Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வங்காள விரிகுடாவில் உருவான 'அக்வான்' புயல் எச்சரிக்கை: இன்று முதல் நான்கு மாகாணங்களில் கனமழைக்கும் கடல் கொந்தளிப்பிற்கும் வாய்ப்பு - நாகமுத்து பிரதீபராஜா விசேட அறிவிப்பு! බෙංගාල බොක්කේ නිර්මාණය වූ 'අක්වාන්' සුළි කුණාටු අනතුරු ඇඟවීම: අද සිට පළාත් හතරකට තද වැසි සහ මුහුදු රළු වීමේ අවදානමක් - නාගමුතු ප්‍රදීපරාජා විශේෂ නිවේදනය! 'Akvan' Cyclone Warning in the Bay of Bengal: Heavy Rains in Four Provinces and Rough Seas Expected from Today - Special Advisory by Nagamuthu Pradeeparaja!







தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உறுதியான தாழமுக்கம் உருவாகியுள்ளதாகவும், இது வலுவடைந்து புயலாக மாற்றமடையவுள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Pradeeparaja) தெரிவித்துள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை (2026 நவம்பர் 13) இரவு 9.00 மணிக்கு அவர் வெளியிட்டுள்ள விசேட வானிலை எச்சரிக்கை அறிக்கையில், உருவாகவுள்ள இந்தப் புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த 'அக்வான்' (Akvan) என்ற பெயர் சூட்டப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய (நவம்பர் 13 இரவு 8.45 மணி) வானிலை மாதிரிகளின் கணிப்பின்படி, இந்தப் புயலானது எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி இரவு இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள 'மொலட்டிமோகா' (Molatimokha) என்னும் இடத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், புயலின் நகர்வுப் பாதை மற்றும் சாத்தியமான பாதிப்புகள் தொடர்பாக வானிலை மாதிரிகளிடையே வேறுபாடுகள் காணப்படுவதால், எதிர்வரும் நாட்களிலேயே இதன் கரையைக் கடக்கும் இடம் குறித்த இறுதி முடிவைப் பெற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்தப் புயலின் தாக்கம் காரணமாக இன்று சனிக்கிழமை (நவம்பர் 14) கிழக்கு மாகாணத்திலும், நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் வடமத்திய ஆகிய நான்கு மாகாணங்களிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மேலும், நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான நாட்களில் நாட்டின் மழை நிலைமைகள் குறித்து நவம்பர் 15 ஆம் திகதியன்றே உறுதியான நிலைப்பாட்டிற்கு வர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த உறுதியான தாழமுக்கத்தினால் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால், மீனவர்கள் இன்று (நவம்பர் 14) முதல் எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என நாகமுத்து பிரதீபராஜா கடுமையாக எச்சரித்துள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / வானிலை எச்சரிக்கை, 'அக்வான்' புயல் மற்றும் மீனவர் பாதுகாப்பு (14/11/2026)


බෙංගාල බොක්කේ නිර්මාණය වූ 'අක්වාන්' සුළි කුණාටු අනතුරු ඇඟවීම: අද සිට පළාත් හතරකට තද වැසි සහ මුහුදු රළු වීමේ අවදානමක් - නාගමුතු ප්‍රදීපරාජා විශේෂ නිවේදනය!


ගිනිකොනදිග බෙංගාල බොක්ක ප්‍රදේශයේ ප්‍රබල පීඩන අවපාතයක් නිර්මාණය වී ඇති බවත්, එය තවදුරටත් වර්ධනය වී සුළි කුණාටුවක් බවට පත්වන බවත් යාපනය විශ්වවිද්‍යාලයේ භූගෝල විද්‍යා අංශයේ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය නාගමුතු ප්‍රදීපරාජා (Nagamuthu Pradeeparaja) මහතා ප්‍රකාශ කරයි.


ඊයේ සිකුරාදා (2026 නොවැම්බර් 13) රාත්‍රී 9.00ට ඒ මහතා විසින් නිකුත් කරන ලද විශේෂ කාලගුණ නිවේදනයේ දැක්වෙන්නේ, මෙම සුළි කුණාටුව ඉරානය විසින් යෝජනා කරන ලද 'අක්වාන්' (Akvan) යන නමින් නම් කෙරෙන බවයි.


2026 නොවැම්බර් 13 රාත්‍රී 8.45 පවතින කාලගුණ දත්ත අනුව, මෙම සුළි කුණාටුව එළඹෙන නොවැම්බර් 19 වන දින රාත්‍රියේ ඉන්දියාවේ ආන්ද්‍ර ප්‍රදේශ් හි 'මොලතිමෝඛා' (Molatimokha) ප්‍රදේශයට ආසන්න වෙරළ තීරය හරහා ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. කෙසේ වෙතත්, කුණාටුවේ ධාවන පථය සහ බලපෑම් පිළිබඳව කාලගුණ ආකෘති අතර වෙනස්කම් පවතින බැවින්, එය ගොඩබිමට ඇතුළු වන ස්ථානය පිළිබඳ අවසන් තීරණය ඉදිරි දිනවලදී තහවුරු කළ හැකි බව ඔහු සඳහන් කරයි.


මෙම කුණාටුවේ බලපෑම හේතුවෙන් අද සෙනසුරාදා (නොවැම්බර් 14) නැගෙනහිර පළාතටත්, හෙට ඉරිදා (නොවැම්බර් 15) නැගෙනහිර, උතුරු, බටහිර සහ උතුරු මැද පළාත්වලටත් මධ්‍යස්ථ සිට තද වැසි ඇති වීමට ඉඩ ඇත. නොවැම්බර් 16 වන දිනෙන් පසු දිවයිනේ වර්ෂාපතන තත්ත්වය පිළිබඳව නොවැම්බර් 15 වන දිනම නිශ්චිත නිගමනයකට පැමිණිය හැකි බව ද එම නිවේදනයේ සඳහන් වේ.


තවද, බෙංගාල බොක්කේ නිර්මාණය වී ඇති ප්‍රබල පීඩන අවපාතය නිසා ශ්‍රී ලංකාවේ උතුරු, නැගෙනහිර සහ ගිනිකොනදිග මුහුදු ප්‍රදේශ ඉතා කැළඹිලි සහිත වන බැවින්, අද (නොවැම්බර් 14) සිට කිසිදු හේතුවක් නිසා ධීවරයින් මුහුදු නොයන ලෙස නාගමුතු ප්‍රදීපරාජා මහතා දැඩි ලෙස අනතුරු අඟවා සිටී.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / කාලගුණ අනතුරු ඇඟවීම්, 'අක්වාන්' සුළි කුණාටුව සහ ධීවර ආරක්ෂාව (14/11/2026)


'Akvan' Cyclone Warning in the Bay of Bengal: Heavy Rains in Four Provinces and Rough Seas Expected from Today - Special Advisory by Nagamuthu Pradeeparaja!


A well-marked low-pressure area has formed in the Southeast Bay of Bengal and is expected to intensify into a cyclonic storm, Senior Lecturer in Geography at the University of Jaffna, Nagamuthu Pradeeparaja, has announced.


In a special weather bulletin issued at 9:00 PM last night (Friday, November 13, 2026), he noted that the developing storm will be named 'Akvan', a name proposed by Iran.


Based on weather data as of 8:45 PM on November 13, the cyclone is projected to make landfall near 'Molatimokha' in Andhra Pradesh, India, on the night of November 19, 2026. However, he pointed out that due to variations among meteorological models regarding the storm's trajectory and potential impact, a definitive conclusion on its exact landfall location can only be reached in the coming days.


Due to the influence of this weather system, moderate to heavy rainfall is likely in the Eastern Province starting today, Saturday (November 14), and across the Eastern, Northern, Western, and North Central provinces tomorrow, Sunday (November 15). A clear assessment of the rainfall situation after November 16 will be possible on November 15, he added.


Furthermore, as the Northern, Eastern, and Southeastern sea areas off Sri Lanka will remain extremely rough due to this system, Nagamuthu Pradeeparaja has strictly warned fishermen not to venture out to sea under any circumstances starting from today, November 14, noting that continuous updates will be provided on the system's intensification and rainfall conditions.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Weather Advisory, Cyclone 'Akvan' and Maritime Safety (14/11/2026)

Comments