදු ව්‍යුහයේ සුවිශේෂී සංශෝධන සහ අමතර බදු සහන රැසක්! Income Tax Exemption for Monthly Earners Up to Rs. 162,500: Major Revisions to Personal Income Tax Structure and Additional Tax Relief Announced!



உழைக்கும் போது செலுத்தும் தனிப்பட்ட வருமான வரி (PAYE) விலக்கு வரம்பை மாதாந்தம் 162,500 ரூபாயாக உயர்த்துவதற்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையின் போதே இந்த விசேட வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது.


முன்னர் மாதாந்தம் 100,000 ரூபாயாகக் காணப்பட்ட தனிப்பட்ட வருமான வரி விலக்கு வரம்பு, அரசாங்கத்தினால் 150,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி, இந்த வரம்பு 162,500 ரூபாயாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மாதாந்தச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 162,500 ரூபாய் வரை பெறுபவர்கள் எவரும் தமது வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை.


மேலும், வரிவிதிக்கத்தக்க வருமான வரம்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் தனிப்பட்ட வருமான வரிக் கட்டமைப்பிலும் பாரிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, 6 சதவீத வரி விகிதம் ஏற்புடையதாகின்ற வரி வரம்பு மாதாந்தம் 70,833 ரூபாயாகக் காணப்படுகின்ற அதேவேளை, அதன் பின்னரான வரி மட்டங்கள் 41,667 ரூபாயிலிருந்து மாதாந்தம் 50,000 ரூபாயாக விரிவுபடுத்தப்படவுள்ளன. அத்துடன், 6 சதவீத வரி விகிதத்திற்குப் பின்னர் 18 சதவீதத்திற்குப் பதிலாக 12 சதவீத விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டு, வரி விகிதங்கள் 6%, 12%, 18%, 24%, 30% மற்றும் 36% எனச் சரிசெய்யப்படவுள்ளன.


இந்தத் திருத்தங்களின் மூலம், உச்சபட்ச வரி விகிதம் ஏற்புடையதாகின்ற மாதாந்த வருமான அடிப்படை அளவு 358,000 ரூபாயிலிருந்து 433,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக தனிப்பட்ட வரி செலுத்துநர் ஒருவருக்கு மாதாந்தம் 750 ரூபாய் தொடக்கம் 15,750 ரூபாய் வரையிலான மேலதிக வரி நிவாரணம் கிடைக்கவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி மறுசீரமைப்பு மற்றும் 2027 ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் ஒன்றிணைந்த தாக்கத்தினால், அரசாங்கத்தினால் வழங்கப்படும் மொத்த மாதாந்த வரி நிவாரணம் தனிப்பட்ட வரி செலுத்துநர் ஒருவருக்கு 4,250 ரூபாயிலிருந்து 36,250 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / 2027 வரவு செலவுத் திட்டம், வருமான வரி விலக்கு மற்றும் வரி மறுசீரமைப்பு (12/11/2026)


මාසිකව රුපියල් 162,500 දක්වා වැටුප් ලබන්නන්ට ආදායම් බදු නිදහස: පුද්ගල ආදායම් බදු ව්‍යුහයේ සුවිශේෂී සංශෝධන සහ අමතර බදු සහන රැසක්!


උපයන විට ගෙවන පුද්ගල ආදායම් බදු (PAYE) නිදහස් සීමාව මාසිකව රුපියල් 162,500 දක්වා ඉහළ නැංවීමට 2027 අයවැයෙන් යෝජනා කර තිබේ. මුදල්, ක්‍රමසම්පාදන සහ ආර්ථික සංවර්ධන අමාත්‍යවරයා ලෙස ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා පාර්ලිමේන්තුවේදී අයවැය කතාව ඉදිරිපත් කරමින් මෙම විශේෂ බදු සහනය නිවේදනය කළේය.


මීට පෙර මාසිකව රුපියල් 100,000ක්ව පැවති පුද්ගල ආදායම් බදු නිදහස් සීමාව රජය විසින් රුපියල් 150,000 දක්වා ඉහළ නංවනු ලැබීය. මෙවර ඉදිරිපත් කරන ලද නව සංශෝධනවලට අනුව එම සීමාව රුපියල් 162,500 දක්වා තවදුරටත් ඉහළ නංවා ඇත. ඒ අනුව, මාසික වැටුප සහ දීමනා රුපියල් 162,500 දක්වා ලබන කිසිදු පුද්ගලයෙකු තම වැටුප සඳහා ආදායම් බදු ගෙවිය යුතු නොවේ.


එමෙන්ම, බදු අය කළ හැකි ආදායම් සීමාවන් පුළුල් කරමින් පුද්ගල ආදායම් බදු ව්‍යුහය ද සංශෝධනය කර තිබේ. ඒ අනුව, සියයට 6ක බදු අනුපාතය අදාළ වන බදු සීමාව මාසිකව රුපියල් 70,833ක් වන අතර, ඉන් පසුව ඇති බදු කාණ්ඩ රුපියල් 41,667 සිට මාසිකව රුපියල් 50,000 දක්වා පුළුල් කෙරේ. තවද, සියයට 6ක බදු අනුපාතයෙන් පසු සියයට 18 වෙනුවට සියයට 12ක අනුපාතයක් හඳුන්වා දෙමින් බදු අනුපාතයන් 6%, 12%, 18%, 24%, 30% සහ 36% ලෙස සංශෝධනය කර ඇත.


මෙම සංශෝධන හරහා උපරිම බදු අනුපාතය අදාළ වන මාසික ආදායම් මූලික සීමාව රුපියල් 358,000 සිට රුපියල් 433,000 දක්වා ඉහළ නංවා ඇති අතර, පුද්ගල බදු ගෙවන්නෙකුට මාසිකව රුපියල් 750 සිට රුපියල් 15,750 දක්වා අමතර බදු සහනයක් හිමිවේ. 2025 වසරේ හඳුන්වා දුන් බදු ප්‍රතිසංස්කරණ සහ 2027 සඳහා යෝජිත සංශෝධනවල ඒකාබද්ධ බලපෑම මත රජය විසින් පුද්ගල බදු ගෙවන්නෙකුට ලබා දෙන සමස්ත මාසික බදු සහනය රුපියල් 4,250 සිට රුපියල් 36,250 දක්වා ඉහළ ගොස් ඇති බව ජනාධිපතිවරයා සඳහන් කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / 2027 අයවැය, ආදායම් බදු නිදහස සහ බදු ප්‍රතිසංස්කරණ (12/11/2026)


Income Tax Exemption for Monthly Earners Up to Rs. 162,500: Major Revisions to Personal Income Tax Structure and Additional Tax Relief Announced!


The 2027 Budget has proposed raising the Pay-As-You-Earn (PAYE) personal income tax-free threshold to Rs. 162,500 per month. President Anura Kumara Dissanayake, in his capacity as Minister of Finance, Planning and Economic Development, unveiled this major tax relief measure during his Budget Speech in Parliament.


Previously, the government had raised the monthly tax-free threshold from Rs. 100,000 to Rs. 150,000. Under the newly proposed amendments, this limit has been further increased to Rs. 162,500, meaning individuals earning up to Rs. 162,500 in monthly salary and allowances will no longer be required to pay income tax on their earnings.


In addition, the personal income tax structure has been revised by expanding taxable income brackets to deliver broader relief to taxpayers. While the 6% tax bracket stands at Rs. 70,833 per month, subsequent tax slabs have been widened from Rs. 41,667 to Rs. 50,000 per month. Furthermore, a 12% rate has been introduced immediately after the 6% bracket in place of 18%, realigning the progressive tax rates to 6%, 12%, 18%, 24%, 30%, and 36%.


These adjustments raise the monthly income threshold at which the highest tax bracket applies from Rs. 358,000 to Rs. 433,000, granting individual taxpayers an additional monthly tax relief ranging from Rs. 750 to Rs. 15,750. Combined with the tax reforms introduced in 2025, the total monthly tax relief provided by the government to an individual taxpayer increases from Rs. 4,250 to Rs. 36,250, the President noted.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Budget 2027, Income Tax Threshold and Tax Reforms (12/11/2026)

Comments