Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி - தேசிய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு “உண்மையின் ஒளிக்குரல்” உயர்விருது வழங்கி கௌரவிப்பு!


தேசிய ஊடகங்களில் பணியாற்றி வரும் காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்கள் “உண்மையின் ஒளிக்குரல்” எனும் உயர்விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட விருது வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது.


மாவட்ட ரீதியாகச் செயலாற்றி வரும் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு சேவையைப் பாராட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் டி.எல். ஜௌபர் கான், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்த்தீன், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீ, ஊடகவியலாளர் எஸ். சஜீத் ஆகியோர் விருதுகளும் சான்றிதழும் வழங்கி கௌரவங்களைப்  பெற்றுக்கொண்டனர்.


பாடும்மீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ். மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, சிரேஷ்ட உறுப்பினர் லயன்ஸ் சடாற்சரராஜா ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

மேலும், 306 D10 லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன்ஸ் க. லொகேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

20 ஆண்டுகால சமூகப் பணியை நிறைவு செய்துள்ள பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் இந்த விழாவில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


காத்தான்குடி - தேசிய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு “உண்மையின் ஒளிக்குரல்” உயர்விருது வழங்கி கௌரவிப்பு! Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.