முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்றால் அது SLMC யால் மாத்திரமே ,ஏனைய கட்சிகள் செல்லாக் காசுகள்தான் .
அம்பாறை, மட்டு, திருமலை மாவட்டங்கள் மாத்திரமன்றி நாட்டின் எந்த ஒரு மாவட்டத்திலாவது முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வரவேண்டுமென்றாலும் அது முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து அமைக்கும் கூட்டணி மூலமே இனிமேல் சாத்தியமாகும் ,
இல்லையேல் சாத்தியமே இல்லை ,
ஆளும் அரசாங்கம் எவ்வளவு தான் தாங்கள் புதிய முஸ்லிம் தலைமைத்துங்களை உருவாக்குவோம் என்ற போதிலும் அவை அனைத்தும் சிதறிவாழும் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கான ஏமாற்று நாடகமேயாகும்,
ஆனால் அவர்களின் உள்ளக பிரச்சாரங்கள் அனைத்தும் நாட்டில் எந்த ஒரு முஸ்லிம் பிரதிநதித்துவமும் இனிமேல் எந்த ஒரு பகுதியிலும் வந்து விடக் கூடாது என்பதாகவே உள்ளது ,
அவ்வாறு வருவதும் அதற்காக அவர்கள் ஒத்துழைப்பதும் அவர்களது பக்க பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இல்லாமல் செய்துவிடும் என்பது அவர்கள் அறியாத விடயமல்ல ,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்களது வெளிப்படையான மற்றும் மறைமுகமான பிரச்சாரங்கள் அனைத்தும் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் விரோத பிரச்சாரங்களாகவே இருந்தது,
அவ்வாறான நிலையில் அவர்கள் விரும்பி முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்ற பிரதிநிதிகளாக்க முன்வருவர் என்பது நகைப்புக்குரியது ,
அவ்வாறு அவர்களோ அல்லது ஆளும் ஜனாதிபதியோ நினைத்து இருந்தால் தற்போதைய அமைச்சரவையில் அல்லது பிரதியமைச்சுக்களிலாவது தங்களை தேர்தலில் ஆதரித்த முஸ்லிம் தரப்பில் இருந்தாவது யாராவது ஒருவரை பெயருக்காகவாவது நியமித்து இருப்பர் ,
"தங்கள் தரப்புக்களில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகளாக நியமிக்க தகுதியானவர்கள் தற்போது யாரும் இல்லை'" என கடந்த மாதம் ஜனாதிபதி சொன்ன விடயம் உண்மை என்றால் இதுவரை தாங்களும் தலைவர்கள் தங்களது கட்சிகளும் முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற கட்சிகள் எனக்கூறி அவர்களை ஆதரித்த முஸ்லிம் தரப்புக்கள் யார் என்பதை ,
இந்த ஜனாதிபதியையும் அவரின் கட்சியையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்து முஸ்லிம் மக்களிடம் பிரச்சாரம் செய்து ஆரவரித்து இழுத்து திரிந்தவர்களே தங்களுக்குள் சுயமாக கேள்வி எழுப்பி "தாங்கள் தகுதி இல்லாதவர்களா "என முடிவு செய்து கொள்ள வேண்டும் ,
ஆனால் அதைப்பற்றி கேள்வி எழுப்ப வேண்டியவர்கள் இந்த ஜனாதிபதியை கடந்த தேர்தலில் எதிர்த்த நாங்களும் அல்ல ,ஆனால் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெளிவாகவே உள்ளோம் ,நாட்டு நடைமுறை தேர்தல் முறையும் ஆளும் அரசாங்கத்தின் கொள்கையும் அவர்களது ஆட்சி முறையும் நன்றாகவே சொல்கின்றன ,
அதுதான் யாராவது ஒருவராவது பாராளுமன்ற பிரதிநிதியாக முஸ்லிம் வாக்குகளால் எந்த மாவட்டங்களிலாவது தெரிவாக வேண்டுமானால் அது SLMC கட்சியால் அல்லது அது சேர்ந்து கூட்டணி அமைக்கும் கட்சிகளின் கூட்டணியால் மாத்திரம் தான் என்று ,
நாங்கள் ஏன் இந்த ஆட்சியாளர்களின் கட்சியையும் அதன் வேட்பாளரையும் கடந்த தேர்தலில் ஆதரிக்கவில்லை என்பதற்கான சிறந்த காரணங்களை தற்போது பள்ளி வாசல் சிலை வைப்பு ,மற்றும் அதை அகற்ற மறுக்கும் விவகாரம் ,அதே போன்று முஸ்லிம் விவாகரத்து தனியார் சட்ட நீக்க விடயம் ,அதே போன்று விஜயதாச ராஜபக்சவின் வெட்டுப்புள்ளி விவகார விடயங்கள் காண்பிக்கின்றன ,
இதை விட தெளிவான காரணங்களை நாங்கள் அவர்களுக்கு கூற வேண்டியதே இல்லை ,ஆனால் இவ்வாறான நிலைமைகளை மாற்றி தாங்களும் ஏனைய முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்களை அவர்களின் கட்சிகளை ஆதரிக்க மக்களை இனிமேல் கோருவதென்றால் இவர்கள் நடைபெற்று கொண்டிருக்கும் விடயங்களுக்கு அவர்களாக முற்றுப் புள்ளி வைத்து தங்களை ஆதரித்த முஸ்லிம் தரப்பையாவது கௌரவிக்காத வரையில் அவர்களது பாடு திண்டாட்டம் தான் ,
ஏனெனில் இந்த ஆட்சியாளர்களை இனிமேல் ஆதரிக்கும் முஸ்லிம் தரப்புக்கு தாங்கள் இவர்களை ஆதரித்ததன் மூலம் சாதித்தவை இவை தான் என மக்களிடம் சொல்லி அவர்களுக்கு வாக்கு கேட்க எந்த சரக்கும் இதுவரை அவர்களிடம் இல்லை .
Shm firthows
முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்றால் அது SLMC யால் மாத்திரமே ,ஏனைய கட்சிகள் செல்லாக் காசுகள்தான் .
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 15, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 15, 2020
Rating:

கருத்துகள் இல்லை: