வங்காள விரிகுடாவில் சூறாவளி அபாயம்: மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்குச் சிவப்பு எச்சரிக்கை - இன்று காலை 5:30 மணி முதல் கடலுக்குச் செல்லத் தடை! බෙංගාල බොක්කේ සුළි කුණාටු අවදානමක්: ධීවරයින්ට සහ නාවික ප්රජාවට රතු නිවේදනයක් - අද පෙරවරු 5.30 සිට මුහුදු යාම තහනම්! Cyclone Threat in the Bay of Bengal: Red Alert Issued to Fishermen and Naval Community - Sea Travel Banned from 5:30 AM Today!
இலங்கைக் கடற்கரையை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என்பதால், இன்று சனிக்கிழமை (2026 நவம்பர் 14) காலை 5:30 மணி முதல் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை மையம், நேற்று நவம்பர் 13 மாலை 5:00 மணிக்கு சிவப்பு நிற "நடவடிக்கை எடுப்பதற்கான" (TAKE ACTION) அதிஉச்ச எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை நவம்பர் 15 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் இந்த வளிமண்டலச் சுழற்சி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 15-க்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Depression), அதனைத் தொடர்ந்து நவம்பர் 16 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் சூறாவளியாகவும் (Cyclone) வலுப்பெறும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தக் கடற்பயணக் கட்டுப்பாடு, வட அட்சரேகை 05 முதல் 15 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 90 பாகைக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கும் பொருந்தும்.
எனவே, தற்போது இந்த அபாயகரமான ஆழ்கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்புமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / வானிலை எச்சரிக்கை, சூறாவளி அபாயம் மற்றும் மீனவர் பாதுகாப்பு (14/11/2026)
බෙංගාල බොක්කේ සුළි කුණාටු අවදානමක්: ධීවරයින්ට සහ නාවික ප්රජාවට රතු නිවේදනයක් - අද පෙරවරු 5.30 සිට මුහුදු යාම තහනම්!
ශ්රී ලංකා වෙරළට ඔබ්බෙන් වූ ගැඹුරු මුහුදු ප්රදේශ සහ ගිනිකොනදිග බෙංගාල බොක්ක ප්රදේශයේ පවතින අඩු පීඩන කලාපය සුළි කුණාටුවක් දක්වා වර්ධනය විය හැකි බැවින්, අද සෙනසුරාදා (2026 නොවැම්බර් 14) පෙරවරු 5.30 සිට එම මුහුදු ප්රදේශවලට නොයන ලෙස ධීවර සහ නාවික ප්රජාවට දැඩි ලෙස අනතුරු අඟවා තිබේ.
කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුවේ ස්වාභාවික විපත් පිළිබඳ පූර්ව අනතුරු ඇඟවීමේ මධ්යස්ථානය විසින් ඊයේ (නොවැම්බර් 13) පස්වරු 5.00ට රතු වර්ණයෙන් යුත් "ක්රියාත්මක වන්න" (TAKE ACTION) යන අනතුරු ඇඟවීමේ නිවේදනය නිකුත් කර ඇත. මෙම නිවේදනය හෙට නොවැම්බර් 15 වනදා දක්වා බලපැවැත්වේ.
දැනට ගිනිකොනදිග බෙංගාල බොක්ක ආශ්රිතව පවතින මෙම වායුගෝලීය කැළඹිලි ස්වභාවය වයඹ දෙසට ගමන් කරමින්, නොවැම්බර් 15 වනදා වන විට පීඩන අවපාතයක් (Depression) බවටත්, ඉන් අනතුරුව නොවැම්බර් 16 වනදා වන විට මධ්යම බෙංගාල බොක්ක ප්රදේශයේදී සුළි කුණාටුවක් (Cyclone) දක්වාත් වර්ධනය වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
මෙම මුහුදු යාමේ තහනම උතුරු අක්ෂාංශ 05 - 15 සහ නැගෙනහිර දේශාංශ 80 - 90 අතර පිහිටි ගැඹුරු මුහුදු ප්රදේශවලටත්, කන්කසන්තුරේ සිට ත්රිකුණාමලය සහ පොතුවිල් හරහා හම්බන්තොට දක්වා වන වෙරළට ඔබ්බෙන් වූ මුහුදු ප්රදේශවලටත් අදාළ වේ.
දැනට මෙම අවදානම් සහගත මුහුදු ප්රදේශවල ධීවර හා නාවික කටයුතුවල නිරත වී සිටින සියලු දෙනා වහාම ආරක්ෂිත ස්ථාන වෙත පැමිණෙන ලෙසත්, කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව විසින් ඉදිරියට නිකුත් කරනු ලබන නිවේදන පිළිබඳව දැඩි අවධානයෙන් පසුවන ලෙසත් දැනුම් දෙනු ලැබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / කාලගුණ අනතුරු ඇඟවීම්, සුළි කුණාටු අවදානම සහ ධීවර ආරක්ෂාව (14/11/2026)
Cyclone Threat in the Bay of Bengal: Red Alert Issued to Fishermen and Naval Community - Sea Travel Banned from 5:30 AM Today!
A strict warning has been issued to fishermen and the naval community advising them not to venture into the deep-sea areas off the coast of Sri Lanka and the Southeast Bay of Bengal starting from 5:30 AM today, Saturday, November 14, 2026, due to a low-pressure system likely to intensify into a cyclone.
The Natural Hazards Early Warning Centre of the Department of Meteorology issued a Red "TAKE ACTION" advisory at 5:00 PM yesterday, November 13, which will remain effective until tomorrow, November 15.
According to the forecast, the prevailing atmospheric disturbance in the Southeast Bay of Bengal is expected to move northwestwards, intensifying into a depression by November 15, and subsequently developing into a cyclonic storm over the Central Bay of Bengal by November 16.
This restriction applies to the deep-sea areas bounded between latitudes 05°N – 15°N and longitudes 80°E – 90°E, as well as the coastal waters extending from Kankesanthurai to Hambantota via Trincomalee and Pottuvil.
All fishing vessels and naval craft currently operating within these hazardous maritime zones are strongly advised to return to safe harbors immediately, and the public is urged to remain vigilant and stay updated with future weather bulletins issued by the Department of Meteorology.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Weather Alert, Cyclone Warning and Maritime Safety (14/11/2026)
Comments