Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஊடகப் பயிற்சி நெறிக்காக இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் துருக்கி பயணம்

 


ஊடகப் பயிற்சி நெறிக்காக இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் துருக்கி பயணம்,

இலங்கை முஸ்லிம் மீடியா ப.ரத்தின் (SLMMF) பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஊடகவியலாளர் குழுவொன்று ஒரு வார கால விசேட பயிற்சி நெறியில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை துருக்கி நோக்கிப் பயணமானது. துருக்கியின் அங்காராவில் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 'இலங்கை புதிய தலைமுறை ஊடகவியல் பயிற்சித் திட்டத்தில்' (Sri Lankan New Generation Journalism Training Program) இவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையத்தின் (TİKA) நிதி அனுசரணையில், சர்வதேச புகழ்பெற்ற TRT World நிறுவனம் இந்தப் பயிற்சிகளை வழங்கவுள்ளது. நவீன ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை ஊடகவியலாளர்களின் ஆளுமையை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதே இதன் பிரதான நோக்கமாகும். முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகப் போஷகர் என்.எம். அமீன் மற்றும் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் ஆகியோரின் விசேட கோரிக்கைக்கு அமைய, இலங்கைக்கான துருக்கியத் தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் இதற்கான முழுமையான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
தகுதியின் அடிப்படையிலேயே இந்தப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ், தமது உறுப்பினர்களுக்கு இவ்வாறான சர்வதேச அனுபவங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். பயணத்திற்கு முன்னதாக ஊடகவியலாளர் குழுவைச் சந்தித்த துருக்கியத் தூதுவர், இந்தப் பயிற்சி நெறி அவர்களது ஊடகப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைய வாழ்த்துத் தெரிவித்தார்.
கே ஆர் டி வி நெட்වொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்


මාධ්ය පුහුණු පාඨමාලාවක් සඳහා ශ්රී ලංකා මුස්ලිම් මාධ්ය සංසදයේ නියෝජිත පිරිසක් තුර්කිය බලා පිටත්ව යයි
ශ්රී ලංකා මුස්ලිම් මාධ්ය සංසදයේ (SLMMF) සාමාජිකයින් දස දෙනෙකුගෙන් යුත් මාධ්යවේදීන් පිරිසක් සතියක විශේෂ පුහුණු පාඨමාලාවක් සඳහා අද අලුයම තුර්කිය බලා පිටත්ව ගියහ. තුර්කියේ අන්කාරා නුවර අප්රේල් 20 සිට 24 දක්වා පැවැත්වෙන 'ශ්රී ලංකා නව පරපුරේ මාධ්ය පුහුණු වැඩසටහන' සඳහා මොවුන් සහභාගී වීමට නියමිතය.
තුර්කි සහයෝගිතා සහ සම්බන්ධීකරණ නියෝජිතායතනයේ (TİKA) අනුග්රහයෙන් TRT World ආයතනය විසින් මෙම පුහුණු වැඩසටහන ක්රියාත්මක කරනු ලබයි. ශීඝ්රයෙන් වෙනස් වන මාධ්ය ක්ෂේත්රයේ නව ප්රවණතා සහ අභියෝගවලට ගැළපෙන පරිදි ශ්රී ලාංකික මාධ්යවේදීන්ගේ වෘත්තීය නිපුණතා නැංවීම මෙහි අරමුණයි. මුස්ලිම් මාධ්ය සංසදයේ නිර්මාතෘ එන්.එම්. අමීන් සහ සභාපති එම්.පී.එම්. පයිරුස් යන මහත්වරුන්ගේ ඉල්ලීමකට අනුව ශ්රී ලංකාවේ තුර්කි තානාපතිවරයා මෙහි සම්බන්ධීකරණ කටයුතු සිදු කර ඇත.
විවෘත අයදුම්පත් කැඳවා සුදුසුකම් මත පදනම්ව මෙම පිරිස තෝරාගෙන ඇති බවත්, තම සාමාජිකයින්ට ජාත්යන්තර අත්දැකීම් ලබා දීමට සංසදය සැමවිටම කැපවන බවත් එහි සභාපති පයිරුස් මහතා මෙහිදී ප්රකාශ කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
SLMMF Delegation Departs for Turkey for New Generation Journalism Training
A ten-member delegation from the Sri Lanka Muslim Media Forum (SLMMF) departed for Turkey early this morning to participate in a week-long specialized media training program. The group will take part in the 'Sri Lankan New Generation Journalism Training Program,' scheduled to be held in Ankara from April 20th to 24th.
The initiative is implemented by TRT World and sponsored by the Turkish Cooperation and Coordination Agency (TİKA). This program aims to enhance the professional expertise of Sri Lankan journalists, keeping pace with the rapidly evolving trends and global challenges in the media landscape. The opportunity was secured following a request by SLMMF Founding Patron N.M. Ameen and President M.P.M. Fairooz, with the arrangements facilitated by the Turkish Ambassador to Sri Lanka, Semih Lütfü Turgut.
SLMMF President M.P.M. Fairooz stated that the representatives were selected through a transparent application process based on merit. He emphasized the forum's commitment to providing international exposure and advanced training to its members to navigate the shifts in modern journalism effectively.
KR TV Network
KR TV Lankan Voice
ஊடகப் பயிற்சி நெறிக்காக இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் துருக்கி பயணம் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 19, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.