முஸ்லிம் விவாகம் விவாகரத்து சட்டத்தை நீக்க கோரி பாராளுமன்றம் உறுப்பினர் ரத்ன தேரரின் தனி நபர் பிரேரணையை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் மட்டடக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என் கே றம்ழான் தெரிவிப்பு
முஸ்லிம் விவாகம் விவாகரத்து சட்டத்தை நீக்க கோரி பாராளுமன்றம் உறுப்பினர் ரத்ன தேரரின் தனி நபர் பிரேரணையை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் மட்டடக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என் கே றம்ழான் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை வரலாற்றில் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு முஸ்லிம் விவாகம் விவாகரத்து சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது இந்த சட்டத்தால் நாட்டிற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாக இதுவரை எவரும் அச்சட்டங்களை சவலுக்கு உட்படுத்தியதாக வரலாறு கிடையாது
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் விவாகம் விவாகரத்து சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என ஒரு பௌத்த துறவி பாராளமன்றத்தில் பிரேரணையை கொண்டுவந்துள்ளதை வன்மையாக கண்டிக்கின்றேன்
இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களில் கலாச்சார உரிமைகளை படிப்படியாக இல்லாமல் செய்வதில் பௌத்த துறவிகளே மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் கடந்த காலத்தில் ஹலால் விடயம் தொடக்கம் கலாச்சார ஆடைகள் வரை அதற்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டம்களையும் பேரணிகளையும் முன்நின்று நடாத்தியவர்கள் பௌத்த துறவிகளே
இவ்வாறு இந்த நாட்டில் சிறுபான்மையர்களின் காலம் காலமாக இந்த நாட்டில் இருந்து வந்த சட்டங்களை இல்லாமல் செய்வதில் கடும்போக்கு பௌத்த துறவிகள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்
இவ்வாறு கடந்த காலத்தில் ஒரு சிறுபான்மையின் உரிமைகளை மறுத்தமையினாலேயே அது பாரிய அழிவை ஏற்படுத்திய யுத்தத்திற்கு வழிகோழியது என்பது கசப்பான உண்மையாகும்
இந்நாட்டில் அமைதியையும் ஐக்கியத்தையும் போதிக்க வேண்டிய பௌத்த துறவிகள் அடுத்த இனத்தின் உரிமைகளை இல்லாமல் செய்து அதன் மூலம் நாட்டில் இன வேறுபாடுகளையும் அமைதியின்மையை ஏற்படுத்த வறிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதை கண்டிக்கின்றேன்
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை இல்லாமல் செய்வதன் மூலம் ரத்ன தேரரால் பௌத்த இனத்திற்கு எதனையும் பெற்றுக் கொடுத்து விட முடியாது
இந்த நாட்டின் பௌத்த துறவிகள் சிறுபான்மை இனத்தவர்களை அரவனைத்து செயற்பட வேண்டும் அடுத்த இனத்தின் உரிமைகளை பறித்தெடுப்பதன் மூலம் எதனையும் சாதித்து விட முடியாது
இவ்வாரான செயற்பாடுகளுக்கு ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க கூடாது
கடந்த காலங்களில் பல்வேறு அமைதியின்மைக்கு பல கடும்போக்கு பௌத்த துறவிகளே காரணமாக இருந்தார்கள் என்பதை அரசாங்கம் நன்கு அறியும்
அவ்வாரானதொரு செயற்பாடு இந்த ஆட்சியில் அரசாங்கமும் ஜனாதிபதியும் இடமளிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்
முஸ்லிம் விவாகம் விவாகரத்து சட்டத்தை நீக்க கோரி பாராளுமன்றம் உறுப்பினர் ரத்ன தேரரின் தனி நபர் பிரேரணையை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் மட்டடக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என் கே றம்ழான் தெரிவிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 14, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 14, 2020
Rating:

கருத்துகள் இல்லை: