Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கோட்டாபயவும் என்னைப்போல் மாறிவிடுவார் - மைத்ரி



ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால், நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

" ஆறு அரை மாதங்களுக்கு முன்பு மக்களால் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது கோட்டாபய ராஜபக்ஷ. அவரை ஜனாதிபதியாக தேர்ந்தேடுத்தது மொட்டு சின்னத்தில் பொதுஜன பெரமுன.

தற்போதைய ஜனாதிபதியைத் தவிர வேறு கட்சிக்கு நாடாளுமன்றத்தின் அதிகாரம் சென்றால் நாட்டுக்கு என்ன நேரிடும்? நாடு நெருக்கடியில் உள்ளது. இது எனக்கு கிடைத்த சிறந்த அனுபவம். ஒரு நாட்டின்  தலைவராக நான் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நாட்டைச் சுமந்தேன், அதில் பெரும்பகுதியை நாடாளுமன்றத்தின் அதிகாரமின்றி செலவிட்டேன். எனது பிரதமர் மற்றும் அமைச்சரவையில் பெரும்பான்மை எனக்கு சொந்தமில்லை.

அந்த சூழ்நிலையில் ஏராளமான மோதல்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நாட்டு மக்களுக்காகவும், நாளை பிறக்கும் குழந்தைகளுக்காகவும் நாடு காப்பாற்றப்பட வேண்டும். இது அரசாங்கம் யாருடையது என்ற பிரச்சனை இல்லை. எந்த நிறம் என்ற பிரச்சனையில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபயவும் என்னைப்போல் மாறிவிடுவார் - மைத்ரி Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 14, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.