Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இன்று பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை අද සවස් කාලයේදී ප්‍රදේශ රැසකට තද වැසි: කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවෙන් අවවාදාත්මක නිවේදනයක් Heavy Showers Expected in Several Areas After 1.00 PM Today: Department of Meteorology Issues Weather Warning


இன்று (01) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற சீரான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அக்குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / வானிலை முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை


අද (01) පස්වරු 1.00 න් පසුව බස්නාහිර, සබරගමුව, මධ්‍යම, ඌව සහ දකුණු පළාත්වලත්, අම්පාර සහ මඩකළපුව දිස්ත්‍රික්කවලත් තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි.


අදාළ ප්‍රදේශවල ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 50 ට වැඩි තරමක තද වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී.


දිවයිනේ සෙසු ප්‍රදේශවල ප්‍රධාන වශයෙන් වැසි රහිත වියළි කාලගුණ තත්ත්වයක් අපේක්ෂා කෙරේ.


ගිගුරුම් සහිත වැසි ඇතිවන අවස්ථාවලදී එම ප්‍රදේශවල තාවකාලිකව තද සුළං සහ අකුණු අනතුරු ඇතිවිය හැකි බැවින්, ඉන් සිදුවන හානි අවම කර ගැනීමට අවශ්‍ය පූර්ව ආරක්ෂිත පියවර ගන්නා ලෙස මහජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටී.


මීට අමතරව බස්නාහිර, සබරගමුව, මධ්‍යම සහ ඌව පළාත්වලත් කුරුණෑගල සහ අනුරාධපුර දිස්ත්‍රික්කවලත් ඇතැම් ස්ථානවල අළුයම් කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් අපේක්ෂා කළ හැක.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / කාලගුණ අනාවැකි සහ පූර්ව අනතුරු ඇඟවීම්


Showers or thundershowers are forecast to occur at several places in the Western, Sabaragamuwa, Central, Uva, and Southern provinces, as well as in the Ampara and Batticaloa districts, after 1:00 PM today (01), according to the Department of Meteorology.


Fairly heavy showers exceeding 50 mm are likely at some isolated locations within these identified regions.


Mainly fair and dry weather conditions are expected to prevail across the remaining parts of the island.


The general public is strongly advised to take adequate precautions to mitigate hazards resulting from temporary localized strong gusty winds and severe lightning activity during thundershowers.


Additionally, misty conditions can be expected in parts of the Western, Sabaragamuwa, Central, and Uva provinces, along with the Kurunegala and Anuradhapura districts, during the early morning hours.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Weather Forecast and Public Advisories

Comments