Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஜனாதிபதியின் அபிவிருத்திகளை கிராம மட்டத்தில் முன்னெடுக்க மக்களின் பங்கு அவசியம்-சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதிக்கான அமைப்பாளர் முகம்மட் சியாட் தெரிவிப்பு.



(ஊடகப்பிரிவு) 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் கிராமிய மட்டத்தில் அபிவிருத்திக்குழுக்களை உருவாக்கி பொது மக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் மக்கள் சந்திப்பு இன்று மாலை காத்தான்குடி அல்-ஹிரா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
164ஏ, 164சீ ஆகிய கிராம சேவகர் பிரிவின் சிறீலங்கா பொதுஜன பெரமுன இளைஞர் அணியின் தலைவர்
எம்.ஏ.எம்.அன்பாஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.சியாட் பங்கேற்று சிறப்பித்தார்.


இதன்போது மேற்படி கிராம சேவகர் பிரிவுகளின் பொது மக்கள் பங்கேற்று தமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சுயதொழில் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பொதுப்பகுதி  அபிவிருத்திகள் தொடர்பாக தங்களது கருத்துக்களை குறிப்பிட்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் கடந்த ஆட்சிக்காலங்களைப்போல் தன்னிச்சையான போக்குகள் இல்லாது மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றே அனைத்து கிராமிய வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவே ஜனாதிபதியின் கரங்களை தொடர்ந்தும் பலப்படுத்துவதன் மூலமாக நமது எதிர்கால கனவுகளை நனவாக்கிக்கொள்ள முடியுமென தெரிவித்தார்.







ஜனாதிபதியின் அபிவிருத்திகளை கிராம மட்டத்தில் முன்னெடுக்க மக்களின் பங்கு அவசியம்-சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதிக்கான அமைப்பாளர் முகம்மட் சியாட் தெரிவிப்பு. Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 01, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.