Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சிங்கராஜா வனப்பகுதியில் உயிரியல் கடத்தலில் ஈடுபட்ட 4 சீன நாட்டவர்கள் கைது - எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல்! සිංහරාජ වනාන්තරයේ නීති විරෝධී ලෙස කෘමීන් සහ උරගයින් එකතු කළ චීන ජාතිකයින් 4 දෙනෙකු අත්අඩංගුවට - 23 වනදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කෙරේ! Four Chinese Nationals Arrested for Illegally Collecting Insects and Reptiles in Sinharaja Forest - Remanded Until November 23!


சிங்கராஜா வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பூச்சிகள் மற்றும் ஊர்வன வகைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் உட்பட சீனாவைச் சேர்ந்த நால்வரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உடவலவ தேசிய பூங்காவின் பனஹடுவ வனப் பாதுகாப்பு அலுவலகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 40 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஊர்வன மற்றும் பூச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


 சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உயிரினங்களும் கலவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கைப்பற்றப்பட்ட உயிரினங்களைச் சரியாக அடையாளம் காண்பதற்காக தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்குமாறும், அதன் பின்னர் அவற்றை மீண்டும் சுற்றாடலில் விடுவிக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு


සිංහරාජ වනාන්තර ප්‍රදේශයේ නීති විරෝධී ලෙස කෘමීන් සහ උරගයින් එකතු කරමින් සිටි කාන්තාවක් ඇතුළු චීන ජාතිකයින් සිව්දෙනෙකු වනජීවී දෙපාර්තමේන්තු නිලධාරීන් විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ. උඩවලව ජාතික වනෝද්‍යානයේ පනහඩුව වනජීවී අඩවි ආරක්ෂක කාර්යාලයට ලැබුණු රහසිගත තොරතුරකට අනුව සිදුකළ විශේෂ වැටලීමකදී මොවුන් අත්අඩංගුවට ගෙන ඇත.

අත්අඩංගුවට ගත් සැකකරුවන් සතුව තිබී වෙනස් විශේෂ 40 කට අයත් උරගයින් සහ කෘමීන් 250 කට වැඩි ප්‍රමාණයක් සොයාගෙන තිබේ.


 සැකකරුවන් සහ අත්අඩංගුවට ගත් සතුන් කලවාන මහේස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව, සැකකරුවන් එළඹෙන 23 වනදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට මහේස්ත්‍රාත්වරයා නියෝග කළේය. තවද, අත්අඩංගුවට ගත් සතුන් නිවැරදිව හඳුනා ගැනීම සඳහා ජාතික කෞතුකාගාරය වෙත යොමු කරන ලෙසත්, පසුව උන් නැවත ස්වාභාවික පරිසරයට මුදා හරින ලෙසත් අධිකරණය නියෝග කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / පරිසරය සහ වනජීවී ආරක්ෂණය


Wildlife Conservation officers have arrested four Chinese nationals, including a woman, for illegally collecting insects and reptiles in the Sinharaja Forest Reserve. The arrests were executed during a special raid conducted following a confidential tip-off received by the Panahaduwa Wildlife Range Office of the Udawalawe National Park.


Over 250 specimens of reptiles and insects belonging to around 40 distinct species were seized from the suspects. Upon being produced before the Kalawana Magistrate's Court, the suspects were ordered to be remanded until November 23. Furthermore, the Magistrate directed that the seized living and preserved specimens be forwarded to the National Museum for precise identification before being safely released back into their natural environment.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Environment and Wildlife Protection

Comments