Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை - சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் தலைமையில் சிக்கலான சத்திரசிகிச்சை வெற்றி! කල්මුණේ අෂ්රෆ් මනුෂ්‍යවාදී රෝහලේ ඓතිහාසික වාර්තාවක් - ජ්‍යෙෂ්ඨ ශල්‍ය වෛද්‍ය විශේෂඥ වෛද්‍ය සමීම් මහතාගේ ප්‍රධානත්වයෙන් සංකීර්ණ ශල්‍යකර්මයක් සාර්ථකයි! Historical Achievement at Kalmunai Ashraff Hospital - Complex Surgery Successfully Performed Under Senior Consultant Surgeon Dr. Sameem!



கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் (Ashraff Memorial Hospital) சத்திரசிகிச்சை வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, 70 வயதுடைய பெண் ஒருவருக்கு மிகச் சிக்கலான வயிற்றுச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


நீண்ட காலமாக உணவு உட்கொள்ள முடியாமல் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வந்த நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட மேல் இரைப்பை எண்டோஸ்கொப்பி (Upper Gastrointestinal Endoscopy) பரிசோதனையின் மூலம் வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இக்கட்டியானது வயிற்றிலிருந்து உணவு சிறுகுடலுக்குச் செல்லும் பாதையை அடைத்து, இரைப்பை வெளியீட்டுத் தடையை (Gastric Outlet Obstruction) ஏற்படுத்தியிருந்தது.


இதனைக் கருத்திற்கொண்டு, போர்ட் சான்றிதழ் பெற்ற சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. எம். சமீம் (Board Certified Senior Consultant Surgeon Dr. A. W. M. Sameem) அவர்களின் தலைமையில், நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த sub total Gastrectomy with gastrojejunostomy (முழு வயிற்றை அகற்றி, உணவுக்குழாயை சிறுகுடலுடன் இணைக்கும்) சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சத்திரசிகிச்சை, மேம்பட்ட சத்திரசிகிச்சை முறைகள் மற்றும் நவீன லேப்ராஸ்கோப்பிக் சத்திரசிகிச்சைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட நீண்ட அனுபவம் கொண்ட டாக்டர் சமீம் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வைத்தியசாலைக் குழுவினரின் ஒத்துழைப்புடன் நோயாளி தற்போது பூரண குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.


தனியார் வைத்தியசாலைகளில் இலட்சக்கணக்கான ரூபாய் செலவாகக்கூடிய இத்தகைய உயர்தர சத்திரசிகிச்சைகள் அரச வைத்தியசாலையிலேயே இலவசமாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது கிழக்கு மாகாண மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும். இச்சாதனையில் பங்களித்த அனைத்து மருத்துவர்கள், மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் சத்திரசிகிச்சைக் குழுவினருக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சுகாதாரம் மற்றும் மக்கள் சேவை


කල්මුණේ අෂ්රෆ් ස්මාරක රෝහලේ (Ashraff Memorial Hospital) ශල්‍යකර්ම ඉතිහාසයේ සන්ධිස්ථානයක් ලෙස, 70 හැදි වියේ පසුවන කාන්තාවකට ඉතා සංකීර්ණ උදර ශල්‍යකර්මයක් සාර්ථකව සිදු කර තිබේ.


දිගු කලක් තිස්සේ ආහාර ගැනීමට නොහැකිව දැඩි අපහසුතාවන්ට මුහුණ දී සිටි රෝගියාට කරන ලද ඉහළ ආමාශයික එන්ඩොස්කොපි (Upper Gastrointestinal Endoscopy) පරීක්ෂණයකින් උදරයේ ගෙඩියක් ඇති බව අනාවරණය විය. මෙමගින් ආමාශයේ සිට ආහාර කුඩා අන්ත්‍රයට ගමන් කරන මාර්ගය අවහිර වී Gastric Outlet Obstruction තත්ත්වයක් ඇති කර තිබුණි.


මෙය සැලකිල්ලට ගනිමින්, මණ්ඩලය විසින් සහතික කරන ලද ජ්‍යෙෂ්ඨ ශල්‍ය වෛද්‍ය විශේෂඥ වෛද්‍ය ඒ. ඩබ්ලිව්. එම්. සමීම් (Board Certified Senior Consultant Surgeon Dr. A. W. M. Sameem) මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැය හතරකට අධික කාලයක් පුරා පැවති sub total Gastrectomy with gastrojejunostomy ශල්‍යකර්මය සාර්ථකව සිදු කරන ලදී. සාමාන්‍ය ශල්‍යකර්ම සහ ලැපරොස්කොපි ශල්‍යකර්ම පිළිබඳ පුළුල් අත්දැකීම් ඇති වෛද්‍ය සමීම් මහතාගේ කැපවීම සහ රෝහල් කාර්ය මණ්ඩලයේ සහයෝගය මත රෝගියා මේ වන විට සම්පූර්ණ සුවය ලබා ඇත.


පෞද්ගලික රෝහල්වලදී ලක්ෂ ගණනක මුදලක් වැය වන මෙපමණ උසස්* තත්ත්වයේ ශල්‍යකර්මයක් රජයේ රෝහලකදී නොමිලේ සාර්ථක කරගැනීම නැගෙනහිර පළාතේ ජනතාවට ලැබුණු මහත් භාග්‍යයකි. මෙම සාර්ථකත්වය සඳහා දායක වූ සියලුම වෛද්‍යවරුන්ට, නිර්වින්දන වෛද්‍යවරුන්ට, හෙදියන්ට සහ ශල්‍යකර්ම කණ්ඩායමට ප්‍රණාමය පුද කරනු ලැබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / සෞඛ්‍ය සහ ජනතා සේවය


In a significant milestone in the surgical history of the Ashraff Memorial Hospital in Kalmunai, a highly complex abdominal surgery has been successfully performed on a 70-year-old female patient.


The patient, who had been suffering for a long time due to the inability to consume food, was diagnosed with a tumor in the stomach following an Upper Gastrointestinal Endoscopy examination. The mass had blocked the passage from the stomach to the small intestine, resulting in a Gastric Outlet Obstruction condition lasting over time.


Taking this critical medical condition into account, a complex sub total Gastrectomy with gastrojejunostomy surgery lasting over four hours was successfully executed under the leadership of Board Certified Senior Consultant Surgeon Dr. A. W. M. Sameem. Backed by extensive experience in general and advanced laparoscopic surgeries, Dr. Sameem, along with the dedicated hospital surgical team, ensured the patient made a full and healthy recovery.


Such high-end surgeries, which would cost hundreds of thousands of rupees in private medical facilities, being performed successfully and freely at a government hospital is a tremendous blessing for the people of the Eastern Province. Appreciation and gratitude have been extended to all doctors, anesthetists, nurses, and medical staff who contributed to this remarkable achievement.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Health and Public Service

Comments