Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு ஒரு கோடி ஐம்பது இலட்சம் செலவில் அபிவிருத்திப்பணிகள் நிறைவு.

 


ஊடகப் பிரிவு

காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான மருந்துக் களஞ்சியசாலை, அம்பியூலன்ஸ் வண்டி  நிறுத்திவைப்பதற்கான பாதுகாப்பான தரிப்பிடம் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் தங்குவதற்கான விடுதி என்பன போன்ற பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 



காத்தான்குடி தள வைத்தியசாலையைப் பொறுத்தமட்டில்
முறையாக  பராமரிக்கக் கூடிய மருந்துக் களஞ்சியசாலை ஒன்று இல்லை என்கின்ற பிரச்சினை மிக நீண்ட காலமாக இருந்து  வந்த விடயமாகும். 



கடந்த அரசாங்கத்தின் போது சுகாதார இராஜாங்க அமைச்சராக இருந்த பைசல் காசிம் அவர்களிடம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் வேண்டிக் கொண்டதற்கிணங்க அதற்குரிய நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருந்துக் களஞ்சியசாலையினுடைய பணிகள் பூரணமாக நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன.



அந்த வகையில் இந்தக் களஞ்சியசாலையானது காத்தான்குடி தள வைத்தியசாலைக்குத் தேவையான அனைத்து மருந்து வகைகளையும் கெட்டு விடாமல் நல்ல முறையில் பாதுகாக்கக் கூடியவாறு முழுமையாக குளிரூட்டப்பட்ட ஓர் களஞ்சியசாலையாக இப்போது அமையப்பெற்றிருக்கின்றது.


மேலும் அம்பியூலன்ஸ் வண்டிகளை நிறுத்திவைப்பதற்கான பாதுகாப்பான நிறுத்தல் பகுதி மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் தங்குவதற்கான விடுதி வசதிகள் என்பனவும் இல்லாதிருந்த நிலையில் முன்னாள்கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியால் அவைகளும் இப்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார்  ஒரு கோடியே ஐம்பது இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. 


அத்துடன் ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் செலவில் விசேட வைத்திய நிபுனர்களுக்கான தங்குமிட வசதிகளும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டு ஏற்கனவே வைத்திய சாலைக்கு கையளிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு ஒரு கோடி ஐம்பது இலட்சம் செலவில் அபிவிருத்திப்பணிகள் நிறைவு. Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 08, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.