Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய காத்தான்குடி நகர முதல்வர் SHM அஸ்பர்! ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක මහතා හමුවූ කාත්තන්කුඩි නගරාධිපති එස්.එච්.එම්. අස්ෆර් මහතා! Kattankudy Urban Council Chairman SHM Asfar meets President's Secretary Dr. Nandika Sanath Kumanayake!


கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்ட ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை, காத்தான்குடி நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். இந்நிகழ்வின் இடைவேளையின் போது BMICH அதிதிகள் அறையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.


இதன்போது காத்தான்குடி நகர சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் நகர முதல்வரினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், காத்தான்குடி பிரதேசத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவிலிருந்து ஆற்றலைப் பிறப்பிக்கும் செயற்திட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.


காத்தான்குடி நகர சபையின் செயற்பாடுகளைத் தான் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நகர சபையின் மக்கள் நலன்சார் சேவைகளை மென்மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லத் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், காத்தான்குடியின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முழுமையான தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.


இச்சந்திப்பின் நிறைவில், ஜனாதிபதி அவர்களை காத்தான்குடி மண்ணுக்கு அழைத்து வருமாறு நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM விசேட அழைப்பொன்றை விடுத்தார். இக்கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதியின் செயலாளர், காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி நேரடியாக அவதானித்து வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி அவர்களை காத்தான்குடி பிரதேசத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் தெரிவித்தார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice


உள்நாட்டுச் செய்தி


කොළඹ බණ්ඩාරනායක අනුස්මරණ ජාත්‍යන්තර සම්මන්ත්‍රණ ශාලාවේදී (BMICH) පැවති ජාතික ඵලදායිතා සම්මාන උළෙලට ප්‍රධාන ආරාධිත අමුත්තෙකු ලෙස සහභාගී වූ ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක මහතා, කාත්තන්කුඩි නගරාධිපති එස්.එච්.එම්. අස්ෆර් (JP UM) මහතා හමුවී විශේෂ සාකච්ඡාවක නිරත විය. උත්සවයේ අතරමැදි විරාමයේදී BMICH හි විශේෂ ආරාධිත අමුත්තන්ගේ කාමරයේදී මෙම හමුව සිදුවිය.


මෙහිදී කාත්තන්කුඩි නගර සභා බලප්‍රදේශය තුළ දැනට ක්‍රියාත්මක වන සංවර්ධන ව්‍යාපෘති මෙන්ම එළඹෙන 2027 වසරේදී ක්‍රියාත්මක කිරීමට සැලසුම් කර ඇති නව සංවර්ධන යෝජනා පිළිබඳව නගරාධිපතිවරයා විසින් ජනාධිපති ලේකම්වරයා වෙත සවිස්තරාත්මකව කරුණු පැහැදිලි කරන ලදී. තවද කාත්තන්කුඩි ප්‍රදේශයේ ඝන අපද්‍රව්‍ය කළමනාකරණය සහ අපද්‍රව්‍යවලින් බලශක්තිය උත්පාදනය කිරීමේ ව්‍යාපෘතිවල ප්‍රගතිය පිළිබඳවද මෙහිදී විශේෂ අවධානයක් යොමු කෙරිණි.


කාත්තන්කුඩි නගර සභාවේ කටයුතු පිළිබඳව තමන් නිරන්තර විමසිල්ලෙන් පසුවන බව ප්‍රකාශ කළ ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක මහතා, ජනතා සුබසාධන සේවාවන් තවදුරටත් සාර්ථකව පවත්වාගෙන යාම සඳහා සිය සුබපැතුම් සහ ප්‍රශංසාව පළ කළේය. එමෙන්ම කාත්තන්කුඩි නගරයේ අනාගත සංවර්ධන සැලසුම් සඳහා අවශ්‍ය මූල්‍ය ප්‍රතිපාදන ලබාදීමට රජය පූර්ණ සූදානමින් සිටින බවටද ඔහු සහතික විය.


මෙම හමුව අවසානයේ ජනාධිපතිවරයාව කාත්තන්කුඩි ප්‍රදේශයට කැඳවාගෙන එන ලෙස නගරාධිපති එස්.එච්.එම්. අස්ෆර් මහතා විශේෂ ආරාධනයක් කළේය. එම ඉල්ලීම සතුටින් පිළිගත් ජනාධිපති ලේකම්වරයා, කාත්තන්කුඩි නගර සභාවේ ක්‍රියාකාරකම් පිළිබඳව ජනාධිපතිවරයාගේ පෞද්ගලික අවධානයද යොමුව ඇති බැවින්, ඉදිරියේදී ජනාධිපතිවරයා කාත්තන්කුඩි ප්‍රදේශයේ සංචාරය කරවීම සඳහා අවශ්‍ය කටයුතු සම්පාදනය කරන බව ප්‍රකාශ කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice


දේශීය පුවත්


The Chairman of the Kattankudy Urban Council, SHM Asfar JP UM, held a special discussion with the Secretary to the President, Dr. Nandika Sanath Kumanayake, on the sidelines of the National Productivity Awards ceremony held at the Bandaranaike Memorial International Conference Hall (BMICH) in Colombo, where the Secretary was present as a Chief Guest. The meeting took place in the BMICH VIP Lounge during the event intermission.


During the discussion, Chairman Asfar comprehensively briefed the President's Secretary on ongoing development works across the Kattankudy Urban Council area and detailed the new infrastructure proposals outlined for implementation in 2027. Special focus was given to the progress of the local solid waste management programs and waste-to-energy initiatives being introduced in Kattankudy.


Expressing that he closely monitors the community welfare initiatives of the Kattankudy Urban Council, Dr. Nandika Sanath Kumanayake extended his commendations to the Chairman and the Council. He assured that the government stands ready to facilitate necessary state funding and resource allocations to support Kattankudy's future urban development endeavors.


Concluding the meeting, Chairman SHM Asfar extended a special invitation requesting His Excellency the President to visit Kattankudy. Graciously accepting the invitation, the President's Secretary affirmed that the President is personally aware of the Council's progress and committed to coordinating the necessary arrangements for a presidential visit to the Kattankudy region in the near future.


KR TV Network / KR TV Lankan Voice


Local News

Comments