காத்தான்குடி மத்திய கல்லூரியில் 51 பேர் பல்கலைக் கழகத்திற்கு தகுதி
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியில் இம்முறை வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஐம்பத்தி ஒரு மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தெரிவித்தார்.
அந்தவகையில் விஞ்ஞானத் துறையில் பழைய பாடத்திட்டத்தில் ஐந்து பேரும், புதிய பாடத்திட்டத்தில் எட்டு பேரும், கணித துறையில் பழைய பாடத்திட்டத்தில் ஆறு பேரும், புதிய பாடத்திட்டத்தில் ஆறு பேரும், வர்த்தக துறையில் பழைய பாடத்திட்டத்தில் ஒருவரும், புதிய பாடத்திட்டத்தில் பத்து பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு பொறியியல் தொழில்நுட்பத்தில் பழைய பாடத்திட்டத்தில் ஒருவரும், புதிய பாடத்திட்டத்தில் ஆறு பேரும், விஞ்ஞான தொழில்நுட்பத்தில் பழைய பாடத்திட்டத்தில் இரண்டு பேரும், புதிய பாடத்திட்டத்தில் மூன்று பேரும், கலைத் துறையில் பழைய பாடத்திட்டத்தில் ஒருவரும், மேலதிக கணித தொழில்நுட்பத்தில் இரண்டு பேரும் சித்தி பெற்றுள்ளனர்.
கணித துறையில் பழைய பாடத்திட்டத்தில் எம்.மதீன் அஹமட் என்ற மாணவன் ஒரு ஏ, இரண்டு வீ புள்ளியை பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடமும், பொறியியல் தொழில்நுட்பத்தில் புதிய பாடத்திட்டத்தில் கே.எம்.எம்.காரூன் என்ற மாணவன் இரண்டு ஏ, ஒரு வீ புள்ளியை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடமும், எம்.எல்.ஏ.அர்சாத் என்ற மாணவன் இரண்டு ஏ, ஒரு வீ புள்ளியை பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் இம்முறை வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஐம்பத்தி ஒரு மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெறுவதற்கு அயராது பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்களது பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலையின் அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் 51 பேர் பல்கலைக் கழகத்திற்கு தகுதி
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 02, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 02, 2020
Rating:


கருத்துகள் இல்லை: