எமது தம்பாளை மண்ணின் கல்விப் பொக்கிஷம்: மாத்தளை ஸாஹிரா கல்லூரி அதிபர் ஜனாப் ஏ.எல்.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் மகத்தான சேவையும், தாய்மண்ணின் கல்வி எதிர்காலமும் குறித்த விரிவான பார்வை අපගේ තම්පාල මාතෘභූමියේ අධ්යාපන සම්පත: මාතලේ සහිරා විද්යාලයේ විදුහල්පති ඒ.එල්.එම්.ඒ. අසීස් මහතාගේ විශිෂ්ට සේවය සහ සිය උපන්ගමේ අධ්යාපනික අනාගතය පිළිබඳ පුළුල් විග්රහයක් Educational Treasure of Thampala: Comprehensive Feature on Matale Zahira Principal A.L.M.A. Azeez's Leadership and the Educational Future of His Native Land
தம்பாளை மண்ணின் கல்வி அடையாளமாகத் திகழும் ஆளுமைமிக்க கல்வியாளர்களில் ஒருவரது தூர பிரதேச கல்விப் பயணமானது, இன்று எமது ஊரின் கல்வி எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகளையும் உயரிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
1942ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1944ஆம் ஆண்டு கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கிளையாக இயங்கி, 1954 முதல் சுயாதீன கல்வி நிறுவனமாக வளர்ச்சியடைந்த மாத்தளை ஸாஹிரா கல்லூரி (1994இல் தேசிய பாடசாலை), இன்று கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகின்றது. இவ்வாறான சிறப்புமிக்க தேசிய கல்வி நிறுவனத்தின் அதிபராகப் பணியாற்றி வரும் ஜனாப் ஏ.எல்.எம்.ஏ. அஸீஸ் (SLPS1) அவர்கள், எமது பொலன்னறுவை மாவட்டத்தின் பெருமைமிகு தம்பாளை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது எமக்கெல்லாம் அளப்பரிய பெருமையளிக்கும் விடயமாகும்.
தனது கல்விப் புலமை, நிர்வாக ஆளுமை, பரந்த அனுபவம், திட்டமிடல் திறன் மற்றும் தலைமைத்துவப் பண்புகளால் கல்வித்துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ள அதிபர் அஸீஸ் அவர்கள், மாத்தளை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் காலி கிந்தோட்டை ஸாஹிரா தேசிய கல்லூரியிலும் சுமார் மூன்று வருட காலம் அதிபராகப் பணியாற்றி தனது நிருவாக முத்திரையைப் பதித்தவர்.
1000 பாடசாலை திட்ட அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த 2017 காலப்பகுதியில், 1AB பாடசாலையான தம்பாளை அல் ஹிலால் தேசிய பாடசாலையில் சேவை செய்த அஸீஸ் அவர்களைக் கல்வி அதிகாரிகள் 1C பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட பாரபட்சமும் அதனால் ஏற்பட்ட சூழலும் பல கோணங்களில் சிந்திக்க வைத்த இடமாற்ற விடயமாக அக்காலத்தில் அமைந்தது.
1990 முதல் 2021 வரையான காலப்பகுதியில் சுமார் 31 வருட காலம் தம்பாளை அல் ஹிலால் தேசிய பாடசாலையில் சுமார் 12 வருடங்களும், அல் றிபாய் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கிட்டத்தட்ட 19 வருடங்களும் சுழற்சி முறையில் தனது ஊரின் கல்வி மேம்பாட்டுக்காக ஆசிரியராக, பிரதி அதிபராக, அதிபராகப் பங்களிப்புச் செய்து தன்னை அர்ப்பணித்த ஜனாப் அஸீஸ் அவர்கள், 2012ஆம் ஆண்டு தம்பாளை அல் ஹிலால் மத்திய கல்லூரியை 1000 பாடசாலை திட்டத்தில் உள்வாங்கி, அபிவிருத்தி செய்ததில் மிக முக்கிய பங்களிப்பை ஆற்றியவராவார். தம்பாளை அல் ஹிலாலின் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி விடயத்தில் அஸீஸ் அவர்களுடைய வகிபாகம் என்றுமே மறக்கவும் மறைக்கவும் முடியாத வரலாறாகும்.
எமது மண்ணில் கல்வி கற்று, எமது மண்ணின் சூழலில் வளர்ந்து, தனது ஆளுமையையும் கல்வித் திறமையையும் வளர்த்துக்கொண்ட ஒருவர், இன்று தூரப் பிரதேசங்களில் உள்ள தேசிய கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து வருவது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
ஆனால், இதனுடன் இணைந்த ஒரு முக்கியமான கேள்வியும் எழுகிறது.
அஸீஸ் அதிபர் அவர்கள் அன்றைய இடமாற்ற மனக்கசப்பு காரணமாகத் தாமாக விரும்பியே தூரப் பிரதேசங்களை நோக்கிப் பயணித்தாரா? அல்லது அவரது கல்வித் தகைமை, நிர்வாகத் திறமை மற்றும் ஆளுமை காரணமாகவே அத்தகைய பெரும் பொறுப்புகள் அவரைத் தேடி வந்தனவா? அல்லது எமது சொந்த ஊரில் அவரது திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான வாய்ப்புகள் முறையாக உருவாக்கப்படவில்லையா?
இவை யார் மீதும் குற்றம் சுமத்துவதற்கான கேள்விகள் அல்ல. மாறாக, எமது ஊரின் கல்வி வளர்ச்சி தொடர்பில் அனைவரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய வினாக்களாகும்.
சில நேரங்களில் நமது முற்றத்தில் பூத்துக் குலுங்கும் மல்லிகையின் நறுமணத்தை அயலவர்கள் உணர்ந்த பின்னரே அதன் அருமையை நாம் உணர்கிறோம். அதுபோல, எமது சொந்த மண்ணில் உருவான கல்வி ஆளுமைகளின் பெறுமதியையும் அவர்களின் அரிய திறமைகளையும் நாம் உரிய காலத்தில் அடையாளம் காண வேண்டியது வரலாற்றுத் தேவையாகும்.
இன்று எமது பிரதேசத்தின் கல்வித்துறையைத் திரும்பிப் பார்க்கும்போது, அனுபவமும் ஆளுமையும் நிறைந்த பல மூத்த அதிபர்கள் தமது நீண்டகால சேவைக்குப் பின்னர் ஓய்வுபெற்றுள்ளனர். அவர்கள் ஆற்றிய மகத்தான சேவைகள் என்றுமே மதிக்கப்பட வேண்டியவை. அதேவேளை, அவர்களுக்குப் பின்னர் உருவாக வேண்டிய கல்வித் தலைமைத்துவத்தின் பலம் குறித்தும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இளமைத் துடிப்பு, நவீன கல்விச் சிந்தனை, நிர்வாகத் திறமை, தொலைநோக்குத் திட்டமிடல், உறுதியான தீர்மானம் எடுக்கும் ஆற்றல் மற்றும் கல்வி நிறுவனமொன்றை முன்னோக்கி நகர்த்தும் ஆற்றல்மிக்க தலைமைத்துவம் கொண்ட அஸீஸ் அதிபர் போன்றவர்களின் வழிகாட்டல் எமது பிரதேசத்திற்கும் மிக அவசியமானதாகும்.
ஒரு சிறந்த அதிபர் என்பவர் பாடசாலையின் நிருவாகப் பொறுப்பை மட்டும் சுமப்பவர் அல்லர். மாணவர்களின் கல்வி அடைவுகளை உயர்த்துபவர்; ஆசிரியர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துபவர்; பாடசாலையின் ஒழுக்கத்தையும் தரத்தையும் கட்டியெழுப்புபவர்; நவீன கல்வி மாற்றங்களுக்கு ஏற்ப சிறந்த திட்டங்களை வகுப்பவர்; பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் சமூகத்தினரை ஒன்றிணைப்பவர்; எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைப்பவர். இத்தகைய பண்புகளைக் கொண்ட கல்வி ஆளுமைகளின் அனுபவமும் சேவையும் ஒரு பிரதேசத்தின் கல்வி மறுமலர்ச்சியில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
காலியும் மாத்தளையும் எமக்குச் சொந்தமற்ற தூரப் பிரதேசங்கள் அல்ல. அங்கும் எமது உறவுகள் வாழ்கின்றார்கள். அங்குள்ள மாணவர்களுக்கும் கல்விச் சமூகத்திற்கும் அஸீஸ் அதிபர் அவர்கள் ஆற்றிவரும் சேவை நிச்சயமாக ஒரு பாக்கியமாகும். அவரது சேவையினால் அந்தப் பிரதேச மாணவர்கள் பயன்பெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது. அவரது நிர்வாகத் திறமையும் அனுபவமும் அங்குள்ள கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பதில் ஐயமில்லை.
ஆனால், அதேவேளை அவர் பிறந்து, கல்வி கற்று, வளர்ந்த எமது தம்பாளை மண்ணுக்கும் அவரது பங்களிப்பு மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது உள்ளார்ந்த எதிர்பார்ப்பாகும். ஏனெனில், ஒரு கல்வியாளரின் அறிவும் அனுபவமும் அவர் பணியாற்றும் ஓர் இடத்திற்கான சொத்து மட்டுமல்ல, அவர் உருவான சமூகத்திற்கும் அது ஒரு விலைமதிப்பற்ற மனித வளமாகும்.
அஸீஸ் அதிபர் போன்ற திறமையான கல்வி நிருவாகிகளின் அனுபவத்தையும் ஆற்றலையும் எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு எமது சமூகத்திற்கும் கல்வி சார்ந்த தரப்பினருக்கும் உள்ளது. இதற்காக உரிய கல்வி நிருவாக நடைமுறைகள், இடமாற்றக் கொள்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தீர்மானங்கள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.
அதேவேளை, அவரைப் போன்ற ஆளுமைகள் எமது பிரதேசத்தின் கல்வி நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பையும் முன்வைக்க முடியும். எமது பாடசாலைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கும், கல்வி நிருவாகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய ஆளுமைகளின் மீள்வருகை பெரும் பலமாக அமையும். இது ஒருவரை ஒரு பதவிக்கு அழைப்பதற்கான கோரிக்கை மாத்திரமல்ல, எமது மண்ணில் உருவான கல்வி வளங்களை மீண்டும் எமது மண்ணின் வளர்ச்சியுடன் இணைக்க வேண்டும் என்ற தூரநோக்குச் சிந்தனையாகும்.
அஸீஸ் அதிபர் எங்கு பணியாற்றினாலும் தம்பாளை மண்ணின் அடையாளத்தையும் பெருமையையும் சுமந்து நிற்கும் கல்விப் பொக்கிஷமாகவே திகழ்கின்றார். அவரது கல்விப் பயணம் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்பதும், அவரது நிருவாக அனுபவமும் ஆளுமையும் இன்னும் பல தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதும் பொதுவான பிரார்த்தனையாகும். அதேநேரம் முற்றத்து மல்லிகையின் மணம் சொந்த முற்றத்திலும் வீசி, தம்பாளை மண்ணின் கல்வியும் புதிய சிகரங்களைத் தொட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் பிரதான கருப்பொருளாகும்.
செய்தியாளர்: எம்.சி.ஏ. சமத் (M.C.A. Samad, MPS, JP - லங்காபுர பிரதேச சபை உறுப்பினர்)
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / கல்வி, வரலாற்று ஆளுமைகள் மற்றும் பொலன்னறுவை
අපගේ තම්පාල මාතෘභූමියේ අධ්යාපනික සලකුණක් බඳු පෞරුෂයකින් හෙබි අධ්යාපනඥයෙකුගේ දුරබැහැර සේවා ගමන, අද දිනයේ සිය උපන් ගම්බිම්වල අනාගත අධ්යාපනය පිළිබඳ ගැඹුරු සිතුවිලි සහ ඉහළ බලාපොරොත්තු රැසක් නිර්මාණය කර ඇත.
1942 වසරේදී ආරම්භ කර, පසුව 1944 දී කොළඹ සහිරා විද්යාලයේ ශාඛාවක් ලෙස ක්රියාත්මකව 1954 සිට ස්වාධීන ආයතනයක් ලෙස වර්ධනය වූ මාතලේ සහිරා විද්යාලය (1994 දී ජාතික පාසලක් බවට පත්විය), අද වන විට අධ්යාපනය ඇතුළු ක්ෂේත්ර රැසක සුවිශේෂී ජයග්රහණ අත්කර ගනිමින් සිටියි. මෙවන් කීර්තිමත් ජාතික පාසලක විදුහල්පතිවරයා ලෙස කටයුතු කරන ඒ.එල්.එම්.ඒ. අසීස් (SLPS1) මහතා, පොළොන්නරුව දිස්ත්රික්කයේ ආඩම්බරකාර තම්පාල ගම්මානයේ උපත ලැබූවෙකු වීම සමස්ත ප්රදේශයටම මහත් ගෞරවයකි.
සිය විෂය දැනුම, පරිපාලන හැකියාව, පළපුරුද්ද, සැලසුම්කරණ කුසලතාව සහ නායකත්ව ගුණාංග හේතුවෙන් අධ්යාපන ක්ෂේත්රයේ සුවිශේෂී ස්ථානයක් දිනා ඇති අසීස් විදුහල්පතිවරයා, මාතලේ සහිරා විද්යාලයේ වගකීම භාරගැනීමට පෙර ගාල්ල ගිංතොට සහිරා ජාතික විද්යාලයේ වසර තුනක පමණ කාලයක් විදුහල්පති ලෙස සේවය කරමින් සිය පරිපාලන නිපුණතාව විදහා දැක්වූවෙකි.
දහසක් පාසල් සංවර්ධන ව්යාපෘතිය වෙනුවෙන් වෙහෙස නොබලා කටයුතු කළ 2017 යුගයේදී, 1AB පාසලක් වූ තම්පාල අල් හිලාල් ජාතික පාසලේ සේවය කළ අසීස් මහතාව 1C පාසලක් වෙත මාරුකිරීමේදී සිදුවූ අසාධාරණය එකල දැඩි අවධානයට හා කතාබහට ලක්වූ කරුණක් විය. 1990 සිට 2021 දක්වා වූ වසර 31ක දිගු සේවා කාලය තුළ තම්පාල අල් හිලාල් ජාතික පාසලේ වසර 12ක් ද, අල් රිෆායි මුස්ලිම් මහා විද්යාලයේ වසර 19ක් ද වශයෙන් සිය ගමේ දරු දැරියන් වෙනුවෙන් ගුරුවරයෙකු, නියෝජ්ය විදුහල්පතිවරයෙකු සහ විදුහල්පතිවරයෙකු ලෙස කැපවූ ඒ මහතා, 2012 වසරේදී අල් හිලාල් මධ්ය මහා විද්යාලය දහසක් පාසල් ව්යාපෘතියට ඇතුළත් කර සංවර්ධනය කිරීමෙහිලා ඉටුකළ මෙහෙවර අමතක කළ නොහැකි ඉතිහාසයකි.
සිය ගම්බිම්වල අධ්යාපනය ලබා, සිය පරිසරයේ හැදී වැඩී, පෞරුෂය ගොඩනඟාගත් අයෙකු අද වන විට දුරබැහැර ජාතික පාසල්වල ප්රගතිය වෙනුවෙන් නායකත්වය ලබාදීම ඉමහත් පැසසුමට ලක්විය යුතුය. එහෙත් ඒ හා බැඳුණු වැදගත් පැනයක් ද මතු වේ. අසීස් මහතා එදා සිදුවූ ස්ථාන මාරු කලකිරීම් මත දුරබැහැර ප්රදේශ තෝරාගත්තේ ද? නැතහොත් ඔහුගේ දක්ෂතාව නිසා එම තනතුරු ඔහු සොයා පැමිණියේ ද? නැතිනම් උපන් ගමේ ඔහුගේ සේවය නිසි පරිදි ලබාගැනීමට අවස්ථා නිර්මාණය නොවූයේ ද? යන්න විමසා බැලිය යුතුය.
අපගේ මිදුලේ පිපෙන මල්වල සුවඳ අසල්වැසියන් වින්දනය කළ පසු එහි අගය අප තේරුම් ගන්නා සේ, අපගේ භූමියේ බිහිවූ මෙවන් අධ්යාපන පෞරුෂයන්ගේ වටිනාකම නියම වේලාවට හඳුනාගැනීම අත්යවශ්ය වේ. වර්තමානයේ ප්රදේශයේ ජ්යෙෂ්ඨ විදුහල්පතිවරුන් විශ්රාම යාමත් සමඟ මතුව ඇති නායකත්ව අවශ්යතාවන් හමුවේ, නවීන අධ්යාපන දැක්මක්, තරුණ ජවයක්, පරිපාලන ශක්තියක් සහ තීරණ ගැනීමේ හැකියාවක් සහිත අසීස් විදුහල්පතිවරයා වැන්නවුන්ගේ මඟපෙන්වීම සිය උපන් ප්රදේශයට යළිත් අවශ්යව තිබේ.
විදුහල්පතිවරයෙකු යනු හුදෙක් පරිපාලනය පමණක් නොව, ශිෂ්ය ප්රතිඵල ඉහළ නංවන, ගුරුවරුන්ගේ වෘත්තීය නිපුණතාව දියුණු කරන, විනය ගොඩනඟන, දෙමාපියන් සහ ආදි සිසුන් ඒකරාශී කරන පාලමකි. ගාල්ල හෝ මාතලේ යනු පිටස්තර ප්රදේශ නොවන අතර එහි සිසුන්ට සේවය කිරීම ද භාග්යයකි. කෙසේ වෙතත්, රාජ්ය අධ්යාපන ප්රතිපත්තිවලට හා මාරුකිරීම් නීතිරීතිවලට ගරු කරන අතරම, උපන් ප්රදේශයේ පාසල් පද්ධතිය ශක්තිමත් කිරීමට මෙවැනි සම්පත් යළි උපන්බිමේ දියුණුව හා බද්ධ කරගැනීම කාලීන අවශ්යතාවක් ලෙස පෙන්වා දෙනු ලැබේ.
වාර්තාකරු: එම්.සී.ඒ. සමද් (ලංකාපුර ප්රාදේශීය සභා මන්ත්රී)
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අධ්යාපන, පෞරුෂත්ව සහ පොළොන්නරුව
The educational journey of an accomplished educationist who stands as an intellectual beacon of Thampala has sparked profound reflections and aspirations regarding the academic future of his native region.
Established in 1942, functioned as a branch of Colombo Zahira College in 1944, and evolved into an autonomous institution in 1954, Matale Zahira College (elevated to a National School in 1994) continues to mark distinguished achievements across academic and extra-curricular spheres. Serving as the Principal of this premier national institution, Janab A.L.M.A. Azeez (SLPS1) hails from the respected village of Thampala in the Polonnaruwa District, bringing immense pride to the entire community.
Possessing seasoned educational mastery, administrative excellence, expansive planning acumen, and dynamic leadership skills, Principal Azeez also served for nearly three years as the head of Ginthota Zahira College (National School) in Galle prior to assuming duties at Matale Zahira, leaving a visible imprint of institutional progress.
During the intense implementation phase of the 1,000 Schools National Development Project in 2017, the controversial administrative transfer that shifted Mr. Azeez from the 1AB Thampala Al-Hilal National School to a 1C category school generated widespread debate regarding perceived prejudice. Across a dedicated career spanning 31 years between 1990 and 2021—serving approximately 12 years at Thampala Al-Hilal National School and nearly 19 years at Al-Rifai Muslim Maha Vidyalaya as a teacher, deputy principal, and principal—he played a monumental role in integrating Al-Hilal Central College into the landmark 1,000 Schools Project in 2012, an institutional legacy that remains etched in regional history.
While it is commendable that an educator nurtured in the socio-cultural soil of Thampala is driving national colleges to higher academic benchmarks, it simultaneously raises reflective questions. Did he move to distant institutions due to past administrative disillusionments, did his exceptional credentials naturally attract those distant responsibilities, or did the home region fail to create viable avenues to harness his leadership?
These questions do not seek to apportion blame but invite deep community contemplation. Often, the fragrance of jasmine blossoming in one's own yard is appreciated only after neighbors begin to celebrate it; similarly, identifying and valuing regional intellectual assets in a timely manner is paramount. Following the honorable retirement of several veteran school administrators across the zone, a distinct leadership gap has emerged. The educational ecosystem now requires forward-thinking, energetic administrators equipped with modern methodologies, structured planning, and decisive leadership.
A consummate school head does not simply oversee daily logistics; such a leader enhances student learning outcomes, sharpens pedagogical standards among faculty, instills institutional discipline, anticipates curriculum reforms, and unites parents, alumni, and civil society. While serving students in Galle and Matale remains a noble mission, reconnecting such seasoned human capital with the educational revival of his birthplace remains a shared regional aspiration.
Upholding full respect for institutional norms and formal public transfer regulations, creating constructive pathways for visionary educators to steer indigenous institutions will catalyze profound qualitative shifts in local education. Wherever he serves, Principal Azeez remains a cherished intellectual asset of Thampala, and uniting his administrative caliber with the developmental aspirations of his native community represents an enduring vision.
Reporter: M.C.A. Samad (Member, Lankapura Pradeshiya Sabha)
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Education, Profiles and Polonnaruwa

Comments