Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அநுராதபுரம் பேருந்து விபத்து தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - உயிரிழந்த இ.போ.ச சாரதி கஞ்சா மற்றும் மதுபானம் பயன்படுத்தியிருந்தமை உறுதி! අනුරාධපුර බස් රථ අනතුර පිළිබඳ හෙළිදරව්වක් - මියගිය ලංගම රියැදුරු ගංජා සහ මත්පැන් පානය කර සිටි බවට තහවුරු වෙයි! Shocking Revelation in Anuradhapura Bus Crash - Deceased SLTB Driver Tested Positive for Cannabis and Alcohol!



அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோரமான பேருந்து விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தில் உயிரிழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கஞ்சா மற்றும் மதுபானம் பயன்படுத்தியிருந்தமை சிறுநீர் மாதிரிப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


கடந்த 10ஆம் திகதி காலை, கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில், அநுராதபுரம் – மிஹிந்தலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ரம்பேவ வெலிஓயா சந்திக்கு அருகில் ஜனகபுரவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்தும், அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மற்றுமொரு இ.போ.ச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்தது. இதன்போது வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தின் பின்புறத்தில் மோதியிருந்தது.


இக்கோர விபத்தில் அட்டவீரகொலேவ மற்றும் ரிதிகம பகுதிகளைச் சேர்ந்த 47 மற்றும் 56 வயதுடைய சாரதி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் 76 பயணிகள் காயமடைந்தனர்.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / விபத்து மற்றும் விசாரணைகள்


අනුරාධපුර - රඹෑව ප්‍රදේශයේ සිදු වූ දරුණු බස් රථ අනතුර සම්බන්ධයෙන් පොලිසිය සිදු කළ මූලික විමර්ශන සහ වෛද්‍ය පරීක්ෂණවලදී වැදගත් තොරතුරු රැසක් අනාවරණය වී තිබේ. අදාළ අනතුරින් ජීවිතක්ෂයට පත් වූ ලංකා ගමනාගමන මණ්ඩලයට අයත් බස් රථයේ රියැදුරු අනතුර සිදුවන අවස්ථාවේ ගංජා සහ මත්පැන් භාවිත කර සිටි බව මුත්‍රා සාම්පල පරීක්ෂණයේදී තහවුරු වී ඇත.


පසුගිය 10 වන දින උදෑසන මහනුවර - යාපනය A-09 මාර්ගයේ අනුරාධපුර - මිහින්තලේ පොලිස් වසමට අයත් රඹෑව වැලිඔය හන්දිය අසලදී ජනකපුර සිට කොළඹ බලා ධාවනය වූ ලංගම බස් රථයක් සහ අක්කරෙයිපත්තුව සිට යාපනය බලා ධාවනය වූ තවත් ලංගම බස් රථයක් මුහුණට මුහුණ ගැටීමෙන් මෙම අනතුර සිදු විය. එහිදී වවුනියාව සිට කොළඹ බලා ධාවනය වූ පෞද්ගලික බස් රථයක් ද කොළඹ බලා ගමන් කළ ලංගම බස් රථයේ පිටුපස ගැටී තිබුණි.


මෙම අනතුරින් ඇටවීරගොල්ලෑව සහ රිදීගම ප්‍රදේශවල පදිංචි වයස අවුරුදු 47 සහ 56 යන වයස්වල පසුවන ලංගම බස් රථ රියැදුරු ඇතුළු සිව්දෙනෙකු ජීවිතක්ෂයට පත් වූ අතර, තවත් මගීන් 76 දෙනෙකු තුවාල ලැබූහ.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / හදිසි අනතුරු සහ විමර්ශන


Significant findings have emerged from preliminary police investigations and medical examinations regarding the tragic bus accident in the Rambewa area of Anuradhapura. Urine sample tests have confirmed that the deceased driver of the Sri Lanka Transport Board (SLTB) bus had consumed cannabis and alcohol at the time of the crash.


The accident occurred on the morning of the 10th near the Rambewa Welioya junction in the Mihintale police division along the Kandy–Jaffna A-09 road, when an SLTB bus traveling from Janakapura to Colombo collided head-on with another SLTB bus traveling from Akkaraipattu to Jaffna. Additionally, a private bus traveling from Vavuniya to Colombo crashed into the rear of the Colombo-bound SLTB bus.


Four individuals, including the SLTB bus driver and three passengers aged 47 and 56 from Etaweeragollewa and Ridigama, lost their lives in the collision, while 76 other passengers sustained injuries.


Reporter: Farhana Badrudeen


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Accidents and Investigations

Comments