Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நுவரெலியாவில் தொடர் கனமழை - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு விசேட எச்சரிக்கை! නුවරඑළිය දිස්ත්‍රික්කයට ඇදහැලෙන අධික වර්ෂාව - ඉහළ කොත්මලේ ජලාශයේ වාන් දොරටු දෙකක් විවෘත කෙරේ; පහත් බිම් ජනතාවට අනතුරු ඇඟවීම්! Heavy Rainfall in Nuwara Eliya District - Two Spill Gates of Upper Kotmale Reservoir Opened; Special Warning Issued to Low-Lying Residents!


நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாகத் தலவாக்கலை மற்றும் மேல் கொத்மலை நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அதிக மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் இரண்டு வான் கதவுகள் தொடர்ச்சியாகத் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மாலை வேளைகளில் கனமழை பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படலாம் எனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கொத்மலை நீர்த்தேக்கத்திற்குக் கீழ் அமைந்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


இதேவேளை, காசல்ரீ, மவுசாக்கலை, கெனியன், லக்ஸபான, நவலக்ஸபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட ஏனைய பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் அதிகரித்து வருவதால், அவற்றின் வான் கதவுகளும் எந்த நேரத்திலும் திறக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆகவே, நீர்த்தேக்கங்களை அண்மித்த ஆற்றுப் பகுதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் செயற்பட்டு, வெள்ள அபாயத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / காலநிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கை


නුවරඑළිය දිස්ත්‍රික්කයට ඇදහැලෙන අඛණ්ඩ අධික වර්ෂාව හේතුවෙන් ප්‍රධාන ජලාශවල ජල මට්ටම සීඝ්‍රයෙන් ඉහළ යමින් පවතී. තලවාකැලේ සහ ඉහළ කොත්මලේ ජල පෝෂක ප්‍රදේශවලට ලැබෙන අධික වර්ෂාපතනය නිසා ඉහළ කොත්මලේ ජලාශයේ ජල මට්ටම ඉහළ ගොස් ඇති අතර, ඒ හේතුවෙන් එම ජලාශයේ වාන් දොරටු දෙකක් අඛණ්ඩව විවෘත කර තිබේ. තවදුරටත් සවස් කාලයේදී තද වැසි ඇදහැලීම නිසා ජල මට්ටම තවත් ඉහළ ගියහොත් අමතර වාන් දොරටු ද විවෘත කිරීමට සිදුවනු ඇති බව ජලාශය භාර ඉංජිනේරුවන් ප්‍රකාශ කර ඇත. එබැවින් කොත්මලේ ජලාශයට පහළින් පිහිටි පහත් බිම් ප්‍රදේශවල වෙසෙන ජනතාව දැඩි අවධානයෙන් පසුවන ලෙස ඉල්ලා සිටී.


මේ අතර, පවතින වර්ෂාව හේතුවෙන් කාසල්රී, මාවුස්සාකැලේ, කැනියොන්, ලක්ෂපාන, නව ලක්ෂපාන, පොල්පිටිය සහ විමලසුරේන්ද්‍ර ඇතුළු අනෙකුත් ප්‍රධාන ජලාශවල ජල මට්ටම් ද ඉහළ යමින් පවතින බැවින්, එම ජලාශවල වාන් දොරටු ද ඕනෑම අවස්ථාවක විවෘත කිරීමේ හැකියාවක් පවතී. එබැවින් ජලාශ ආශ්‍රිත ගංගා දෙපස සහ පහත් බිම්වල වෙසෙන ජනතාව ජල මට්ටම් ඉහළ යාම පිළිබඳව අවධානයෙන් පසුවෙමින් ගංවතුර අවදානම වළක්වා ගැනීමට පූර්වාරක්ෂක පියවර ගන්නා ලෙස ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානයේ නිලධාරීන් මහජනතාවගෙන් ඉල්ලා සිටී.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / කාලගුණය සහ ආපදා අනතුරු ඇඟවීම්


Water levels in major reservoirs in the Nuwara Eliya district are rising rapidly due to continuous heavy rainfall. Following intense rain in the Talawakelle and Upper Kotmale catchment areas, the water level of the Upper Kotmale reservoir has increased, prompting engineers to keep two spill gates continuously open. Engineers noted that if evening rains persist and water levels rise further, additional spill gates may need to be opened, urging residents in low-lying areas downstream of the Kotmale reservoir to remain extremely vigilant.


Meanwhile, water levels in other major reservoirs—including Castlereigh, Maussakelle, Canyon, Laxapana, New Laxapana, Polpitiya, and Wimalasurendra—are also rising, creating the possibility that their spill gates could be opened at any moment. Disaster Management Centre officials have advised communities living along riverbanks and in low-lying areas near these reservoirs to stay alert to rising river levels and take necessary precautions to mitigate potential flood risks.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Weather and Disaster Alerts

Comments