Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து களுகல் ஓயா நீர் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

புளுக்குணாவி குளநீரை நம்பிய சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து களுகல் ஓயா நீர் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான பட்டிப்பளை பிரதேச புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்தமாதம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிரமுயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத்தொடர்ந்து


களுகல் ஓயா சமூத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நவகிரி குளத்தில் இருந்து தற்போது புளுக்குணாவி குளத்திற்கு வந்த நீர் விவசாயிகளின் விழைநிலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பிரதேச பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பிரிவிற்கு தெரிவித்தார்.


வரலாற்றில் பிறமாவட்டத்தில் இருந்து நீர் பெற்றுக்கொடுத்தமை என்பது இது தான் முதல்த்தடவை என்றும் இது முழுக்க முழுக்க அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் அயராதமுயற்ச்சி என்றும் பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் பாராட்டுத்தெரிவித்தார்.



புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயம் செய்கை பண்ணப்படவேண்டிய இரண்டாயிரத்திதொலாயிரத்தி என்பது (2980) ஏக்ருக்கான அனுமதிமாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் அதற்குமேலதிகமாக ஜநூறு (500) ஏக்கர்களை செய்கை பண்ணப்பட்டதினால் குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் போதுமானதாக இல்லாத காரனத்தினால் மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்து நீரை பாவிப்பதுதொடர்பாக மத்திய நீர்ப்பாச நிணைக்களத்துடன் உரையாடியபோது பிரதிப்பணிப்பாளர் எம்.வி.எம்.அசார் நவகிரி கன்ட விவசாயிகளுக்கு போதுமான நீர்மாத்திரம் தங்களிடம் உள்ளதினால் புளுக்குணாவி விவசாயிகளுக்கு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததைத்தொடர்ந்து மாற்றுவளி ஒன்று தேவைப்பட்டது.


அதன் அடிப்படையில் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் உரையாடலை மேற்கொண்ட மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தொடந்து நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நயகத்தின் அனுமதியுடன் மத்திய மாகாண பணிப்பாளர்களுடனும் உரையாடி விவசாயிகளின் விளைநிலங்களை அழிந்து பொகாது பாதுகாத்துள்ளமையை விவசாய பொதுமக்களும் பாரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இன்று முதலை மடுக்கன்டம் வாழைக்காலை மாவடியுன்மாறி ஆலையடியுன்மாரி ஆகிய கன்டங்களுக்கு களுகல் ஓயாவில் இருந்து 1500 ஏக்கர் அடி நீர் நவகிரிக்கு அனுப்பபட்டு தற்போது புளுக்குணாவி குளத்தில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.


உணவு உற்பத்தியினை பாதுகாத்தல் உணவு உற்பத்தியினை ஊக்கப்படத்தல் எனும் அடிப்படையில் முயற்சி எடுத்த அம்பாறை மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள் மத்திய மாகாண நீர்பாசண திணைக்கள பணிப்பாளர்கள் மத்திய நீர் பாசண திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரதேச செயலாளர்கள் பொறியலாளர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் ஆகியோரும் பாறாட்டப்படவேண்டியவர்கள் என பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து களுகல் ஓயா நீர் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 07, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.