ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்: காத்தான்குடியில் மாவட்ட மட்ட மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்! මත්ද්රව්ය නිවාරණ ජාතික වැඩසටහන: මඩකලපුව දිස්ත්රික් මට්ටමේ දැවැන්ත දැනුවත් කිරීමේ වැඩසටහනක් කාත්තන්කුඩියේදී පැවැත්වීමට කටයුතු සූදානම්! Presidential drug eradication programme: Grand Batticaloa district-level awareness campaign to be held in Kattankudy!
ஜனாதிபதியின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தை போதையற்ற மாவட்டமாக மாற்றும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டம் தழுவிய மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வொன்று காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட ஆயத்தங்கள் மற்றும் ஒழுங்கமைப்புகள் மாவட்ட செயலகத்தினால் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் சமூக வலைத்தள ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (09.11.2026) மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், போதை ஒழிப்புச் செய்திகளை பொதுமக்களிடம் எவ்வாறு பயனுள்ள வகையில் கொண்டு சேர்ப்பது, சமூகத்திலிருந்து போதைப்பாவனையை ஒழிப்பதற்கு எத்தகைய கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது, போதைக்கு அடிமையான நபர்களைச் சரியான முறையில் எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் இந்தத் தேசியப் பணியில் சமூக வலைத்தள ஊடகங்களின் வகிபாகத்தை எவ்வாறு வினைத்திறனாகப் பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
காத்தான்குடி கடற்கரையில் நடைபெறவுள்ள பிரதான நிகழ்வில், 13 முன்னணி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் விசேட சேவை நிலையங்கள் மற்றும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. இதில் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு வழிகாட்டல்கள், தொழில்முறைப் பயிற்சிகள், அவர்களை ஆக்கபூர்வமான பாதையில் முன்னேற்றுவதற்கான விழிப்புணர்வுகள் என்பன வழங்கப்படவுள்ளன. அத்துடன், மருத்துவ பீட மாணவர்களினால் போதைப்பொருள் பயன்பாட்டினால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் பாரதூரமான ஆபத்துகள் மற்றும் மருத்துவத் தீங்குகள் தொடர்பான விசேட காட்சிக் கூடங்களும் விழிப்புணர்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் மாவட்டத்தின் சகல பிரதேசங்களில் இருந்தும் பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு. MM. ரசூல்ஷா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் (NDDCB) மாவட்ட இணைப்பாளர் திரு. ப. தினேஸ் மற்றும் போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் திரு. வி. ஜெகன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தெளிவூட்டல்களை வழங்கினர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ජනාධිපතිවරයාගේ මත්ද්රව්ය නිවාරණ ජාතික වැඩසටහනට සමගාමීව, මඩකලපුව දිස්ත්රික්කය මත්ද්රව්යවලින් තොර ප්රදේශයක් බවට පත්කිරීමේ අරමුණින් මඩකලපුව දිස්ත්රික් ලේකම් කාර්යාලය විසින් සංවිධානය කරනු ලබන දිස්ත්රික් මට්ටමේ දැවැන්ත මත්ද්රව්ය නිවාරණ වැඩසටහනක් ඉදිරි සතිවලදී කාත්තන්කුඩි වෙරළ තීරයේදී පැවැත්වීමට සියලු කටයුතු සූදානම් කරමින් පවතී.
මේ සම්බන්ධයෙන් සමාජ මාධ්ය මාධ්යවේදීන් දැනුවත් කිරීමේ විශේෂ සාකච්ඡාවක් මඩකලපුව අතිරේක දිසාපතිනි සුදර්ශිනී ශ්රීකාන්ත් මහත්මියගේ ප්රධානත්වයෙන් ඊයේ (09.11.2026) මඩකලපුව දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.
මෙහිදී මත්ද්රව්ය නිවාරණ පණිවිඩය ජනතාව අතරට වඩාත් ඵලදායී ලෙස ගෙනයාම, මත්ද්රව්ය උවදුර තුරන් කිරීම සඳහා සාමූහිකව ගත හැකි ක්රියාමාර්ග, මත්ද්රව්යවලට ඇබ්බැහි වූවන් පුනරුත්ථාපනය කිරීම සහ මේ සඳහා සමාජ මාධ්ය සතු සක්රීය දායකත්වය උපයෝගී කරගන්නා ආකාරය පිළිබඳව දීර්ඝ ලෙස සාකච්ඡා කෙරිණි.
කාත්තන්කුඩි වෙරළ පරිශ්රයේ පැවැත්වීමට නියමිත ප්රධාන වැඩසටහනේදී ආයතන 13ක සේවා සහ ප්රදර්ශන කුටි ස්ථාපිත කිරීමට නියමිතය. තරුණ ප්රජාව වෙනුවෙන් රැකියා මාර්ගෝපදේශනය, වෘත්තීය පුහුණු අවස්ථා සහ තරුණයින් නිවැරදි මාවතකට යොමුකිරීමේ වැඩසටහන් මෙහිදී ක්රියාත්මක වේ. එමෙන්ම වෛද්ය පීඨ සිසුන් විසින් මත්ද්රව්ය භාවිතය නිසා ඇතිවන බරපතළ ශාරීරික හා මානසික හානි පිළිබඳව විශේෂ දැනුවත් කිරීම් සිදුකිරීමට නියමිත අතර, දිස්ත්රික්කයේ සියලු ප්රදේශ නියෝජනය කරමින් විශාල ජනකායක් මීට එක්වීමට නියමිතය.
මෙම අවස්ථාවට ප්රජා විශෝධන දෙපාර්තමේන්තුවේ දිස්ත්රික් සම්බන්ධීකාරක එම්.එම්. රසූල්ෂා, අන්තරායකර ඖෂධ පාලක ජාතික මණ්ඩලයේ (NDDCB) දිස්ත්රික් සම්බන්ධීකාරක පී. දිනේෂ් සහ මත්ද්රව්ය නිවාරණ නිලධාරී වී. ජගන් යන මහත්වරුන් ඇතුළු නිලධාරීන් රැසක් සහභාගී වූහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice
දේශීය පුවත්
Under the President's National Drug Eradication Program, the Batticaloa District Secretariat is finalizing extensive preparations to host a grand district-wide anti-drug awareness campaign in Kattankudy in the coming weeks, aiming to transform Batticaloa into a drug-free district.
An awareness and coordination meeting with social media journalists in this regard was held yesterday (09.11.2026) at the Batticaloa District Secretariat, presided over by Additional Government Agent Mrs. Sudharshini Srikanth.
The discussion focused extensively on strategies to effectively disseminate anti-drug messages among the public, actionable steps to eradicate drug abuse, recovery and rehabilitation mechanisms for individuals battling addiction, and leveraging social media platforms to foster positive community engagement.
The upcoming mega event at Kattankudy beach will showcase active contributions and stalls from 13 leading government and partner institutions. It will feature career counseling, vocational training guidance, and development initiatives aimed at empowering the youth. Additionally, medical faculty students will conduct informative demonstrations on the severe health and mental hazards associated with narcotics. A massive turnout of youth and residents from across all divisions of the district is expected.
Key officials present at the briefing included District Coordinator for the Department of Community Based Corrections Mr. M.M. Rasoolsha, District Coordinator for the National Dangerous Drugs Control Board (NDDCB) Mr. P. Dinesh, and Drug Prevention Officer Mr. V. Jegan.
KR TV Network / KR TV Lankan Voice
Local News













Comments