Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது ஏன்?

விசாரணைகள்மூலம் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கொழும்பில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் மேற்படி தெளிவுபடுத்தலை வழங்கினார்.

“ அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று காலை 7.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

இதற்கமைய வெளியாகியுள்ள உறுதியான சாட்சிகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்படுவார்.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது ஏன்? Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.