Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இரண்டு விருதுகளை வென்றது விடிவெள்ளி! |



இரண்டு விருதுகளை வென்றது விடிவெள்ளி! Vidivelli won two awards

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து நடாத்திய 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ‘விடிவெள்ளி‘ பத்திரிகை இரண்டு விருதுகளை வென்றது.

'சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செய்தி இணையத்தளங்களுக்கான சிறப்புச் சான்றிதழ் விருது‘ மற்றும் ‘சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பத்திரிகைகளுக்கான சிறப்புச் சான்றிதழ் விருது‘ ஆகியவற்றை விடிவெள்ளி தனதாக்கிக் கொண்டது.

இதற்கமைய 'சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செய்தி இணையத்தளங்களுக்கான' சிறப்புச் சான்றிதழ் விருதை விடிவெள்ளி பத்திரிகையின் சிரேஷ்ட உதவி ஆசிரியர் எஸ்.என்.எம். ஸுஹைல் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பத்திரிகைகளுக்கான சிறப்புச் சான்றிதழ் விருதை விடிவெள்ளி பத்திரிகையின் பக்க வடிவமைப்பாளர் ராமகிருஷ்ணன் விமலா பெற்றுக் கொண்டார். 

படத்தில் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் மற்றும் விடிவெள்ளி ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் ஆகியோருடன் விருது பெற்றோர் காணப்படுகின்றனர். 




இரண்டு விருதுகளை வென்றது விடிவெள்ளி! | Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 14, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.