Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்காக விசேட விடுமுறை: தாபனவிதித் திருத்தம் குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பு මුස්ලිම් රජයේ සේවකයින්ට සිකුරාදා දිනවල ජුම්මා යාඥාව සඳහා විශේෂ නිවාඩු: ආයතන සංග්‍රහ සංශෝධනය රජය නිල වශයෙන් නිවේදනය කරයි Sri Lankan Government Issues Directive on Special Friday Prayer Leave for Muslim Public Officers: Establishment Code Revision Confirmed


இலங்கை அரசாங்க சேவையிலுள்ள முஸ்லிம் அரச அலுவலர்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆ மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக, மதியம் 12:00 மணி முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்படாத விசேட விடுமுறையை வழங்குவதற்கான தாபனவிதித் திருத்தத்தை அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.


அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிரி (J. J. Ratnasiri) அவர்களின் கையொப்பத்துடன், அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள 21/2016 இலக்க சுற்றுநிருபத்தின் ஊடாக இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12:1 உப பிரிவினை மீளமைப்பதற்கான அங்கீகாரம் 2016 யூலை 12 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்டது.


அதற்கமைய, "திணைக்களத் தலைவரின் விருப்பின் பிரகாரம், சேவையின் தேவைப்பாட்டிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படா வண்ணம், முஸ்லிம் அரசாங்க அலுவலர்களுக்கு தமது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக வெள்ளிக்கிழமை நாட்களில் மதியம் 12.00 மணியில் இருந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்படாத காலத்திற்கு விசேட விடுமுறை வழங்க முடியும்" என புதிய திருத்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த விசேட விடுமுறைக்கான ஏற்பாடானது முஸ்லிம் அரசாங்க உத்தியோகத்தர்களின் வழிபாட்டு உரிமைகளை உறுதிப்படுத்தும் அதேவேளை, பொதுச் சேவையின் உற்பத்தித் திறனுக்கோ அல்லது திணைக்களங்களின் அன்றாடச் செயற்பாடுகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நெகிழ்வுத்தன்மையுடன் அமுல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / அரச நிர்வாகம், முஸ்லிம் உத்தியோகத்தர் விசேட விடுமுறை மற்றும் சுற்றுநிருபங்கள்


ශ්‍රී ලංකා රජයේ සේවයේ නියුතු මුස්ලිම් රජයේ නිලධාරීන්ට සිකුරාදා දිනවල ජුම්මා ඇතුළු ආගමික වතාවත්වල නිරත වීම සඳහා, පස්වරු 12:00 සිට පැය දෙකකට නොවැඩි විශේෂ නිවාඩුවක් ලබාදීමට අදාළ ආයතන සංග්‍රහ සංශෝධනය රාජ්‍ය පරිපාලන හා කළමනාකරණ අමාත්‍යාංශය විසින් නිල වශයෙන් නිකුත් කර ඇත.


රාජ්‍ය පරිපාලන හා කළමනාකරණ අමාත්‍යාංශයේ ලේකම් ජේ. ජේ. රත්නසිරි (J. J. Ratnasiri) මහතාගේ අත්සනින්, සියලුම අමාත්‍යාංශ ලේකම්වරුන්, පළාත් ප්‍රධාන ලේකම්වරුන් සහ දෙපාර්තමේන්තු ප්‍රධානීන් වෙත යොමු කරන ලද 21/2016 දරන චක්‍රලේඛය මඟින් මෙම තීරණය තහවුරු කර තිබේ.


ආයතන සංග්‍රහයේ XII වැනි පරිච්ඡේදයේ 12:1 උප සංශෝධනය සඳහා වන අනුමැතිය 2016 ජූලි මස 12 වැනි දින පැවැති අමාත්‍ය මණ්ඩල රැස්වීමේදී එළඹුණු තීරණයකට අනුව හිමිව ඇත.


ඒ අනුව, "දෙපාර්තමේන්තු ප්‍රධානියාගේ කැමැත්ත පරිදි, සේවයේ අවශ්‍යතාවලට කිසිදු බාධාවක් නොවන අයුරින්, මුස්ලිම් රජයේ නිලධාරීන්ට ඔවුන්ගේ ආගමික වතාවත්වල නිරත වීම සඳහා සිකුරාදා දිනවල මධ්‍යහ්න 12.00 සිට පැය දෙකකට නොවැඩි කාලයක් සඳහා විශේෂ නිවාඩු ලබා දිය හැකිය" යනුවෙන් නව සංශෝධනයේ පැහැදිලිව දක්වා තිබේ.


මෙම විශේෂ නිවාඩු ප්‍රතිපාදනය මුස්ලිම් රජයේ සේවකයින්ගේ ආගමික අයිතිවාසිකම් තහවුරු කරන අතරම, රාජ්‍ය සේවයේ ඵලදායිතාවයට හෝ දෙපාර්තමේන්තුවල දෛනික කටයුතුවලට බාධාවක් නොවන පරිදි නම්‍යශීලීව ක්‍රියාත්මක කළ යුතු බවට උපදෙස් දී ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / රාජ්‍ය පරිපාලනය, මුස්ලිම් නිලධාරීන්ගේ විශේෂ නිවාඩු සහ චක්‍රලේඛ


The Ministry of Public Administration and Management has officially issued a directive implementing an amendment to the Establishments Code, enabling Muslim public officers in Sri Lanka to obtain a special leave of up to two hours on Fridays, starting from 12:00 PM, to engage in congregational prayers and religious observances.


Confirmed via Circular No. 21/2016, signed by the Secretary of the Ministry of Public Administration and Management, J. J. Ratnasiri, and dispatched to all Ministry Secretaries, Provincial Chief Secretaries, and Heads of Departments, this directive amends Section 12:1 of Chapter XII of the Establishments Code.


The Cabinet of Ministers, at its meeting held on July 12, 2016, approved the revision of this sub-section to facilitate adequate leave for Friday prayers.


The amended provision states: "Subject to the discretion of the Head of the Department, and on the strict condition that no disruption is caused to the exigencies of the service, Muslim public officers may be granted special leave not exceeding two hours starting from 12:00 PM on Fridays to attend their religious prayers."


While this administrative amendment secures the religious rights of Muslim public officers to attend Friday Jumu'ah prayers, it has been underscored that the facilitation of such leave must be managed with organizational flexibility to ensure the productivity and daily functioning of state departments remain unimpeded.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Public Administration, Special Leave for Muslim Officers and Official Circulars

Comments