பதவிகளைப் பயன்படுத்தி எத்தனை மக்களின் கண்ணீரைத் துடைத்தோம் என்பதே முக்கியம்: அல்குர்ஆன் வசனத்தை நினைவூட்டி கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உரை! තනතුරු භාවිත කර කොපමණ ජනතාවකගේ කඳුළු පිසදැමුවේද යන්නයි වැදගත්: අල්-කුර්ආන් වැකියක් සිහිපත් කරමින් ආචාර්ය හිස්බුල්ලාහ් දේශනයක් පවත්වයි! What Matters Is How Many Tears We Wiped Using Our Positions: Dr. Hizbullah Delivers Speech Recalling Quranic Verse!
அரசியல் பதவிகள் என்பது அதிகாரம் செலுத்துவதற்கான கருவியல்ல; அது இஸ்லாம் கற்றுத்தரும் மிக முக்கியமான பாடமான 'அமானிதம்' (மக்களால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு) எனவும், நாம் எத்தனை பதவிகளை வகித்தோம் என்பது முக்கியமல்ல; அந்தப் பதவிகளைப் பயன்படுத்தி எத்தனை மக்களின் கண்ணீரைத் துடைத்தோம் என்பதே முக்கியம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (2026 நவம்பர் 15) கொழும்பு டங்கன் வைட் (Duncan White) கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் "எதிர்கால நடவடிக்கைக்கான மூலோபாய திட்டமிடல்" என்ற தொனிப்பொருளில், கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் முதல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் வரை அனைவரும் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தோம் எனத் தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களைச் சந்திப்பவர்களாக இருக்கக் கூடாது எனவும், மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, வறிய குடும்பங்கள், நோயாளர்கள், கல்விக்காகப் போராடும் மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், மக்களுக்காகத் தமது கதவுகள் எப்போதும் திறந்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதே எனினும், அவை தனிப்பட்ட உறவுகளையோ அல்லது கட்சியின் ஒற்றுமையையோ பாதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அடிக்கடி வலியுறுத்திய ஒற்றுமையை நினைவுகூர்ந்து அனைவரும் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், அரசியல் பணியில் ஒழுக்கமும் நேர்மையும் அவசியம் எனவும், ஊழல், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் உறவினர் ஆதிக்கம் போன்றவற்றிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பொது நிதி என்பது மக்களுடைய பணம் எனவும், அது மக்களின் நலனுக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பாடசாலை, வைத்தியசாலை, குடிநீர் மற்றும் வீதி வசதிகள் தொடர்பான குறைபாடுகளை ஆவணப்படுத்தி, உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாக இணைந்து அமைச்சுக்கள் ஊடாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், இளைஞர்களுக்குத் தலைமைத்துவப் பொறுப்புகளையும் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்காகத் தாம் இருக்கின்றோம் என்பதை வெறும் வார்த்தைகளால் அன்றி, செயல்களின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், "நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை ஒன்றுபட்டுப் உறுதியாய்ப் பற்றிப் பிடியுங்கள்; பிரிந்து விடாதீர்கள்" (அல்குர்ஆன் 3:103) என்ற அல்குர்ஆன் வசனத்தையும் நினைவூட்டி கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தனது உரையை நிறைவு செய்தார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / அரசியல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (17/11/2026)
තනතුරු භාවිත කර කොපමණ ජනතාවකගේ කඳුළු පිසදැමුවේද යන්නයි වැදගත්: අල්-කුර්ආන් වැකියක් සිහිපත් කරමින් ආචාර්ය හිස්බුල්ලාහ් දේශනයක් පවත්වයි!
දේශපාලන තනතුරු යනු බලය පැතිරවීමේ මෙවලමක් නොව, එය ඉස්ලාම් දහම උගන්වන ඉතා වැදගත් පාඩමක් වන 'අමානත්' (ජනතාව විසින් භාර දෙන ලද වගකීමක්) බවත්, අප තනතුරු කීයක් දැරුවේද යන්න නොව, එම තනතුරු භාවිත කරමින් කොපමණ ජනතාවකගේ කඳුළු පිසදැමුවේද යන්නයි වැදගත් වන්නේ යැයි ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ සභාපති සහ පාර්ලිමේන්තු මන්ත්රී ආචාර්ය එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලාහ් මහතා පැවසීය.
පසුගිය ඉරිදා (2026 නොවැම්බර් 15) කොළඹ ඩන්කන් වයිට් (Duncan White) ශ්රවණාගාරයේදී පැවති ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ "අනාගත ක්රියාමාර්ග සඳහා උපායමාර්ගික සැලසුම් කිරීම" යන තේමාව යටතේ පක්ෂයේ මහජන නියෝජිතයින් සමඟ පැවති විශේෂ සාකච්ඡා වැඩමුළුව අමතමින් ඔහු මේ බව ප්රකාශ කළේය.
පාර්ලිමේන්තු මන්ත්රීවරයාගේ සිට පළාත් පාලන මන්ත්රීවරයා දක්වා සියලු දෙනා තමන්ව තෝරා පත් කර ගත් ජනතාව වෙනුවෙන් කුමක් කළේද යන්න පිළිබඳව ස්වයං විමර්ශනයක යෙදිය යුතු බව ඔහු සඳහන් කළේය. මහජන නියෝජිතයින් මැතිවරණ කාලවලදී පමණක් ජනතාව හමුවන පිරිසක් නොවිය යුතු බවත්, ජනතාවගේ නිවෙස් වෙත ගොස් ඔවුන්ගේ දුක සැප බෙදාගත යුතු බවත් ඔහු අවධාරණය කළේය. විශේෂයෙන්ම දිළිඳු පවුල්, රෝගීන්, අධ්යාපනය වෙනුවෙන් අරගල කරන සිසුන්, ගොවීන්, ධීවරයින් සහ රැකියා අපේක්ෂිත තරුණ තරුණියන්ගේ ගැටලු විසඳීමට ප්රමුඛත්වය දිය යුතු බවත්, ජනතාව වෙනුවෙන් තම දොරටු සැමවිටම විවෘතව තැබිය යුතු බවත් ඔහු පැවසීය.
දේශපාලන මතභේද ඇතිවීම ස්වභාවික වුවද, ඒවා පෞද්ගලික සබඳතාවලට හෝ පක්ෂයේ සමගියට බාධාවක් නොවිය යුතු බව පෙන්වා දුන් ඔහු, පක්ෂයේ නිර්මාතෘ මර්හූම් එම්.එච්.එම්. අෂ්රොෆ් මහතා නිරන්තරයෙන් අවධාරණය කළ සමගිය සිහිපත් කරමින් සියලු දෙනා එක්සත්ව කටයුතු කළ යුතු බව ඉල්ලා සිටියේය.
තවද, දේශපාලන කටයුතුවලදී විනය සහ අවංකභාවය අත්යවශ්ය බවත්, දූෂණය, අල්ලස, බලය අයුතු ලෙස භාවිත කිරීම සහ ඥාති සංග්රහය වැනි දේවලින් මහජන නියෝජිතයින් වැළකී සිටිය යුතු බවත් ඔහු අවධාරණය කළේය. මහජන මුදල් යනු ජනතාවගේ මුදල් බවත්, එය ජනතාවගේ සුබසාධනය සඳහා පමණක් භාවිත කළ යුතු බවත් ඔහු පෙන්වා දුන්නේය. සෑම ප්රදේශයකම පාසල්, රෝහල්, පානීය ජලය සහ මාර්ග පහසුකම් සම්බන්ධ අඩුපාඩු ලේඛනගත කර, පළාත් පාලන, පළාත් සභා සහ පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් කණ්ඩායමක් ලෙස එක්ව අමාත්යාංශ හරහා විසඳුම් ලබා දිය යුතු බවත්, තරුණ තරුණියන්ට නායකත්ව වගකීම් සහ අධ්යාපන, තාක්ෂණ හා ව්යවසායකත්ව මඟපෙන්වීම් ලබා දිය යුතු බවත් ඔහු ප්රකාශ කළේය.
තමන් ජනතාව වෙනුවෙන් සිටින බව වචනයෙන් පමණක් නොව ක්රියාවෙන් ඔප්පු කළ යුතු බවට ප්රාර්ථනා කරමින්, "ඔබ සියලු දෙනාම අල්ලාහ්ගේ රැහැන එක්සත්ව දැඩි ලෙස අල්ලා ගන්න; වෙන් නොවන්න" (අල්-කුර්ආන් 3:103) යන අල්-කුර්ආන් වැකිය ද සිහිපත් කරමින් ආචාර්ය හිස්බුල්ලාහ් මහතා සිය දේශනය අවසන් කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / දේශපාලන, ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසය සහ ආචාර්ය එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලාහ් (17/11/2026)
What Matters Is How Many Tears We Wiped Using Our Positions: Dr. Hizbullah Delivers Speech Recalling Quranic Verse!
Political office is not an instrument to wield power, but an 'Amanah' (a sacred trust entrusted by the people) as taught by Islam, and what truly matters is not how many positions we held, but how many tears we wiped away using those positions, stated Sri Lanka Muslim Congress (SLMC) Chairman and Member of Parliament Dr. M.L.A.M. Hizbullah.
He made these remarks while addressing a special consultative workshop with the party's public representatives held under the theme "Strategic Planning for Future Action" at the Duncan White Auditorium in Colombo last Sunday (November 15, 2026).
Dr. Hizbullah emphasized that every representative, from Members of Parliament down to local government councilors, must engage in self-introspection regarding what they have done for the people who elected them. He noted that public representatives should not meet the public solely during election seasons, but must visit people's homes and share in their joys and sorrows. He stressed that priority must be given to resolving the issues of impoverished families, patients, students struggling for education, farmers, fishermen, and unemployed youth, keeping their doors open to the public at all times.
Acknowledging that political differences of opinion are natural, he urged that they must never affect personal relationships or party unity. Recalling the unity frequently emphasized by the party's founding leader, Marhoom M.H.M. Ashraff, he called upon everyone to work together in solidarity.
Furthermore, he insisted that discipline and integrity are essential in politics, urging representatives to steer clear of corruption, bribery, abuse of power, and nepotism. Pointing out that public funds belong to the people and must be utilized strictly for public welfare, he advised local, provincial, and parliamentary representatives to document deficiencies in schools, hospitals, drinking water, and road infrastructure in every area and work as a unified team to secure solutions through relevant ministries. He also highlighted the need to empower youth with leadership responsibilities alongside educational, technological, and entrepreneurial guidance.
Concluding his address with a prayer that representatives prove their commitment to the people through actions rather than mere words, Dr. Hizbullah reminded the gathering of the Holy Quranic verse: "And hold firmly to the rope of Allah all together and do not become divided" (Al-Quran 3:103).
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Politics, Sri Lanka Muslim Congress and Dr. M.L.A.M. Hizbullah (17/11/2026)

Comments