Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சுகாதார சீர்கேடு காரணமாக காத்தான்குடி பொதுச் சந்தைக்கு நகர சபையினால் சீல் வைப்பு - மறு அறிவித்தல் வரை மூடுமாறும் அறிவிப்பு-படங்கள்.



(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காத்தான்குடி - 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான பொதுச் சந்தை 


காத்தான்குடி நகர சபையின் விஷேட கூட்ட தீர்மாணத்திற்கமைய இன்று 05 வியாழக்கிழமை பிற்பகல் மதியம் சுமார் 2.00 மணியிலிருந்து கால வரையரையின்றி காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,நகர சபை உறுப்பினர்கள்,அதிகாரிகள் ஆகியோரினால் முற்று முழுதாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன் ,மறு அறிவித்தல் வரை மூடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.


மேற்படி விடயம் தொடர்பில் காத்தான்குடி சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் .........



குறித்த பொதுச் சந்தையில் பல வருட காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாவும்,மழை காலங்களில் முற்று முழுதாக வெள்ளத்தில் தாழ்வதாகவும் பொது மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்தும் வந்தனர்.


இது தொடர்பில், நாங்கள் பல வேண்டுகோள்களை விடுத்திருந்தோம் எந்த வேண்டுகோளையும் பள்ளிவாயல் நிருவாகம் கணக்கெடுக்கவில்லை. கடந்த பல நாட்களாக பொது மக்கள் நகர சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் செய்த வன்னம் எங்களுடைய உத்தியோகத்தர்கள் நேரடியாக பார்வையிட்ட சமயம் உடனடியாக இந்த சந்தையை நகர சபை கட்டளைச் சட்டத்திற்கமைய மூடுவதற்கு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.



அதேய சமயம் எங்களுடைய நகர சபை விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது அந்த கூட்ட  தீர்மாணத்திற்கமைவாகவும் இச் சந்தையை சீல் வைத்துள்ளோம் அத்தோடு கால வரையரையின்றி குறித்த சந்தை மூடப்பட்டுள்ளதாக மக்களுக்கு அறிவிப்பதாகவும் நகர சபை தவிசாளர் அஸ்பர் மேலும் தெரிவித்தார்.


சுகாதார சீர்கேடு பாதுகாப்பின்மை காரணமாக காத்தான்குடி நகரசபைக்கு பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளுக்கமைய பொதுச் சந்தையை அதிரடியாக மூடும் நடவடிக்கையில் காத்தான்குடி சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







சுகாதார சீர்கேடு காரணமாக காத்தான்குடி பொதுச் சந்தைக்கு நகர சபையினால் சீல் வைப்பு - மறு அறிவித்தல் வரை மூடுமாறும் அறிவிப்பு-படங்கள். Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 06, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.