• Home
  • About Us
  • Contact Us
KR TV LANKAN VOICE

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home political கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தை

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தை

www.lankanvoice.lk மார்ச் 10, 2026 political

2026 மார்ச் 09 முதல் 11ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தினார்.

அதற்கமைய, மார்ச் 09ஆம் திகதி பிரதமர், பிலிப்பைன்ஸ் கல்விச் செயலாளர் Sonny Angara அவர்களுடன் கலந்துரையாடினார். கல்விக் கொள்கை, ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல்மய கற்றல் முன்முயற்சிகள் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட, கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் போன்ற இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் குறித்தும் பிரதமர் பிலிப்பைன்ஸ் தரப்பிற்கு விளக்கமளித்தார்.



அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் உயர்கல்வி அதிகாரசபையின் (CHED) தலைவர் கலாநிதி Shirley C. Agrupis தலைமையிலான தூதுக்குழுவினரைப் பிரதமர் சந்தித்துப் பேசினார். ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்விசார் கூட்டுறவு, மாணவர் மற்றும் விரிவுரையாளர் பரிமாற்றம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளினதும் உயர்கல்வி மேம்பாடு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மற்றொரு சந்திப்பில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அதிகாரசபையின் (TESDA) செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான Jose Francisco B. Benitez அவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு, நிறுவன ரீதியான கூட்டுறவு மற்றும் தொழிலாளர் செயற்பாட்டினை மேம்படுத்தும் வகையில் தகைமைக் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பேண்தகு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்கு ஆதரவாகக் கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளினதும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தின.

இலங்கைத் தூதுக்குழுவில் பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சாணக்க தல்பாஹேவா, பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பி.எச். பியுமி பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு


கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தை Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 10, 2026 Rating: 5

Tags :

political
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

political

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விசேட சுற்றறிக்கை.
    இலங்கைவாழ் உலமாக்கள்  ஜும்மா பிரசங்கத்தின் போது நடுநிலை பேணுதல், மற்றும் நாட்டின் நலன் கருதி செயற்படல் தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள...
  • காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹம்ஸா கலீல் மீது சரமாரி தாக்குதல்
      காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹம்ஸா கலீல் மீது சரமாரி தாக்குதல் காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஹம்ஸா கலீல் அவர்கள்...
  • மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் அர்ப்பணிப்பு மிக்க சமூகப் பணியாளர்களுக்கு கௌரவம்!!
    மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் அர்ப்பணிப்பு மிக்க சமூகப் பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு அ...
  • காத்தான்குடி - தேசிய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு “உண்மையின் ஒளிக்குரல்” உயர்விருது வழங்கி கௌரவிப்பு!
    தேசிய ஊடகங்களில் பணியாற்றி வரும் காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்கள் “உண்மையின் ஒளிக்குரல்” எனும் உயர்விருதால் கௌரவிக்கப்பட்டுள்ள...

Recent Posts

சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் ஹஜ் யாத்திரிகர்களுக்கான மருந்து அனுமதி வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது

 சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் ஹஜ் யாத்திரிகர்களுக்கான மருந்து அனுமதி வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது ஹஜ் யாத்திரையின் போது தனிப்பட்ட பயன்...

Interested

  • இக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.
    சிரேஷ்ட சட்டத்தரணி  MIM.அஸ்வர்  எமது நாட்டின்  இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...
  • இரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை
    இரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...
  • ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை
    (பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...
  • பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.
    நடைபெற  இருக்கின்ற பாராளுமன்றத்  தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...
All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.