Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நாட்டின் பல பாகங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை


நாட்டின் பல பாகங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை; வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு

இன்றைய தினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

දිවයිනේ ප්‍රදේශ කිහිපයකට පස්වරු 1.00 න් පසුව වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි; කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවෙන් නිවේදනයක්

අද (අප්‍රේල් 16) දිනයේ බස්නාහිර, සබරගමුව, දකුණ, මධ්‍යම, ඌව සහ වයඹ පළාත්වල පස්වරු 1.00 න් පසු තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවිය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව පවසයි. බස්නාහිර සහ දකුණු පළාත්වලත් පුත්තලම දිස්ත්‍රික්කයේත් වෙරළබඩ ප්‍රදේශවල උදෑසන කාලයේදී වැසි ස්වල්පයක් ඇතිවිය හැක.

සබරගමුව පළාතෙත් ගාල්ල, මාතර, මහනුවර සහ නුවරඑළිය දිස්ත්‍රික්කවලත් ඇතැම් ස්ථානවලට මි.මී. 50 ට වැඩි තරමක තද වැසි ඇති විය හැකි බව එම දෙපාර්තමේන්තුව වැඩිදුරටත් සඳහන් කරයි. දිවයිනේ සෙසු ප්‍රදේශවල ප්‍රධාන වශයෙන් වැසි රහිත කාලගුණික තත්ත්වයක් පවතී. ගිගුරුම් සහිත වැසි සමග ඇතිවිය හැකි තාවකාලික තද සුළං වලින් සහ අකුණු මඟින් සිදු වන අනතුරු අවම කර ගැනීමට පියවර ගන්නා ලෙස ජනතාවගෙන් ඉල්ලා සිටිනු ලැබේ.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Showers or Thundershowers Expected in Several Provinces After 1:00 PM; Met Department Issued Forecast

Showers or thundershowers are expected to occur at several places in the Western, Sabaragamuwa, Southern, Central, Uva, and North-western provinces after 1:00 PM today (April 16), according to the Department of Meteorology. Coastal areas of the Western and Southern provinces and the Puttalam district may experience a few showers during the morning hours as well.

Fairly heavy falls above 50 mm are likely at some places in the Sabaragamuwa province and in the Galle, Matara, Kandy, and Nuwara-Eliya districts. Misty conditions may prevail in several provinces including Central and North-central during the early hours. The general public is advised to take necessary precautions against localized strong winds and lightning during thundershowers to minimize potential damages.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
நாட்டின் பல பாகங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.