கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு தொடர்பான மீள்விழிப்பூட்டலும் முன்னெச்சரிக்கையும்: நாடு முழுவதும் நவம்பர் 18 வரை நீடிக்கும் மோசமான வானிலை! අධික වර්ෂාව, ගංවතුර සහ නායයෑම් සම්බන්ධයෙන් නැවත අනතුරු ඇඟවීමක්: නොවැම්බර් 18 දක්වා දිවයින පුරා පවතින අයහපත් කාලගුණය! Comprehensive weather warning on heavy rains, floods, and landslides: Severe weather to persist across Sri Lanka until November 18!
அதிக ஈரப்பதன் மிக்க கீழைக் காற்றுக் களின் வீசுகை காரணமாக நாடு முழுவதும் பரவலாகப் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 18.11.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் வானிலை ஆய்வாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா விரிவான மீள்விழிப்பூட்டல் மற்றும் முன்னெச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக நாளையும் (11.11.2026), நாளை மறுதினம் (12.11.2026) மற்றும் எதிர்வரும் 13.11.2026 வரையும் பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்கள் கனமழை முதல் மிகக் கனமழை பெறும் வாய்ப்புள்ளன. இந்த மாவட்டங்கள் ஏற்கனவே கனமழை பெற்று நிலம் நிரம்பி சில இடங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று தினங்களும் (11.11.2026 முதல் 13.11.2026 வரை) கனமழை கிடைக்கும் என்பதனால் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனவே பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களில் உள்ள மக்கள் எதிர்வரும் மூன்று தினங்களும் வெள்ளப்பெருக்கு மற்றும் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி மாவட்டங்களில் மண் முழு ஈரப்பதனைக் கொண்டுள்ளது. தொடர்ந்தும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே நிலச்சரிவு அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் இப்பகுதி மக்கள் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பிலும் மிக மிக அவதானமாக இருப்பது அவசியம்.
எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இம்மாகாணங்களிலும் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகின்றது. எனவே இம்மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்த வாய்ப்புக்கள் உள்ளதால் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் சற்று அவதானமாக இருப்பது அவசியமாகும்.
புதிய தாழமுக்க உருவாக்கம்:
எதிர்வரும் 13.11.2026 அன்று அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது ஆரம்பத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்து, பின்னர் வடக்கு நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.
இதனால் மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுவா, தெற்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாகவும் இடையிடையே மிகக் கனமழையும் கிடைக்கும் வாய்ப்புள்ளதால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அம்பாந்தோட்டை, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதி கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளன. இதனால் மீளவும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
காற்று வீசுகை:
இந்த தாழமுக்கம் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 50 கி.மீ. வேகத்திலும், கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எதிர்வரும் 18.11.2026 வரை நாடு முழுவதும் மோசமான வானிலை நிலவும். குறிப்பாக மத்திய மலைநாடு, தென்மேல் தாழ்நிலங்கள், மேல் மாகாணம் போன்றவற்றில் மோசமான வானிலை தூண்டும் அனர்த்தங்கள் நிகழும் வாய்ப்புள்ளது.
பொதுமக்களுக்கான முக்கிய அவசர வழிகாட்டல்கள்:
ஆறுகளை அண்மித்தும், தாழ்நிலப் பகுதிகளிலும், நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேறும் பகுதிகளிலும் உள்ள மக்கள் கனமழை மற்றும் ஆறுகளின் பெருக்கெடுப்பு போன்றவற்றினால் ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, பதுளை, குருநாகல் மாவட்டங்களில் உள்ள மக்கள் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.
கனமழையினாலும் தற்காலிக வேகமான காற்று வீசுகையினாலும் பாதிக்கப்படக்கூடிய கட்டுமானங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
வீடுகளுக்கு அருகில் கனமழை மற்றும் காற்றினால் பாதிக்கப்படக்கூடிய மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
சகல வகைகளிலுமான சுற்றுலாப் பயணங்களையும் எதிர்வரும் 18.11.2026 வரை ஒத்திவைக்க வேண்டும்.
எதிர்வரும் 14.11.2026 முதல் 18.11.2026 வரை வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வானிலை நிகழ்வுகளை நாம் தடுக்க முடியாது. ஆனால் எமது விழிப்புணர்வு மற்றும் தயார்ப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்கவும் குறைக்கவும் முடியும். இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில் தயாராக இருந்து அனர்த்தம் நிகழாது விட்டாலும் எந்தப் பாதிப்பும் இல்லை; ஆனால் தயாராக இல்லாமல் இருந்து அனர்த்தம் நிகழ்ந்தால் அதன் பாதிப்புக்கள் மிக அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice
வானிலைச் செய்தி
අධික ආර්ද්රතාව සහිත නැගෙනහිර සුළං ප්රවාහය හේතුවෙන් දිවයින පුරා බොහෝ ප්රදේශවලට දැනට ලැබෙන වර්ෂාව එළඹෙන 2026.11.18 දක්වා අඛණ්ඩව පැවතිය හැකි බව යාපනය විශ්වවිද්යාලයේ ජ්යෙෂ්ඨ කථිකාචාර්ය සහ කාලගුණ විද්යාඥ ආචාර්ය නාගමුතු ප්රතිපරාජා මහතා සවිස්තරාත්මක නැවත අනතුරු ඇඟවීමේ නිවේදනයක් නිකුත් කරමින් සඳහන් කරයි.
විශේෂයෙන් බදුල්ල, නුවරඑළිය, මහනුවර, මාතලේ, කෑගල්ල, රත්නපුර, කොළඹ, ගාල්ල, ගම්පහ සහ කුරුණෑගල යන දිස්ත්රික්කවලට හෙට (11.11.2026), අනිද්දා (12.11.2026) සහ එළඹෙන 13.11.2026 දක්වා තද සිට ඉතා තද වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත. මෙම දිස්ත්රික්කවලට දැනටමත් අධික වැසි ලැබී පස ජලයෙන් සංතෘප්ත වී සමහර ස්ථානවල ගංවතුර තත්ත්වයන්ද හටගෙන තිබේ.
මෙම දිස්ත්රික්කවලට ඉදිරි දින තුන සඳහා (11.11.2026 සිට 13.11.2026 දක්වා) තද වැසි ලැබෙන බැවින් ගංවතුර විපත් ඇතිවීමේ ඉහළ සම්භාවිතාවක් පවතී. එබැවින් බදුල්ල, නුවරඑළිය, මහනුවර, මාතලේ, කෑගල්ල, රත්නපුර, කොළඹ, ගාල්ල, ගම්පහ සහ කුරුණෑගල දිස්ත්රික්කවල ජනතාව ඉදිරි දින තුන තුළ ගංවතුර සහ ගිගුරුම් සහිත වැසි මෙන්ම අකුණු අනතුරු පිළිබඳව ඉතා විමසිලිමත් විය යුතුය.
නුවරඑළිය, මහනුවර, බදුල්ල, මාතලේ, කෑගල්ල, කුරුණෑගල සහ රත්නපුර දිස්ත්රික්කවල පසෙහි තෙතමනය උපරිම මට්ටමක පවතින අතර දිගටම වැසි ඇදහැලීමේ හැකියාවක් පවතී. එබැවින් නායයෑම් විපත් ඇතිවීමේ අවදානම ඉහළ බැවින් මෙම ප්රදේශවල ජනතාව නායයෑම් ආපදා පිළිබඳව ඉතා විමසිලිමත් විය යුතුය.
උතුරු, නැගෙනහිර, උතුරු මැද සහ වයඹ පළාත්වලටද ඉදිරි දිනවලදී වරින් වර මධ්යස්ථ සිට තද වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත.
එම පළාත්වලටද අඛණ්ඩ වර්ෂාපතනයක් ලැබෙන බැවින් පහත් බිම් ප්රදේශවල ගංවතුර ආපදා ඇතිවීමේ හැකියාවක් පවතින හෙයින් එම පහත් බිම්වල වෙසෙන ජනතාවද ප්රවේශම් විය යුතුය.
නව පීඩන අවපාතයක් නිර්මාණය වීම:
2026.11.13 වන දින අලුයම ගිනිකොනදිග බෙංගාල බොක්කෙහි පීඩන අවපාතයක් ඇති වීමට ඉඩ ඇත. එය මුලින් බටහිර දෙසට ගමන් කර ශ්රී ලංකාවේ නැගෙනහිර වෙරළට ළඟා වී පසුව උතුරු දෙසට ගමන් කිරීමට ඉඩ තිබේ.
මේ හේතුවෙන් එළඹෙන නොවැම්බර් 14 වන දින සිට 18 වන දින දක්වා උතුරු, නැගෙනහිර, බටහිර, මධ්යම, සබරගමුව, දකුණ, උතුරු මැද සහ ඌව පළාත්වල නැවත තද වැසි සිට ඉතා තද වැසි ඇතිවිය හැකිය. අඛණ්ඩ හා කඩින් කඩ ඉතා තද වැසි ඇදහැලීමෙන් අම්පාර, මඩකලපුව, ත්රිකුණාමලය, මුලතිව්, යාපනය, කිලිනොච්චිය, මන්නාරම, වවුනියාව, හම්බන්තොට, නුවරඑළිය, බදුල්ල, මහනුවර, මාතලේ, කෑගල්ල, රත්නපුර, කොළඹ, ගාල්ල, ගම්පහ සහ කුරුණෑගල දිස්ත්රික්කවලට අතිශය තද වර්ෂාපතනයක් පතිත විය හැකි අතර, මෙම දිස්ත්රික්කවල යළිත් ගංවතුර ආපදා හටගැනීමේ අවදානමක් පවතී.
සුළඟේ වේගය:
මෙම පීඩන අවපාතය හේතුවෙන් නොවැම්බර් 16 සහ 17 යන දිනවල අම්පාර, මඩකලපුව, ත්රිකුණාමලය, මුලතිව්, යාපනය, කිලිනොච්චිය, මන්නාරම, වවුනියාව සහ හම්බන්තොට දිස්ත්රික්කවල ගොඩබිම් ප්රදේශවල සුළං වේගය පැයට කිලෝමීටර 35-50 දක්වාත්, මුහුදු ප්රදේශවල සුළං වේගය පැයට කිලෝමීටර 40-65 දක්වාත් ඉහළ යා හැකිය.
2026.11.18 වන දින දක්වා රට පුරා අයහපත් කාලගුණයක් පවතිනු ඇත. විශේෂයෙන් මධ්යම කඳුකරය, නිරිතදිග පහත්බිම් සහ බස්නාහිර පළාත තුළ ආපදා තත්ත්වයන් ඇතිවීමේ වැඩි සම්භාවිතාවක් පවතී.
මහජනතාව සඳහා වැදගත් ආරක්ෂිත උපදෙස්:
ගංගා ආසන්නයේ, පහත් බිම් ප්රදේශවල සහ ජලාශවලින් ජලය පිටාර ගලන ප්රදේශවල ජීවත් වන ජනතාව අධික වර්ෂාව සහ ජල මට්ටම් ඉහළ යාමෙන් සිදුවන ගංවතුර විපත් පිළිබඳව දැඩි අවධානයෙන් පසුවිය යුතුය.
මහනුවර, නුවරඑළිය, මාතලේ, කෑගල්ල, බදුල්ල සහ කුරුණෑගල දිස්ත්රික්කවල ජනතාව නායයෑම් ආපදා පිළිබඳව අතිශය විමසිලිමත් විය යුතුය.
තද වැසි සහ තාවකාලික තද සුළං හේතුවෙන් අනතුරට ලක්විය හැකි ගොඩනැඟිලි හා අනාරක්ෂිත ව්යුහයන් කෙරෙහිද අවධානය යොමු කළ යුතුය.
නිවාස ආසන්නයේ ඇති අනතුරුදායක ගස් පිළිබඳව දැඩි ප්රවේශම්කාරී පියවර ගත යුතුය.
සියලු ආකාරයේ විනෝද චාරිකා සහ සංචාරක කටයුතු 2026.11.18 දක්වා කල් තැබිය යුතුය.
2026.11.14 සිට 2026.11.18 දක්වා උතුරු, නැගෙනහිර සහ ගිනිකොනදිග මුහුදු ප්රදේශ දැඩි ලෙස රළු විය හැකි බැවින් ධීවරයින් කිසිදු හේතුවක් මත මුහුදු යාමෙන් වැළකී සිටිය යුතුය.
කාලගුණ විපත් වළක්වා ගත නොහැකි වුවද, පූර්ව දැනුවත්භාවය සහ සූදානම හරහා සිදුවිය හැකි හානි අවම කරගත හැකිය. මෙම පූර්ව අනතුරු ඇඟවීම මත පදනම්ව ජනතාව සූදානම්ව සිට කිසිදු ආපදාවක් සිදු නොවූවද කිසිදු පාඩුවක් සිදු නොවන නමුත්, සූදානම් නොවී සිට ආපදාවක් සිදුවුවහොත් සිදුවන විනාශය ඉතා විශාල බව කාලගුණ විද්යාඥවරයා අවධාරණය කරයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice
කාලගුණ පුවත්
Climatologist Dr. Nagamuthu Pratheeparaja has issued a comprehensive advisory and safety warning indicating that widespread heavy rainfall triggered by moisture-laden easterly airflows will persist across Sri Lanka until November 18, 2026.
Specifically, Badulla, Nuwara Eliya, Kandy, Matale, Kegalle, Ratnapura, Colombo, Galle, Gampaha, and Kurunegala districts are forecast to experience heavy to very heavy precipitation over the coming three days (from 11.11.2026 to 13.11.2026). As these regions have already sustained intense downpours with soils fully saturated and early flash floods reported in localized sectors:
Heavy rain over these three days creates a very high probability of localized inundations and flash floods. Residents across Badulla, Nuwara Eliya, Kandy, Matale, Kegalle, Ratnapura, Colombo, Galle, Gampaha, and Kurunegala must exercise high vigilance regarding flood threats, thunderstorm activity, and lightning.
Soil moisture is completely saturated across Nuwara Eliya, Kandy, Badulla, Matale, Kegalle, Kurunegala, and Ratnapura districts. With continuous downpours expected, the hazard of slope failures and landslides remains severe. Communities residing in hilly terrain must remain on high alert.
Over the coming days, the Northern, Eastern, North Central, and North Western provinces will also receive intermittent moderate to heavy showers.
Saturated catchment areas in these provinces indicate that low-lying areas face direct flooding hazards, necessitating heightened caution among local residents.
Formation of a Fresh Atmospheric Depression:
In the early morning hours of November 13, 2026, an atmospheric depression is likely to develop over the southeast Bay of Bengal. Initially tracking westward towards the eastern coast of Sri Lanka, it is subsequently expected to steer northward.
Consequently, from November 14 to 18, heavy to very heavy rainfall is forecast across the Northern, Eastern, Western, Central, Sabaragamuwa, Southern, North Central, and Uva provinces. Prolonged downpours with intermittent severe bursts may deliver excessive rainfall across Ampara, Batticaloa, Trincomalee, Mullaitivu, Jaffna, Kilinochchi, Mannar, Vavuniya, Hambantota, Nuwara Eliya, Badulla, Kandy, Matale, Kegalle, Ratnapura, Colombo, Galle, Gampaha, and Kurunegala districts, sparking recurring flood situations.
Wind Patterns:
Under the influence of the approaching depression, wind speeds across Ampara, Batticaloa, Trincomalee, Mullaitivu, Jaffna, Kilinochchi, Mannar, Vavuniya, and Hambantota districts on November 16 and 17 may reach 35 to 50 km/h over land surfaces and 40 to 65 km/h across maritime waters.
Adverse meteorological conditions will persist island-wide until 18.11.2026, with elevated disaster probabilities concentrated across the central highlands, southwestern lowlands, and Western Province.
Key Emergency Safety Guidelines:
Residents in low-lying zones, riverbanks, and areas adjoining reservoir spillways must maintain extreme vigilance against rapidly swelling rivers and flash floods.
Populations across Kandy, Nuwara Eliya, Matale, Kegalle, Badulla, and Kurunegala districts must strictly monitor hillsides and adhere to landslide safety advisories.
Structures, temporary rooftops, and signages susceptible to damage from localized wind gusts and soaking rains should be reinforced or monitored.
Take precautions regarding large or decayed trees situated near residential buildings that could be uprooted by rain-softened ground and gusty winds.
Postpone all non-essential excursions, leisure travels, and recreational visits across the country until November 18, 2026.
As maritime areas off the northern, eastern, and southeastern coasts will turn rough to very rough between 14.11.2026 and 18.11.2026, the fishing community is strictly urged to avoid venturing out to sea.
While meteorological phenomena cannot be halted, preparedness and timely responsiveness can drastically mitigate their damaging impacts. Being well-prepared poses no harm even if the severe scenarios fail to manifest, but unpreparedness in the face of sudden disasters carries grave consequences.
KR TV Network / KR TV Lankan Voice
Weather News












Comments