ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவு: காத்தான்குடியில் சர்வதேச தரத்தில் மின்னொளியில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடர்! ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ 40 වැනි සංවත්සරය වෙනුවෙන් කාත්තන්කුඩියේදී ජාත්යන්තර මට්ටමේ රාත්රී සැහැල්ලු පන්දු ක්රිකට් තරගාවලියක්! Grand floodlit softball cricket tournament of international standard in Kattankudy marks Sri Lanka Muslim Congress 40th anniversary!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் நவம்பர் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் காத்தான்குடியில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. காத்தான்குடி கிரிக்கெட் அபிவிருத்தி நிறுவனத்தின் வழிகாட்டலில் இரவு நேரப் போட்டிகளாக (Floodlit matches) நடாத்தப்படவுள்ள இச்சுற்றுத்தொடர் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11.11.2026) கடற்கரை வீதியிலுள்ள மெரின் மஹால் மண்டபத்தில் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டித் தொடரில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முன்னணி விளையாட்டுக் கழகங்கள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த கட்டமாக ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடிப் பிராந்திய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும். அதிலும் வெற்றிபெறும் கழகங்கள் மாகாண மட்டத்திலான இறுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதிபெறும். வெற்றியீட்டும் அணிகளுக்கு 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நினைவுப் பரிசில்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்படவுள்ளன. இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் (SLC) அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ நடுவர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் தகைமை வாய்ந்த நடுவர்களின் நடுநிலைத் தீர்ப்புகளுடன், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழி வர்ணனைகளுடன் சர்வதேசத் தரத்தில் இத்தொடர் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு, நான்கு தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் பேரியக்கமாக வளர்ந்துள்ள கட்சியின் மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமையவுள்ளது.
இப்போட்டிகளின் ஆரம்பம் மற்றும் இறுதி நிகழ்வுகளில் கட்சியின் தலைவர், செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர். இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பிரதிப் பொருளாளர் கே.எல்.எம். மும்தாஸ் மதனி, உயர்பீட உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் காத்தான்குடி கிரிக்கெட் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice
விளையாட்டுச் செய்தி
ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ (SLMC) 40 වැනි සංවත්සරය නිමිත්තෙන් සංවිධානය කරනු ලබන දැවැන්ත සැහැල්ලු පන්දු ක්රිකට් තරගාවලියක් එළඹෙන නොවැම්බර් 22, 23 සහ 24 යන දිනවල කාත්තන්කුඩියේදී ඉතා උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්වීමට කටයුතු සූදානම් කර තිබේ. කාත්තන්කුඩි ක්රිකට් සංවර්ධන ආයතනයේ මඟපෙන්වීම යටතේ රාත්රී විදුලි ආලෝක ධාරා (Floodlit) මධ්යයේ පැවැත්වෙන මෙම තරගාවලිය පිළිබඳ මාධ්ය දැනුවත් කිරීමේ හමුවක් පක්ෂයේ නියෝජ්ය නායක, පාර්ලිමේන්තු මන්ත්රී එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලා මහතාගේ ප්රධානත්වයෙන් අද (11.11.2026) මැරින් මහල් ශාලාවේදී පැවැත්විණි.
කාත්තන්කුඩි සහ ඒ අවට ප්රදේශ නියෝජනය කරමින් ක්රීඩා සමාජ 30කට අධික සංඛ්යාවක් තරගාවලියට එක්වීමට නියමිතය. මෙහිදී ජයග්රහණය කරන කණ්ඩායම් එරාවුර් සහ ඕට්ටමාවඩි කලාපීය කණ්ඩායම් සමඟ තරග වැදීමට නියමිත අතර, ඉන් ජය ලබන කණ්ඩායම් පළාත් මට්ටමේ අවසන් වටයේ තරග සඳහා සුදුසුකම් ලබනු ඇත. ජයග්රාහී කණ්ඩායම් වෙනුවෙන් 40 වන සංවත්සරය සිහිපත් කරමින් විශේෂ ත්යාග සහ කුසලාන පිරිනැමේ. මෙම තරගාවලිය ශ්රී ලංකා ක්රිකට් ආයතනයේ (SLC) අනුමත සහ සුදුසුකම්ලත් විනිසුරුවරුන්ගේ සහභාගීත්වයෙන් මෙන්ම දෙමළ, සිංහල සහ ඉංග්රීසි යන ත්රිභාෂා විස්තර විචාරයන්ද සහිතව ජාත්යන්තර ප්රමිතියෙන් යුතුව පැවැත්වීමට සියලු කටයුතු යොදා ඇත. 1986 වසරේදී දිවංගත නායක එම්.එච්.එම්. අෂ්රෆ් මහතා විසින් ආරම්භ කරන ලද පක්ෂයේ 40 වසරක සන්ධිස්ථානය මෙයින් සනිටුහන් කෙරේ.
තරගාවලියේ ආරම්භක සහ අවසන් මහා උත්සවයන් සඳහා පක්ෂයේ නායක, ලේකම්, පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් ඇතුළු උත්තරීතර මණ්ඩලයේ සාමාජිකයින් ප්රධාන ආරාධිතයින් ලෙස එක්වීමට නියමිතය. අද පැවති මාධ්ය හමුව සඳහා පක්ෂයේ නියෝජ්ය භාණ්ඩාගාරික කේ.එල්.එම්. මුම්තාස් මදනී, උත්තරීතර මණ්ඩල සාමාජිකයින්, ක්රීඩා සමාජ නියෝජිතයින් සහ කාත්තන්කුඩි ක්රිකට් සංවර්ධන ආයතනයේ නිලධාරීන් ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice
ක්රීඩා පුවත්
Marking the 40th anniversary of the Sri Lanka Muslim Congress (SLMC), a major floodlit softball cricket tournament of international standard is scheduled to take place in Kattankudy on November 22, 23, and 24. A media briefing outlining the arrangements was held today (11.11.2026) at the Marine Mahal hall under the patronage of SLMC Deputy Leader and Member of Parliament M.L.A.M. Hizbullah.
Over 30 leading sports clubs representing Kattankudy and surrounding divisions will compete in the preliminary rounds. Winning teams will advance to play against regional squads from Eravur and Ottamavadi, with top performers qualifying for the provincial championships. Commemorative shields and special awards celebrating the 40th milestone will be presented to outstanding teams. The tournament will be officiated by certified umpires accredited by Sri Lanka Cricket (SLC) and will feature trilingual live match commentary in Tamil, Sinhala, and English to ensure an international standard of sporting delivery. The event honors four decades of leadership since the party's foundation in 1986 by late leader M.H.M. Ashraff.
SLMC leader, general secretary, parliamentarians, and high-command members will grace both the opening and grand closing ceremonies as Chief Guests. Today’s media conference was attended by SLMC Deputy Treasurer K.L.M. Mumthas Madani, high-command members, sports club executives, tournament coordinators, and officials of the Kattankudy Cricket Development Association.
KR TV Network / KR TV Lankan Voice
Sports News












Comments