Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை! බෙංගාල බොක්කේ ගැඹුරු අවපීඩනයක් දක්වා වර්ධනය වූ වායුගෝලීය පද්ධතිය - කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවෙන් අනතුරු ඇඟවීමක්! Deep Depression Intensifies in the Bay of Bengal – Meteorological Department Issues Warnings!


இலங்கைக்கு வடகிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுப்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து சுமார் 640 கி.மீ வடகிழக்கில் நிலைபெற்றுள்ள இத்தொகுதியானது, இன்று (16) மாலை வேளையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் ‘புயலாகவும்’, நவம்பர் 17 ஆம் திகதியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் ‘தீவிர புயலாகவும்’ வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் தற்போது நிலவும் மழை நிலைமையில் இன்று முதல் குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், வடக்கு அகலாங்கு 05°க்கும் 15°க்கும் இடையில் மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80°க்கும் 90°க்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளிலும், காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், அப்பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்ளூர் செய்தி / வானிலை மற்றும் அவசர எச்சரிக்கை


ශ්‍රී ලංකාවට ඊසාන දෙසින් බෙංගාල බොක්ක මුහුදු ප්‍රදේශයේ පැවති අවපීඩනය ‘ගැඹුරු අවපීඩනයක්’ දක්වා වර්ධනය වී ඇති බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි. ත්‍රිකුණාමලයේ සිට කි.මී. 640 ක් පමණ ඊසාන දෙසින් පිහිටා ඇති මෙම පද්ධතිය, අද (16) සවස වන විට දකුණු සහ යාබද බස්නාහිර මැද බෙංගාල බොක්ක මුහුදු ප්‍රදේශයේදී ‘සුළි කුණාටුවක්’ ලෙසත්, නොවැම්බර් 17 වන දින වන විට බස්නාහිර මැද බෙංගාල බොක්ක මුහුදු ප්‍රදේශයේදී ‘తీව්‍ර සුළි කුණාටුවක්’ ලෙසත් වර්ධනය වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. මෙරට පවතින වැසි තත්ත්වයේ අද සිට අඩුවීමක් අපේක්ෂිත අතර, බස්නාහිර, සබරගමුව, වයඹ සහ දකුණු පළාත්වලත් මහනුවර සහ නුවරඑළිය දිස්ත්‍රික්කවලත් විටින් විට වැසි ඇති විය හැක. ඌව පළාත්ව සහ අම්පාරை දිස්ත්‍රික්කයේ 

 පස්වරු 2.00 න් පසු ස්ථාන ස්වල්පයක වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.


මුහුදු ප්‍රදේශ රළු විය හැකි බැවින්, උතුරු අක්ෂාංශ 05° සහ 15° අතර සහ නැගෙනහිර දේශාංශ 80°  සහ 90° අතර මුහුදු ප්‍රදේශවලත්, කන්කසන්තුරේ සිට ත්‍රිකුණාමලය සහ පොතුවිල් හරහා හම්බන්තොට දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශවලත් මීළඟ දැනුම් දෙන තුරු ධීවර සහ සමුද්‍රීය කර්මාන්තවලින් වැළකී සිටින ලෙසත්, දැනට යෙදී සිටින පිරිස් ආරක්ෂිත ප්‍රදේශ වෙත යන ලෙසත් දන්වා ඇත. ගිගුරුම් සහිත වැසි ඇති වන විට තාවකාලික තද සුළං සහ අකුණු මඟින් සිදුවිය හැකි අනතුරු අවම කර ගැනීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස මහජනතාවගෙන් ඉල්ලා සිටී.


කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක්  / KR TV Lankan Voice - දේශීය පුවත් / කාලගුණ විද්‍යාව සහ ආරක්ෂක නිවේදන


The Department of Meteorology has announced that the depression over the northeast of Sri Lanka in the Bay of Bengal has intensified into a "Deep Depression." Located approximately 640 km northeast of Trincomalee, the system is expected to further intensify into a "Cyclonic Storm" by this evening (16) over the southern and adjoining west-central Bay of Bengal, and into a "Severe Cyclonic Storm" over the west-central Bay of Bengal by November 17. Although current rainy conditions in the island are expected to reduce from today, intermittent showers may occur in the Western, Sabaragamuwa, North-Western, and Southern provinces, as well as in the Kandy and Nuwara Eliya districts. Showers or thundershowers may occur at a few places in the Uva province and Ampara district after 2.00 p.m.


Due to rough sea conditions, naval and fishing communities have been strictly advised not to venture into deep-sea areas bounded by 05°N–15°N and 80°E–90°E, as well as sea areas extending from Kankesanthurai to Hambantota via Trincomalee and Pottuvil, until further notice, and those operating in those regions should move to safer locations. The general public is kindly requested to take adequate precautions to minimize damages caused by temporary localized strong winds and lightning during thundershowers.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Weather and Emergency Warnings

Comments