சவுதி தாயிப் பல்கலைக்கழகத்தில் இலங்கைத் தூதுவர் ஒமர் லெப்பே அமீர் அஜ்வத் மாணவர்களுடன் விசேட சந்திப்பு! සෞදි තායිෆ් විශ්වවිද්යාලයේදී ශ්රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් මහතා සිසුන් හමුවෙයි! Sri Lankan Ambassador Omar Lebbe Ameer Ajwad holds constructive meeting with students at Taif University in Saudi Arabia!
சவுதி அரேபியாவின் தாயிப் பல்கலைக்கழக (Taif University) மாணவர் விடுதி பள்ளிவாசலில், சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் மதிப்பிற்குரிய ஒமர் லெப்பே அமீர் அஜ்வத் (OL Ameer Ajwad) அவர்களுக்கும் அங்கு கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (10.11.2026) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், சவுதி அரேபியாவில் உயர்கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் கல்விசார் விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் இலங்கையிலுள்ள மாணவர்கள் சவுதி அரேபியப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் (Scholarships) ஊடாகக் கல்வி கற்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள், எதிர்காலக் கல்வி வாய்ப்புகள், தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் மற்றும் உலகளாவிய ரீதியில் வினைத்திறன் மிக்கவர்களாக மிளிர்வது தொடர்பான பெறுமதிமிக்க ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இலங்கைத் தூதுவர் மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து இலங்கை மாணவர்களையும் தூதுவரையும் ஒன்றிணைப்பதில் தாயிப் அழைப்பாளர் உஸ்தாத் ஆலிம் அஸ்மி யூசூபி (Azmy Abdul Salam Yousufy) முக்கிய பங்காற்றியிருந்தார். மாணவர்களின் கல்வி மற்றும் நலன்புரி விவகாரங்களை நேரடியாகக் கேட்டறிந்து ஊக்கமளித்த இலங்கைத் தூதுவருக்கு மாணவர்கள் தரப்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், இச்சந்திப்பு இலங்கை மாணவர்களின் எதிர்காலக் கல்வி முன்னேற்றத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டது.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice
சர்வதேசச் செய்தி / வெளிநாட்டு விவகாரங்கள்
සෞදි අරාබියේ තායිෆ් විශ්වවිද්යාලයේ (Taif University) නේවාසිකාගාර පල්ලි පරිශ්රයේදී, සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් (OL Ameer Ajwad) මහතා සහ එහි අධ්යාපනය ලබන ශ්රී ලාංකික සිසුන් අතර විශේෂ සුහද හමුවක් ඊයේ (10.11.2026) සාර්ථකව පැවැත්විණි.
මෙහිදී සෞදි අරාබියේ උසස් අධ්යාපනය හදාරන ශ්රී ලාංකික සිසුන් මුහුණ දෙන විවිධ අභියෝග සහ ගැටලු පිළිබඳව සාකච්ඡා කෙරුණු අතර, ඊට අදාළ විසඳුම් සහ යෝජනාද තානාපතිවරයා වෙත ඉදිරිපත් කෙරිණි. එමෙන්ම ශ්රී ලංකාවේ සිටින සිසුන්ට ශිෂ්යත්ව (Scholarships) හරහා සෞදි විශ්වවිද්යාලවලට ඇතුළත්වීමේ ක්රමවේද, අනාගත අධ්යාපනික අවස්ථා, නූතන තාක්ෂණික දියුණුවට සරිලන පරිදි තමන්ව සූදානම් කරගැනීම සහ ගෝලීය මට්ටමින් දක්ෂ වෘත්තිකයන් බවට පත්වීම සම්බන්ධයෙන්ද තානාපතිවරයා විසින් වටිනා උපදෙස් හා මඟපෙන්වීම් ලබා දෙන ලදී.
තායිෆ් දේශක අස්මි යූසුෆි (Azmy Abdul Salam Yousufy) මව්ලවිතුමන් විසින් මෙම හමුව සංවිධානය කරමින් සිසුන් සහ තානාපතිවරයා සම්බන්ධීකරණය කිරීමට මූලිකත්වය ගෙන කටයුතු කර තිබුණි. ශ්රී ලාංකික සිසුන්ගේ සුබසාධනය සහ අධ්යාපනික කටයුතු පිළිබඳව සොයා බලා උපදෙස් ලබාදීම සම්බන්ධයෙන් සිසුන් විසින් තානාපතිවරයා වෙත සිය කෘතඥතාව පළ කරන ලදී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice
ජාත්යන්තර පුවත් / විදේශ කටයුතු
A constructive interactive session took place between the Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, His Excellency Omar Lebbe Ameer Ajwad, and Sri Lankan students pursuing higher studies at Taif University, held at the university hostel mosque yesterday (10.11.2026).
During the meeting, the students discussed various challenges and academic matters they face while studying in Saudi Arabia, submitting constructive proposals for support. Ambassador Ameer Ajwad provided valuable guidance and insights on application avenues for prospective Sri Lankan students seeking higher education scholarships in Saudi Arabian universities, strategies for leveraging emerging technologies, expanding global competence, and navigating future career prospects.
Usthadh Alim Azmy Yousufy (Azmy Abdul Salam Yousufy), Islamic Preacher in Taif, played a pivotal role in coordinating the event and bringing the students together with the Ambassador. The student community extended their heartfelt appreciation to Ambassador Ameer Ajwad for his attentive listening to their needs and proactive mentorship aimed at advancing the academic welfare of Sri Lankan expatriate youth.
KR TV Network / KR TV Lankan Voice
International News / Foreign Affairs











Comments