Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு; 4000 வீடுகள் மக்கள் வசம் ஒப்படைப்பு


 இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு; 4000 வீடுகள் மக்கள் வசம் ஒப்படைப்பு

இலங்கை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (IHP) மூன்றாம் கட்டம் இன்று (19) உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்த பாரிய திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் ஏற்கனவே 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்டத்தின் கீழ் 4000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 பரவல் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் ஒரு வீட்டுக்கான நிதியை 2.8 மில்லியன் ரூபாவாக அதிகரித்ததன் மூலமே இத்திட்டம் வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளது. இதன் இறுதி அங்கமாக, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் எஞ்சியிருந்த 145 வீடுகளை, இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று நிகழ்நிலை (Virtual) ஊடாக மக்களிடம் கையளித்தார். அதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதிக்கமைய, மேலதிக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் நான்காம் கட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
ඉන්දීය නිවාස ව්යාපෘතියේ තුන්වන අදියර අවසන්; නිවාස 4000ක් ජනතා අයිතියට
කඳුරට වතුකරයේ ඉන්දීය රජයේ ආධාර මත ක්රියාත්මක වූ ඉන්දීය නිවාස ව්යාපෘතියේ තුන්වන අදියර අද (19) නිල වශයෙන් අවසන් කරන ලදී. වතුකරයේ නිවාස 60,000ක් ඉදිකිරීමේ අරමුණින් ක්රියාත්මක මෙම වැඩසටහනේ මුල් අදියර දෙක යටතේ නිවාස 46,000ක් දැනටමත් නිම කර ඇත.
ඌව, මධ්යම සහ දකුණු පළාත් කේන්ද්ර කරගනිමින් ක්රියාත්මක වූ තුන්වන අදියර යටතේ නිවාස 4000ක් ඉදිකර තිබේ. කොවිඩ්-19 සහ ආර්ථික අර්බුදය හමුවේ මතුවූ බාධක මධ්යයේ ඉන්දීය රජය එක් නිවසක් සඳහා වූ පිරිවැය රුපියල් මිලියන 2.8ක් දක්වා ඉහළ නැංවීම හේතුවෙන් මෙම අදියර සාර්ථකව අවසන් කිරීමට හැකි විය. ඒ අනුව මෙහි අවසන් අදියර ලෙස ගාල්ල සහ මාතලේ දිස්ත්රික්කවල ඉදිකළ ඉතිරි නිවාස 145, ශ්රී ලංකාවේ සංචාරයක නිරත ඉන්දීය උප ජනාධිපති සී.පී. රාධක්රිෂ්ණන් මහතා විසින් අද මාර්ගගත ක්රමය ඔස්සේ ජනතා අයිතියට පත් කරන ලදී. ඉන්දීය අග්රාමාත්ය නරේන්ද්ර මෝදි මහතාගේ පොරොන්දුව පරිදි තවත් නිවාස 10,000ක් ඉදිකිරීමේ සිව්වන අදියරේ කටයුතු ද මේ වන විට ආරම්භ කර ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Third Phase of Indian Housing Project Completed; 4,000 Houses Handed Over
The third phase of the Indian Housing Project (IHP), carried out by the Indian government in the up-country plantation areas, was officially concluded today (19). As part of a larger initiative to construct 60,000 houses, the first two phases have already seen the completion of 46,000 homes.
The third phase focused on the Uva, Central, and Southern provinces, resulting in 4,000 houses. Despite the challenges posed by COVID-19 and the economic crisis, the successful completion was made possible after the Indian government increased the funding per house to Rs. 2.8 million. Consequently, the remaining 145 houses in the Galle and Matale districts were virtually handed over today by Indian Vice President C.P. Radhakrishnan. Notably, the fourth phase to construct an additional 10,000 houses, as pledged by Prime Minister Narendra Modi, is already underway.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு; 4000 வீடுகள் மக்கள் வசம் ஒப்படைப்பு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 19, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.