காத்தான்குடியில் 17 இலட்சம் ரூபா தங்க நகைக்கொள்ளை: உறவினர் உட்பட மூவர் கைது - 20ஆம் திகதி வரை விளக்கமறியல்! කාත්තන්කුඩියේ රුපියල් ලක්ෂ 17ක රන් භාණ්ඩ කොල්ලය: ඥාතියෙකු ඇතුළු තිදෙනෙකු අත්අඩංගුවට - 20 දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කෙරේ! LKR 1.7 million gold robbery in Kattankudy: Three arrested including relative, remanded until November 20!
மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய தங்க நகைக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரின் உறவினர் உட்பட மூன்று சந்தேகநபர்களைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ. தர்சினி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி புதிய காத்தான்குடிப் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த நபர்கள், அங்கிருந்த ஆடை மாட்டும் ஸ்டாண்டில் தொங்கவிடப்பட்டிருந்த பையிலிருந்து நான்கரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 16 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம். நந்தனவின் வழிகாட்டலில், பதில் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து 17, 17 மற்றும் 56 வயதுடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் வீட்டு உரிமையாளரின் உறவினர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொள்ளையிடப்பட்ட நகைகளின் ஒரு பகுதி கடற்கரை வீதியில் உள்ள பிரபல நகைக்கடையொன்றில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டு, அங்கிருந்து 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் கைதானவர்களில் இருவரிடமிருந்து 6 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்றாவது நபர் தனக்குக் கிடைத்த பங்கினை முழுமையாகச் செலவு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව, නව කාත්තන්කුඩි ප්රදේශයේ සිදුවූ දැවැන්ත රන් භාණ්ඩ කොල්ලයක් සම්බන්ධයෙන් නිවෙස් හිමියාගේ ඥාතියෙකු ඇතුළු සැකකරුවන් තිදෙනෙකු කාත්තන්කුඩි පොලිසිය මඟින් අත්අඩංගුවට ගෙන තිබේ. මඩකලපුව මහේස්ත්රාත් අධිකරණයට ඉදිරිපත් කළ සැකකරුවන් තිදෙනා ලබන 20 වැනිදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට මහේස්ත්රාත් ඒ. දර්ශිනී මහත්මිය නියෝග කළාය.
පසුගිය 5 වැනිදා නව කාත්තන්කුඩි ප්රදේශයේ පිහිටි නිවසකට ඇතුළු වූ පුද්ගලයින්, ඇඳුම් රඳවනයක එල්ලා තිබූ බෑගයක තිබූ පවුම් හතරහමාරක රන් ආභරණ සොරාගෙන ගොස් තිබුණි. මෙලෙස සොරාගත් රන් ආභරණවල වටිනාකම රුපියල් දහසය ලක්ෂ අසූපන්දහසක් පමණ වන බවට තක්සේරු කර ඇත.
කාත්තන්කුඩි පොලිස් ස්ථානයේ වැඩබලන ස්ථානාධිපති එම්. නන්දන මහතාගේ මඟපෙන්වීම යටතේ වැඩබලන අපරාධ විමර්ශන අංශයේ ස්ථානාධිපති ඒ.එම්.එස්.ඒ. රහීම් මහතා ඇතුළු පොලිස් කණ්ඩායමක් විසින් සිදුකළ විමර්ශනවලදී අවුරුදු 17, 17 සහ 56 යන වයස්වල පසුවන සැකකරුවන් තිදෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ. අත්අඩංගුවට ගත් අය අතරින් එක් අයෙකු නිවෙස් හිමියාගේ ඥාතියෙකු බවට අනාවරණය වී ඇත.
සැකකරුවන්ගෙන් සිදුකළ ප්රශ්න කිරීම්වලදී සොරාගත් රන් භාණ්ඩවලින් කොටසක් වෙරළ පාරේ පිහිටි ප්රසිද්ධ ස්වර්ණාභරණ අලෙවිසැලකට විකුණා තිබියදී සොයාගෙන ඇති අතර, එහි වටිනාකම රුපියල් දහතුන් ලක්ෂ අසූපන්දහසකි. මීට අමතරව සැකකරුවන් දෙදෙනෙකු සන්තකයේ තිබී රුපියල් හයලක්ෂ අසූපන්දහසක මුදලක්ද සොයාගෙන ඇති අතර, තුන්වන සැකකරු තමන්ට ලැබුණු මුදල් කොටස සම්පූර්ණයෙන්ම වියදම් කර ඇති බව පොලිසිය පවසයි. කාත්තන්කුඩි පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice
දේශීය පුවත්
The Kattankudy Police have arrested three suspects, including a close relative of the homeowner, in connection with a major gold robbery in New Kattankudy, Batticaloa. Following their production before the Batticaloa Magistrate's Court, Magistrate A. Dharshini ordered the suspects remanded until November 20.
The burglary occurred on November 5 when perpetrators broke into a house in New Kattankudy and stole four and a half sovereigns of gold jewelry kept inside a bag hung on a clothes stand. The stolen ornaments were valued at approximately LKR 1,685,000.
Under the guidance of Acting OIC of Kattankudy Police M. Nandana, an investigation team led by Acting Crime OIC A.M.S.A. Raheem arrested the three suspects aged 17, 17, and 56 years. Preliminary inquiries revealed that one of the suspects was a relative of the victimized homeowner.
During subsequent interrogations, detectives traced a portion of the stolen gold items sold to a prominent jewelry store on Beach Road, recovering gold valued at LKR 1,385,000. Police also seized LKR 685,000 in cash from two suspects, while the third suspect had reportedly spent his entire share. Kattankudy Police are proceeding with further investigations.
KR TV Network / KR TV Lankan Voice
Local News




Comments