வலப்பனை பஸ் நிலையத்தில் ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கி படுகாயம் - சாரதி கைது!වලපනේ බස් නැවතුම්පොළේදී ධාවනය වෙමින් තිබූ බස් රථයකට ගොඩවීමට ගිය මගියෙකු රෝදයට හසුවී බරපතල තුවාල - රියැදුරු අත්අඩංගුවට! Passenger Severely Injured After Getting Caught Under Moving Bus Wheel at Walapane Bus Stand - Driver Arrested!
நுவரெலியா, வலப்பனை பஸ் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏற முயன்ற பயணி ஒருவர் முன்சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். காலை சுமார் 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், வலப்பனை ரூபஹா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே கால் எலும்பு இரண்டாக முறிந்த நிலையில் காயமடைந்துள்ளார்.
ராகலையிலிருந்து வலப்பனை ஊடாக கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பஸ், வலப்பனை பஸ் நிலையத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தபோது, பஸ் முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்னர் அதில் ஏறுவதற்கு குறித்த பயணி முயன்றுள்ளார். இதன்போது அவர் தவறி விழுந்ததில், அவரது வலது கால் பஸ்ஸின் முன்சக்கரத்தில் சிக்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் கொழும்பு செல்வதற்காக பஸ் நிலையத்துக்கு வந்திருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் முதலில் வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் இ.போ.ச பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற விதம் அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / விபத்து மற்றும் பொது விவகாரங்கள்
නුවරඑළිය, වලපනේ බස් නැවතුම්පොළේදී ධාවනය වෙමින් තිබූ ලංකා ගමනාගමන මණ්ඩලයට අයත් බස් රථයකට ගොඩවීමට උත්සාහ කළ මගියෙකු ඉදිරිපස රෝදයට හසුවී බරපතල තුවාල ලබා තිබේ. උදෑසන 9.45ට පමණ සිදු වූ මෙම අනතුරින් වලපනේ රූපහා ප්රදේශයේ පදිංචි 53 හැවිරිදි පුද්ගලයෙකුගේ පාදයේ අස්ථියක් දෙකට කැඩී බරපතල තුවාල සිදුව ඇත.
රාගල සිට වලපනේ හරහා කොළඹ බලා ධාවනය වන බස් රථය වලපනේ බස් නැවතුම්පොළට ඇතුළු වෙමින් තිබියදී, බස් රථය සම්පූර්ණයෙන් නතර කිරීමට පෙර ඊට ගොඩවීමට අදාළ මගියා උත්සාහ කර තිබේ. එහිදී ඔහු ලිස්සා වැටීමෙන් දකුණු පාදය බස් රථයේ ඉදිරිපස රෝදයට හසුවී ඇත. දීපවාලි උත්සවය වෙනුවෙන් ගම්බිම් බලා පැමිණ නැවත කොළඹ බලා යාමට බස් නැවතුම්පොළට පැමිණ සිටියදී මෙම අනතුර සිදුව ඇති බව වලපනේ පොලිසිය පවසයි.
තුවාලකරු ප්රථමයෙන් වලපනේ ප්රාදේශීය රෝහලට ඇතුළත් කර ඇති අතර, ඔහුගේ තත්ත්වය බරපතල බැවින් වැඩිදුර ප්රතිකාර සඳහා නුවරඑළිය දිස්ත්රික් මහ රෝහල වෙත මාරු කර යවා තිබේ. සිද්ධිය සම්බන්ධයෙන් ලංගම බස් රථයේ රියැදුරු සැකපිට අත්අඩංගුවට ගෙන වලපනේ මහේස්ත්රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට පියවර ගෙන ඇති බව පොලිසිය සඳහන් කරයි. අනතුර සිදුවන ආකාරය අසල වෙළෙඳසැලක ආරක්ෂිත කැමරාවක සටහන්ව තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / හදිසි අනතුරු සහ මහජන කටයුතු
A passenger attempting to board a moving Sri Lanka Transport Board (SLTB) bus at the Walapane bus stand in Nuwara Eliya sustained severe injuries after getting caught under the front wheel. The accident, which occurred around 9:45 AM, left a 53-year-old resident of Rupaha, Walapane with a compound leg fracture.
The passenger had tried to board the Colombo-bound bus traveling from Ragala via Walapane before it came to a complete halt upon entering the bus stand. He slipped and fell, resulting in his right leg getting trapped under the front wheel. Walapane Police stated that the accident occurred while the victim was returning to Colombo after visiting his hometown for the Deepavali festival.
The injured man was initially admitted to the Walapane Divisional Hospital and subsequently transferred to the Nuwara Eliya District General Hospital for further treatment due to his critical condition. Police stated that the SLTB bus driver has been arrested on suspicion and steps are being taken to produce him before the Walapane Magistrate's Court. Footage of the incident was captured on the CCTV camera of a nearby shop.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Accidents and Public Affairs








Comments